Header Ads



பெற்ற தாயை, தேடும் ரம்யா - சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்துபோது மேலுமொரு சோகம்

சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண், தன்னைப் பெற்ற தாய் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்த போது அவருக்கு அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சூரிச்சில் வாழும் ஒலிவியா ரம்யா டர்னருக்கு இலங்கைக்கு சுற்றுலா செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, தன்னைப் பெற்ற தாயை சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பாகவே அதை கருதி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

தான் இலங்கைக்கு செல்வதற்கு முன், ஒரு தனியார் துப்பறிவாளரை ஏற்பாடு செய்து தனது தாயைக் கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ரம்யா இலங்கைக்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குமுன் அந்த துப்பறிவாளர் ரம்யாவை அழைத்தார்.

அவரது தாயைக் குறித்த எந்த தகவலையும் தன்னால் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதை கூறுவதற்காகவே ரம்யாவை அழைத்ததாக அவர் கூற, ரம்யா ஏமாற்றம் அடைந்தார்.

இலங்கை வந்ததும் முதல் வேலையாக, தான் பிறந்த ரத்னபுரா பொது மருத்துவமனைக்கு சென்ற ரம்யா, அங்கிருந்து ஏதாவது தகவல்களைப் பெற முடியுமா என்னும் முயற்சியில் இறங்கினார்.

அங்கே ரம்யாவிற்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அது ரம்யாவின் பிறப்புச் சான்றிதழ் போலியானது என்ற செய்திதான்!

ரம்யா ரத்னபுரா பொது மருத்துவமனையில் பிறக்கவில்லை என்று தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், அவர் வைத்திருக்கும் பிறப்புச் சான்றிதழ் போலியானது என்றும் தெரிவித்தது.

ரம்யா என்னும் தனது பெயரும் கூட போலியானதாக இருக்கலாம் என்ற தகவல் கிடைக்க, ரம்யா தளர்ந்துபோனார்.

பின்னர்தான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது, 1980, 90களில் கடத்தப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவராக இருக்கலாம் என்பதுதான் அது.

நெதர்லாந்து தொலைக்க்காட்சி ஒன்று கண்டுபிடித்த தகவல்களின்படி, இலங்கையிலிருந்து அந்த கால கட்டத்தில் ஏராளமான குழந்தைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டும், சில தாய்மார்களிடமிருந்து பறிக்கப்பட்டும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்பட்டிருந்தார்கள்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், எப்படி ரம்யாவைப்போல பல குழந்தைகள் தங்களைப் பெற்ற தாய்மார்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ, அதேபோல், இலங்கையில் பல தாய்மார்கள் தங்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட, தத்துக் கொடுக்கப்பட்ட தங்கள் குழந்தைகள், சுமார் 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் நன்றாக இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்து விடாதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


1 comment:

Powered by Blogger.