Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறை, முதன்முதலில் எழுதிய கதாநாயகன் MSA றஹீம்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம், சோனகத்  தெருவில் முஹம்மதுசுல்தான் – மரியம்பு ஆகிய தம்பதியினருக்கு 1941 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், முதலாம் திகதி அப்துல்றஹீம் மகனாகப் பிறந்தார். 

எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் முதலாம் ஆண்டு தொடக்கம் நான்காம் ஆண்டு வரை யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் ஐந்தாம் ஆண்டு தொடக்கம் எஸ்.எஸ்.சி. வரை வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியிலும் கல்வி பயின்றார். 

எஸ்.எஸ்.சி. சித்தியடைந்த பின்னர் அவருக்கு 1960 இல் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. பொலன்னறுவை மாவட்டத்தில் கல்லெல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார். 1961, 1962 ஆகிய இரண்டு வருடங்களிலும் அவர் கண்டி அரசினர் ஆசிரியர் கலாசாலையில், தமிழ்ப்பாடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியர்க்கான பயிற்சிகளைப் பெற்றார். 1963 இல் அவர் குருநாகல் மாவட்டத்தில் தெலியாக் கொன்ன முஸ்லிம் வித்தியாலயத்திலும் 1964 இல்பரகஹதெனியவேவுட முஸ்லிம் வித்தியாலயத்திலும், 1965 இல் மடிகேமிதியால முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றினார். 

எம்.எஸ்.ஏ. றஹீம் ஆசிரியர் அவர்கள் தான் ஆரம்பத்தில் கல்வி பயின்ற பாடசாலையான யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையில் 1965 தொடக்கம் ஆசிரியராக கடமையாற்றினார். எம்.எஸ்.ஏ. றஹீம் ஆசிரியர் யாழ். மஸ்றஉத்தீன் பாடசாலையில் ஆசிரியராகவிருக்கும் போது வெளிவாரிப்பட்டப்படிப்பின் மூலம் இளமாணி பட்டம் பெற்றபி ன்னர் 1969 இல் பெற்றார். 

இக்கால கட்டத்தில் 1969 இல் எம்.எஸ்.ஏ. றஹீம்அவர்கள் “யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும்” எனும் நூலை வெளியிட்டார். இரண்டாம் பதிப்பாக மேலதிகமாக 30-10-1990 இல் யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட துயரமான சம்பவங்களையும் உள்ளடக்கி 2008 ஆம் ஆண்டு தெஹிவளை ஜெயசிங்கமணடபத்தில் “யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும்பண்பாடும்” எனும் நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறை முதன் முதலில் எழுதியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் இளமாணிபட்டம் பெற்ற பின்னர் 1970 இல் மட்டுவில் தமிழ்மகாவித்தியாலயத்திலும் 1971, 1972 இல் யாழ். சென்ஜேம்ஸ் வித்தியாலயத்திலும் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றினார். இக் காலகட்டத்தில் தான் 05-12-1971 இல் எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் பிரதமகல்வி அதிகாரி இனனூன் அவர்களின் சகோதரிஜலீலா அவர்களை திருமணம் செய்தார். அப்துல்ரஹீம் – ஜலீலாஆகிய தம்பதியினருக்கு  2 பெண் பிள்ளைகளும் (ரொஸ்மின்றஸானா, ரொஸ்மின்ஹிஸாமா) 2 ஆண் பிள்ளைகளும் (றஹீம்ராஜி, முஹம்மதுசுல்தான்ஹிஸாம்) பிறந்தார்கள். அப்துல்ரஹீம் – ஜலீலாதம்பதியினருக்கு4 பிள்ளைகளும் 8 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 

யால். ஒஸ்மானியா கல்லூரியில் 1973 இல்பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றினார். 1974 இல் அவர் வவுனியா காக்கையன்குளம் முஸ்லிம்வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார்.

1975, 1976 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இரண்டாவது முறையாக யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். 1977 ஆம் ஆண்டு டிப்ளோமா பட்டப்படிப்பிற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

1978 தொடக்கம் 1985 வரை வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இளமாணி பட்டத்துடன் டிப்ளோமா கல்விச்சான்றிதழுடன் கூடிய ஆசிரியராக கடமையாற்றினார். இக் கால கட்டத்தில் 1983 முதல் யாழ்ப்பாணத்தில் ஜமா அதே இஸ்லாமியின் வெளியீடான “அல்ஜிஹாத்” எனும் மாதாந்த இதழின் பிரதம ஆசிரியராக எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் மௌலவி. சுபியான் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.  

1986 தொடக்கம் 1990 வரை யாழ்.வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். இக் கால கட்டத்தில் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றினார். அவர் 1990 ஆம் ஆண்டு யாழ். முஸ்லிம்கள் வெளியற்றப்பட்ட தன் பின்னர் 1991 ஆம் ஆண்டு மக்கொன அல்ஹஸனியா முஸ்லிம்வித்தியாலயத்திலும் 1992, 1993 ஆண்டுகளில் தர்ஹாடவுன்ஸாஹிரா கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றினார். 

எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் 1994 இல் மஹரகமதேசிய கல்வி நிறுவனத்தில் செயல் திட்ட அதிகாரியாக நியமனம் பெற்றார். அவர் 1996 இல் முதுமாணிபட்டம் பெற்றதும் பிரதம செயல் திட்ட அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது. இக் காலகட்டத்தில் காலியில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான கல்விமானியாளர்களுக்கு பகுதி நேரசிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இக் காலகட்டத்தில் 6 ஆம் ஆண்டு தொடக்கம் 11 ஆம் ஆண்டு வரை “தமிழ்மொழியும்இலக்கியமும்” எனும் பாடப்புத்தகத்தின் பிரதமபதிப்பாசிரியராக இருந்துள்ளார். 01-12-2001 இல் பிரதம செயற்திட்ட அதிகாரி பதவியிலிருந்தும் தனது அரச பணியிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

தினகரன் பத்திரிகையில் மதுகரன் எனும் புனைப் பெயரில் கவிதைத்துறையில் புகுந்த எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் ஏ.ஏ. லத்தீப் என்பவரை ஆசிரியராக கொண்ட “இன்ஸான்” இஸ்லாமிய இதழில் தனது முதல் சிறுகதையான “நானும்மனிதன்தான்” எனும் கதையை எழுதி அறிமுகமாகினார். தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். மல்லிகைமாத இதழ், சிந்தாமணிவாரஇதழ், தினகரன் வாரமஞ்சரியிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள்எல்லாம் சமுதாய அமைப்பு முறையில் ஒதுக்கப்படும் கதாபாத்திரங்களின் அவலநிலையும் அதற்கான காரணங்களையும் விளக்குவதாகவே இருந்தன. 

இலங்கையில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சிமா நாட்டின் சிறப்புமலரான பிறைக்கொழுந்தில் இவரது “இசைத்தமிழால் ஈழத்திலோர்இலக்கியம்” எனும் கட்டுரை வெளியானதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

தேசியகல் விநிறுவகத்தில் பிரதம செயல்திட்ட அதிகாரியாக விருந்தகாலத்தில் 1999 இல் இலங்கை கலாசாரதிணைக்களத்தினால் கலாபூஷணம் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார். 7

தற்போதுஎம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் தனது 77 வயது கடந்த நிலையில் சுகயீனமான நிலையில் தனது குடிம்பத்தாரோடு கிருலப்பனை எட்மெண்டன் தொடர்மாடியில் வசித்து வருகிறார். எம்.எஸ்.ஏ. றஹீம் அவர்கள் சுகமாக நீடூழிவாழ அல்லாஹ் விடம்பிரார்த்திப்போம். ஆமீன்.

1 comment:

  1. Iqbaal: Thanks for writing about some personnel"s life stories. This makes us ponder on many matters. For younger generations, these are exemplary.

    ReplyDelete

Powered by Blogger.