Header Ads



பசிலின் "B" பிளேன் - மகிந்த சம்மதிப்பாரா..?

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதை காட்டிலும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதையே இலக்காக பொதுஜன முன்னணி கொண்டு செயற்படுவதாகவும், அற்கே கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச தரப்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் தற்போதும் தெளிவான முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. ஆனால், கோத்தபாய ராஜபக்சவை களமிறக்கலாம் என்று ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டுவருகின்றன.

எனினும், கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறுபான்மை மக்களிடையே ஆதரவு இல்லை என்பதால் அது தொடர்பில் ஆராய வேண்டிய நிலைக்கு மகிந்த தரப்பினர் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், மகிந்த தரப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக தென்னிலங்கைத் தகவல்கள் சில கசிந்துள்ளன.

குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்கின்றன அத்தகவல்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் புரட்சியினால் அவர் சிறுபான்மை மக்களினதும் மட்டுமல்ல, தென்னிலங்கை மேல்தட்டு வர்க்கத்தினரின் வாக்கு வங்கியினையும் இழந்துள்ளார். இதனால் அவரினால் வெற்றி வாய்ப்பினை பெற்றுக் கொள்வது என்பது கடினமானதொன்றாக மாறியிருக்கிறது.

எனவே ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதை பசில் ராஜபக்ச விரும்பவில்லை என்பதை அறிய முடிகின்றது. ஒருவேளை மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினைத் தழுவிக் கொண்டால், நாடாளுமன்றத் தேர்தலை பாதிக்கும் என பசில் ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது.

பசில் ராஜபக்சவின் கணிப்பு இவ்வாறு இருக்க, கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மகிந்த ராஜபக்ச விரும்புவதாக மகிந்தவின் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், சிறிலங்கா பொதுஜன முன்னணி சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்லில் களமிறக்கப்படும் நபரின் வெற்றியைக் கொண்டே பொதுத் தேர்தலின் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்பதால் அதற்கான வியூகங்களை பசில் தரப்பினர் மேற்கொள்வதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
    (அல்குர்ஆன் : 4:107)

    ReplyDelete
  2. இரண்டு பெயருக்கும் சிறுபான்மையில் ஆதரவில்லை, புதிதாக சிந்தியுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.