Header Ads



இலங்கையில் கர்ப்பமடையும் ஒரு, சகோதரிக்கு உள்ள உரிமைகள்

- Dr Aqil Ahmad Sharifuddeen -

ஒரு பெண் கருத்தரித்து விட்டால், அதாவது அவளது மாதப் போக்கு தடைப்பட்டதும் அவள் கர்ப்பத்துக்கான சலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் கர்ப்பம் தரித்திருப்பது உறுதி செய்யப் பட்டால்...

அப்பெண்ணின் வதிவிடப் பிரதேசத்துக்குப் பொறுப்பான midwife இற்கு அறிவித்து பிரதேச அல்லது அண்மையில் உள்ள அரச வைத்தியசீலை Antenatal clinic இல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Midwife குறித்துத் தரும் தினங்களில் கிரமமாக clinic க்குச் செல்ல வேண்டும்.

Clinic இல் பிரேரிக்கப்படும் பரிசோதனைகளை MOH office அல்லது அரச வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் 12வது வாரங்கள் பூரணமாவதற்கு முன்னர் கர்ப்பத்தின் நிலைமைகளை Dating Scan மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக antenatal clinic இல் doctor இனால் VOG க்கு தாயிடம் இருக்கும் clinic record இல் referral எழுதப்படும். இதனை VOG உள்ள அரச வைத்தியசாலையில் உள்ள மகப்பேற்றுப் பிரிவில் காண்பித்து scan செய்து கொள்ள வேண்டும்.
சிக்கல் நிலமைகள் ஏதும் அறியப்படுமிடத்து அந்தத் தாய் VOG இன் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுவார். இதற்காக மேற்கொண்டு VOG உள்ள அரச வைத்தியசாலையில் நடைபெறும் antenatal clinic இற்கு கிராமமாகச் செல்ல வேண்டும்.

சிக்கல் நிலமைகள் ஏதுமில்லை எனில் scan இனின் பின்னர் மீண்டும் வழமையான antenatal clinic இதற்குச் சென்று கிரமமான பராமரிப்பைப் பெற வேண்டும்.

கர்ப்பத்தின் 28ம் வாரமளவில் anomaly scan செய்து கொள்ள வேண்டும். இதற்காக dating scan செய்து கொள்ள முன்னர் பின்பற்றப்பட்ட அதே வழிமுறையே பின்பற்றப்படும்.

கருத்தரிப்பதும் பிரசவிப்பதுவும் உலகின் ஆதிப் பெண்முதல் நடக்கும் இயற்கையான ஒரு உயிர்த் தொழிற்பாடாகும். வளர்ந்து வரும் வைத்திய நிபுணத்துவம் கர்ப்பத்தின் இடர் நிலைமைகளைக் குறைத்துள்ளது. அதற்காக நிபுணத்துவமே மொத்தமும் அல்ல. நிபுணத்துவ ஒத்தாசையை புறக்கணிப்பதும், நிபுணத்துவத்தை நம்பி ஆலாப்பறப்பதும் இரு துருவ அறியாமைகளாகும்.

கர்ப்ப காலத்தில் மூன்று கர்ப்பகால வழிகாட்டல் கருத்தரங்குகள் நடைபெறும். MOH இனால் நடத்தப்படும் இக்கருத்தரங்குகளில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கர்ப்பவதிக்கும் போதிய போஷணையை வழங்குவதற்காக பிரதேச செயலகத்தினூடாக அரசு 20,000.00 ரூபாய்களை வழங்குகின்றது.

ஒரு பெண் கருத்தரித்தது முதல் கர்ப்பத்துடன் தொடர்பான அனைத்துப் பராமரிப்புக்களையும் அதற்கான செலவீனங்களையும் அரசு பொறுப்பேற்றலும் கொண்டுள்ளது. இந்தச் சேவையை நலன்களைப் பெற்றுக் கொள்வது இலங்கை குடிமக்களின் உரிமையாகும். அவற்றை உரிய முறையில் பிசகின்றி வழங்குவது உரியவர்களின் கடமையாகும்.


1 comment:

  1. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி Doctor Aaqil Ahamed

    ReplyDelete

Powered by Blogger.