Header Ads



தனிமையில் வாடும் சிறிசேன

முதுகெலும்பு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவை தனிமைப்படுத்தியுள்ளதாக கடுவலை முன்னாள் மேயர் ஜீ.எச்.புத்ததாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று -21- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் இணைந்து கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாகவும், எஸ்.பி.திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா போன்ற முதுகெலும்பு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வழங்குவதாக வாக்குறுதியளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டார்.

எனினும் ஜனாதிபதியை ஏமாற்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளதாகவும் ஜீ.எச்.புத்ததாச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இவர் முனாபிக் + காபிர் அவர் காபிர் + முனாபிக், வித்தியாசம் அவ்வளவுதான், இந்த இரு கரெக்டர்களும் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் அழிவையும் நாசத்தையும் தான் கொண்டுவருவார்கள்.

    ReplyDelete
  2. World will hear soon i.e a Veteran Sri Lankan politician committed suicide due to the political stress.

    ReplyDelete

Powered by Blogger.