Header Ads



சம்பிக்கவும் காணி பிடிக்கிறார் - வில்பத்துவை இனவாதமாக பார்ப்பதனால், சிலருக்குப் பிரச்சினையாகின்றது

அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் வில்பத்துவில் காணி பிடிப்பது மாத்திரம் ஏன் பிரச்சினையாக தெரிவதாகவும். ஹேமாகமவில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க காணி பிடிப்பது மாத்திரம் பிரச்சினையாக தெரிவதில்லையெனவும் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பின் தலைவர் லஹிரு சிறிமான்ன கேள்வி எழுப்பினார்.

வில்பத்து வனப் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.தம்மைப் பொருத்த வரை இரண்டும் தவறாகும்.இனவாதக் கண் கொண்டு பார்ப்பதனால்.வில்பத்து மாத்திரம் சிலருக்குப் பிரச்சினையாக தெரிகின்றது.இது தவறானது.

2030 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்து தேசிய பௌதீக வளத் திட்டம் என்ற ஒன்றை கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்துக்கு உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பன தொடர்புபட்டிருந்தது.இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு ஏற்ப, வில்பத்து வனத்தை வெட்டுவதற்கு வேண்டியிருந்தது.இதுதான் உண்மையான செய்தி.இந்த வில்பத்தை அழிக்கும் திட்டத்தை கொண்டுவந்தது கடந்த ராஜபக்ச அரசாங்கமே ஆகும் எனவும் அவ்வமைப்பின் தலைவர் லஹிரு சிறிமான்ன மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.