Header Ads



தமிழர்களை பலியிட, மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாம் - சுமந்திரனுக்கு எச்சரிக்கை


கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் ​​தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், தான் ஓர் இலங்கையர் என்பதை, சுமந்திரன் மறந்துவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.  

இலங்கையில் நீதிப்பொறிமுறை ஒன்று உள்ளதால், அரசமைப்புக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், அரசமைப்புப் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.  

நீதித்துறையில் பேராசிரியராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய நூல்களைக் கற்றே, சுமந்திரன் பரீட்சையில் சித்தியடைந்தார் என்றும், எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.  

இவ்வாறான நிலையில், மீண்டும் கலப்பு நீதிமன்றக் கோரிக்கையை முன்வைப்பது, இந்நாட்டுத் தமிழ் மக்களைப் பலியிடுவதாகவே அமையுமெனவும், அதனால் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாமென, சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

5 comments:

  1. டிலான் பெரேரா எம்.பி. இலங்கை வௌிநாட்டுப்பணியகத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தும் பாணியில் களவாடிய கோடான கோடி அப்பாவி பணிப் பெண்களின் பணத்தைத்திருப்பிக் கொடுக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டால் எந்த கறுப்பு ஜூலை சம்பவங்களும் தொடராது.

    ReplyDelete
  2. Threatening Minority...

    Do not tell the world about the mistake we did on you..

    ReplyDelete
  3. எந்த உலகத்திலடா இவன் இருக்கிறான். இனி புலி பூச்சாண்டி விடடால் சிங்களவனே செருப்பை சாணியில் முக்கி அடிப்பான். மகிந்தருக்கும் அதே கதி தான் நடந்தது 2015இலே. ஏற்கனவே ஜெனீவா தீர்மானத்தை நடைமுறை படுத்த முடியாமல் இலங்கையே தடு மாறுகின்றது. அதுக்குள்ளே கருப்பு ஜுலை ஒன்று திட்டமிட்டு நடாத்தும் அளவுக்கு இலங்கை அரசுக்கு தில் இல்ல. மீறி அவ்வாறு நடந்தாலும் அது தமிழரின் தனி நாடு கோரிக்கைக்கு வலுவான ஒரு அம்சமாக அமையும். இதே போன்றதொரு கலவரம் நடக்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை.

    ReplyDelete
  4. இப்போது உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிகவும் கண்டிப்பானவர். கோத்தபாய ஜனாதிபதி ஆவதை தடுக்க சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்கா முன்னின்று உழைக்கும் சாத்தியம் உள்ளது. இலங்கை நீதிபதிகள் இடம்பெறும் கலப்பு நீதிமன்றத்தை சிங்களவர்களும் விரும்பாத காரணத்தால் விட்டுவிட வேண்டும். சர்வதேச. விசாரணையே பொருத்தமானது.

    ReplyDelete
  5. Dilan if you have an issue with Sumanthiran or TNA you should pull Sumanthiran or TNA up for inquiry without playing the ethnic cleansing game. Even Daya Gamage & Pathali Champika, the other two racist devils are also playing the same game.

    ReplyDelete

Powered by Blogger.