Header Ads



"சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம்"

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

EUROPHYT அறிவித்தலின் மூலம், சிறிலங்காவில் இருந்து, கறிவேப்பிலைகளைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து இத்தாலிய விமான நிலையங்களுக்கு வந்தவர்களின் பைகளில் இருந்து கறிவேப்பிலைகளை, இத்தாலிய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து வந்தனர்.

சிறிலங்கா கறிவேப்பிலைகளில் ஆபத்தான உயிரிகள் இருக்கின்ற என்ற அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அவற்றை எடுத்து வருவதற்கு, கடந்த 24ஆம் நாள்  தொடக்கம், தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. They need English medicine only. However, they do produce the English medicines using Ayurvedic plants....
    So, do not disturb their business on it.

    ReplyDelete

Powered by Blogger.