December 17, 2018

எனக்கு ஒரு சிங்களப் பாடல், ஞாபகத்திற்க வருகிறது

-HAFEEZ-

கடந்த அக்டோபர் 26ம் திகதி பின்கதவால் பிரதமர் ஒருவர் நியமிட்டார். அதனை பொது மக்கள் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) ஊடாகவே அறிந்து கொண்டனர். உலகில் ஒரு நாட்டைத் தவிற எந்த ஒரு நாடும் எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் உருவாக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். (15.12.2018 மாலை)

உடுநுவர பிரதேச ஐக்கிய தேசிய கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து உiராயற்றும் போதே அவர் இதகைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் உருவாக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக் கொண்ட ஒரே நாடு புரூநாய் என்ற நாடாகும். புரூநாய் என்பது எம்மில் பலர் அறிந்திராத ஒரு நாடாகும். இதிலிருந்து தெரிகிறது அந்த எஸ்.எம்.எஸ். பிரதமர் ஒரு மோசடியாக வந்தவர் என்பது. 

பாராளுமன்ற பெரும்பான்மையை நிறூபிக்க மகிந்த ராஜபக்சவிற்கு ஐந்து முறை பாராளுமன்றில் சந்தர்ப்பம் வழங்கினோம். ஐந்து முறையும் முடியாமற்போனது. அதனை நிறூபித்து பிரதமர் பதவிளை தக்க வைக்க முடியாது போனது. 

ஜனாதிபதி அவர்கள் ஓரு ஓட்டையை அடைக்கச் சென்று பல ஓட்டைகளைப் போட்டகதையாக மாறியது. 

காலம் சென்ற  மாதுலுவாவே சோபித ஹிமியின் புதவுடலின் முன் செய்த சத்தியம் அவருக்கு மறந்து விட்டது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகக் கூறி அதே நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் சோபித்த ஹிமியின் நினைவு தினவைபவத்தில் பலவந்தமாக வந்து; 100 நாள் வேலைத்திட்டம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அவற்றை எல்லாம் அவர் மறந்து விட்டார்.

நாம் சமுர்தி உதவியை இரு மடங்காக உயர்த்தியதையும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியதையும்  நாட்டு மக்கள் மறக்;கக் கூடாது. அதே போல் கர்பிணித் தாய்மார்களுக்கு போசணை உணவுப் பொதி, மகாபொல உதவித்திட்டத்தை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவாக உயர்த்தியமை, 47 மருந்துப் பொருட்களின் விலையை 50 சதவீத்ததால் குறைத்தமை, காணி உறுதி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது, அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை ஆகிய அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது மேற்படி 100 நாள் வேலைத்திட்டத்திலாகும்.  இவ்வாறு யு.என்.பி. செய்த நல்ல வேலைகள் அனைத்தும் அவருக்கு மறந்து விட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய மகாநாட்டில் வைத்து அவர் இயன்றளவு ஐக்கிய தேசியக்கட்சிக்கு சகதியும் சேறும் வீசினார். நாம் அதற்கு பதில் அளிக்கப் போகவில்லை. ஆனால் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த விடயம் கண்ணாடி மாளிகையிலிருந்து கல் எரிவது போலாகும். 

இந்த இடத்தில் எனக்கு ஒரு சிங்களப்பாடல் நினைவுக்கு வருகிறது. குசல் ஹாமி என்ற பாவம் செய்யாதவர் தர்மம் செய்த தொட்டியில் மீன்பிடிப்பதும், உயிர்களைக் கொள்வதில்லை என பன்சில் எடுத்த சீலவதி மூட்டைப் பூச்சியைக் கொள்வதும், தனபால (தனவந்தன்) எனப் பெயர் வைத்துக் கொண்டு பாதையில் பிச்சை எடுப்பதும் ... என்ற பாடலைப் போல் உண்மை பேசாத ஒரு மெய்யப்பனைக் காண்கிறேன் என்றார். இன்னும் பலர் உரையாற்றினர். 

0 கருத்துரைகள்:

Post a comment