April 05, 2019

முஸ்­லிம்களாகிய நாம், ஒரு நோயாளர் போன்று இருக்­க­வேண்­டி­ய­தில்லை - இம்­தியாஸ்

சிங்­கள பௌத்த மக்களில் பெரும்­பான்­மை­யினர் இன­வா­தி­களோ மத­வா­தி­களோ அல்லர். அவர்கள் பௌத்த மதக் கோட்­பா­டு­க­ளின்­படி ஏனைய இனங்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்­கி­றார்கள். நான் பயிலும் காலத்தில் பாட­சா­லையின் பெரும்­பான்மை மாண­வர்கள், நூற்­றுக்கு 5 வீத­மா­னோரே என்னைத் ‘தம்­பியா’ என்று அழைத்­தார்கள். 95 வீத­மானோர் என்னை அவ்­வாறு அழைக்­க­வில்லை. என்­னுடன் அவர்கள் நல்­லு­ற­வுடன் பழ­கி­னார்கள் என முன்னாள் ஊடக அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார்.

பேரு­வளை ஜெம்­போ­ரியா மண்­ட­பத்தில் நடை­பெற்ற மேல் மாகாண ஜமா­அத்தே இஸ்­லாமி இளைஞர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; மக்­க­ளுக்கு உத­விகள் செய்­ப­வரை இறைவன் மிகவும் நேசிக்­கிறான் என நபிகள் நாயகம் கூறி­யுள்­ளார்கள். நபி­க­ளாரின் வாழ்க்கை முறை பொறுமை என்­பன ஒருவர் ஏனைய மக்­க­ளுடன் எவ்­வாறு நடத்­து­கொள்ள வேண்டும் என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளன. இஸ்லாம் இதையே எமக்குப் போதித்­துள்­ளது.

முஸ்­லிம்கள் போதைப்­பொ­ருளைக் கொண்டு வரு­வ­தாகக் கூறு­கி­றார்கள். எல்லா சமூ­கத்­திலும் இவ்­வா­றா­ன­வர்கள் இருக்­கக்­கூடும். எமது நன்­ன­டத்­தைகள் மூலம் நாம் அவ்­வா­றா­ன­வர்கள் இல்லை என்­பதை நிரூ­பிக்க வேண்டும். நாம் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­க­ளு­டனே வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். எமக்குள் ஒற்­றுமை, சகோ­த­ரத்­துவம் நில­வ­வேண்டும்.

நான் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரி­யி­லேயே பயின்றேன். அக்­கல்­லூ­ரியின் பழைய மாணவன் நான். நான் ஒரு முஸ்லிம் என்று அப்­பா­ட­சா­லையில் இனம் காணப்­ப­ட­வில்லை. 14 வரு­டங்­க­ளாக அக்­கல்­லூ­ரியின் ஹொக்கி அணிக்கு தலை­மைத்­துவம் வழங்­கி­யவன் நான். சிங்­கள மக்­களில் பெரும்­பான்­மை­யினர் இன­வா­தி­களோ அல்­லது சம­ய­வா­தி­களோ அல்லர்.

நான் பாட­சாலை மாணவர் விடு­தியின் பிர­தம மாணவர் தலை­வ­னாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தேன். பாட­சா­லையில் பெரும்­பான்­மை­யாக சிங்­கள மாண­வர்கள் இருந்­த­போதும் கூட நான் மாணவர் தலை­வ­னாக நிய­மிக்­கப்­பட்டேன். தப்­ப­பிப்­பி­ராயம் மற்றும் சந்­தேகம் நாங்கள் கிணற்றுத் தவ­ளை­க­ளாக இருப்பதா­லேயே ஏற்­ப­டு­கி­றது. எங்­க­ளது செயற்­பா­டுகள் நடத்­தைகள் மூலம் நாம் நல்­லி­ணக்­கத்­துக்­கான செய்­தியை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கலாம். முஸ்­லிம்கள் நாம் சமூ­கத்தில் ஒரு நோயாளர் போன்று இருக்­க­வேண்­டி­ய­தில்லை. அனைத்து விட­யங்­க­ளிலும், தேசிய நிகழ்­வு­க­ளிலும் எங்­க­ளது பங்­க­ளிப்­பினை வழங்­க­வேண்டும்.

அன்று எங்கள் முஸ்லிம் பெண்கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளியே வரு­வ­தில்லை. ஐக்­கிய நாடு­களின் மாநாட்­டுக்குச் சென்றால் இது­பற்றி வின­வு­கி­றார்கள். இஸ்லாம் என்றால் என்ன. இஸ்­லா­மிய கோட்­பா­டுகள் என்ன என்­பதை எங்கள் நடத்­தைகள் மூலம் ஏனை­யோ­ருக்கு புரி­ய­வைக்­க­வேண்டும். ஜன­நா­யக ரீதி­யான பிரச்­சி­னை­களின் போதும் தேசிய பிரச்­சி­னை­களின் போதும் முஸ்­லிம்கள் முன்­னிலை வகித்­தி­ருக்கி றார்கள். இதற்கு சிறந்த உதா­ரணம் ரி.பி. ஜாயா அவர்கள் எமது நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்­துக்கு அவர் பங்­க­ளிப்புச் செய்தார். தமிழ்த் தலை­வர்கள் 50 இற்கு 50 கோரிய போது எந்­த­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி சுதந்­தி­ரத்­துக்­காக ஒத்­து­ழைப்பு வழங்­கினார்.

நான் அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்கிக் கொள்­ள­வில்லை. தேர்­தலில் போட்­டி­யி­டாம லிருப்­பதே ஒரு­மாற்­ற­மாகும். நீண்ட கால­மாக அமைச்சுப் பத­வி­களை வகித்தேன். இன்­னு­மொ­ரு­வ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­க­வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே தவிர்த்­தி­ருக்­கிறேன்.

எமது நாட்­டுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­களே பொருத்­த­மா­னது என நான் நம்­பு­கிறேன். ஜன­நா­யக அர­சியல், தேசிய ஒற்­றுமை, சமூக ஒற்­றுமை ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் இருக்­கி­றது என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் எனக்குப் பிரச்சினை இருக்கிறது. அது கொள்கை ரீதியான பிரச்சினை. தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நான் முரண்பட்டுக்கொண்டும் பின்பு நண்பர்களாகிக் கொண்டும் கட்சிக்குள்ளேயே இருக்கிறேன்.

டட்லி மற்றும் பிரேமதாசாக்களின் கொள்கைளுக்கு நான் உடன்படுகிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் நான் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கிறேன் என்றார்.
-Vidivelli

2 கருத்துரைகள்:

He has conveniently failed to mention his privilege been the son of a prominent politician. Can an ordinary Muslim boy achieve this, I doubt it.

Imthiyas through his speeches, used to mesmerize a certain group of people to remain in their good books, his talks are good for reconciliation but its outreach is way too short. It looks like Ranil purposefully sidelined Imthiyas in politics, there must be a sinister motive from Ranil or his camp to do so.

Post a Comment