Header Ads



முதலிடம் பெற்ற மாணவன் 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய அதிர்ச்சி சம்பவம்

கணனி கட்டமைப்புக்குள் இரகசியமாக பிரவேசித்து 5 மணி நேரத்தில் ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி, நிறுவனத்தின் உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய, தகவல் தொழிற்நுட்பம் பயின்று வரும் பல்கலைக்கழக மாணவனை, திருகோணமலை தலைமையக பொலிஸார் இன்று -29- கைது செய்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் கிளைகளை கொண்டுள்ள, திருகோணமலையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கணனி உதிரிப்பாகங்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றின் கணனி கட்டமைப்புக்குளேயே இந்த மாணவன் இரகசியமான முறையில் பிரவேசித்துள்ளார்.

இந்த மாணவனின் செயல் காரணமாக பிரித்தானியா, இந்தியா, இலங்கையில் இருக்கும் 36 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதால், மேற்படி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நிறுவனத்தின் உரிமையாளர் பாலகுமாரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர், கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொழிற்நுட்ப பாடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றிருந்ததுடன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிற்நுட்ப பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

சந்தேக நபரின் மூத்த சகோதரர் இந்த நிறுவனத்தில் தொழில் புரிந்து வருவதுடன் கணனி கட்டமைப்பு இரகசிய கடவுச்சொல்லை, சந்தேக நபருக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் மடிக்கணனியை பயன்படுத்தி இந்த குற்றத்தை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.