Header Ads



கோடிகளுக்காக கட்சி மாறமாட்டோம் - உதுமாலெப்பை

(ஏ.எல்.ஜனுவர்)

கோடிகளுக்காகவும், பதவி அந்தஸ்துகளையும் உயர்த்திக் கொள்வதற்காக கட்சி மாறமாட்டோம், கொள்கைகளுக்கானதாகவே எமது பயணம் என்றும் தொடரும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அண்மையில் தேசிய காங்கிரஸின் பிரதித்தலைவர் உள்ளிட்ட அனைத்து  பதவிகளிலிருந்தும் இராஜினமா செய்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் றகுமானியபாத் மக்கள் பணிமனையில் இடம்பெற்ற போது இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு அரசியல் கட்சியில் பதவி வகிக்கும் ஒருவர் ஜனநாயக ரீதியில் பதவி விலகுவதற்கு உரிமை இருக்கின்றது. இந்த அடிப்படையில்தான் நான் கட்சியில் வகித்த இரண்டு பதவிகளையும் இராஜினமாச் செய்தேன். எனது இராஜினமா தொடர்பாக கட்சி முக்கியஸ்தர்கள் சிலரிடம் ஆலோசனை பெறவில்லையென குறைபாடு நிலவுகின்றது.

1995ம் ஆண்டு புத்தளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டின் போது மறைந்த தலைவரிடம் பொத்துவில் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கட்சி உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கையை முன் வைத்தேன். இதற்கு சரியான பதில் கிடைக்காமையால் அட்டாளைச்சேனை முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் பதவியிலிருந்து யாரிடமும் ஆலோசணை கேட்காது இராஜினமாச் செய்தேன். 

எனது இராஜினமாவின் தாக்கத்தால் பொத்துவில் தொகுதிக்கான பாரளுமன்ற உறுப்புரிமை கிடைத்தது. அதே போன்று தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினமாச் செய்ததனால் எதிர்காலத்தில் கட்சி வளர வாய்ப்பு கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். தேசிய காங்கிஸிற்குள்ளே இருந்து கொண்டு கட்சியை பிளவுபடுத்தும் சதி தொடர்பானவர்களை பல தடவைகள் கட்சி தலமைத்துவத்திடம் எடுத்துக் கூறியும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதுடன், அவர்களின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தனால் மனவேதனையடையும் நிலையிலிருந்தேன்.

ஊடகங்கள் சமூகத்தின் விதியை மாற்றக்கூடிய சக்திவாய்ந்தவை. ஆனால் சில சமூக வலைத்தள, இணையத்தள ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறி செயற்படுகின்றன. தேசிய காங்கிரஸின் இணையத்தளத்தில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தெருவிளக்கு பொருத்துவது தொடர்பான விடயத்தில் என்னை மலினப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட செய்தி மனவேதனை அடையச் செய்கின்றது. ஊடகங்கள் எப்போதும் உண்மைகளை வெளியிட வேண்டும். ஊகங்களையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடக கூடாது.

தேசிய காங்கிரஸின் மேற்சொன்ற பதவிகளை நான் இராஜினமாச் செய்த பின்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமோ கட்சியிடமோ இதுவரைக்கும் எதுவித தொடர்பையும் நான் மேற்கொண்டிருக்கவில்லை. மேலும், சில ஊடகங்கள் எனது இராஜினமா அரசியல் தற்கொலை என்றும் எனது நோக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளாது வெளியிட்ட செய்திகள் தொடர்பில் எனது கண்டனத்தை தெரிவிப்பதோடு, அரசியல் தற்கொலை என்ற விடயத்தின் உண்மையையும்  விளங்காமலிருப்பதும் வேடிக்கையான விடயமாகும்.

இறைவன் நாடினால் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை மாறி இணையத்தளங்கள் ஊடாகத்தான் பதவிகள் கிடைக்கும் என்ற மனநிலைக்கு நமது அரசியல்வாதிகள் இன்று 
வந்துள்ளனர்.

தேசிய காங்கிரஸின் ஊடகப் பிரிவோடு தொடர்பான அக்கறைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் அஸ்மி தலமையிலான குழுவினர் முகநூல் போலி பக்கங்களினூடாக தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களை ஓரம் கட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றனர். 

மாற்றுக்கட்சிக்காரர்களின் தொடர்புடனும் கட்சியை அழிக்கும் முயற்சியில் இயங்கும் இந்த சதிகாரக் குழுவிடமிருந்து தேசிய காங்கிரஸையும், கட்சித் தலைவரையும் மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், போராளிகளுக்கும் உள்ளன எனவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.