September 29, 2018

கறுவாக்காட்டு குப்பைகள், அருவாக்காட்டுக்கு ஏன்..??

-அஜ்மல் மொஹிடீன்-

கொழும்பில் சேரும் குப்பைகள்,கொழும்புக்குள் தினமும் வந்து போகும் வெளியாரால்தான் சேருகின்றதாம், கொழும்பு மேயர் ரோசி செனநாயக்காவும்,அமைச்சர் பட்டாளி சம்பிக அவர்களும் கூறுகின்றார்கள்.

சேகரிக்கப்படும் குப்பைகள் யாவும் களனிக்கு கொண்டுவந்து அங்கிருந்து தினமும்  இரண்டு புகையிரதங்கள் மூலமாக 600,'600 தொன்களாக குப்பைகள் புத்தளத்தின், அருவாக்காட்டுக்குகொண்டு செல்லப்படுமாம், களனியில் இருந்து கொன்டு செல்லப்படும் குப்பை இரண்டு புகையிரதங்களிலும் நிரப்பப்பட்டு நன்றாக சீல் பண்ணி புத்தளத்திற்கு அனுப்பப்படுமாம்.

அதாவது கொழும்பிலிருந்து கொழும்பு நகர் சூழலையும்,கொழும்பு மக்களையும் பாதுகாப்பதோடு குப்பை கொண்டு செல்லப்படும் புகையிரதப் பாதை ஓரங்களில் வாழ்கின்ற மக்களும் பாதிக்கப்படக் கூடாது முற்று முழுதாக புத்தளப் பிரதேச சூழலும்,அம்மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

கொழும்பின் அதிகாரிகளே, அமைச்சர் பட்டாளி சம்பிக அவர்களே, கொழும்பு மேயர் ரோசி செனநாயக்க அவர்களே

கொழும்புக்கு வரும் பிற மாவட்ட மக்களெல்லாம் உங்கள் கொழும்புக்கு ஆசைப்பட்டு வரவில்லை,
எல்லாவற்றையும் கொழும்பிலே குவித்து வைத்திருக்கிறீர்களே,அதனால்தான் அம்மக்களெல்லாம் தினமும் கொழும்புக்குள் வரவேண்டி உள்ளது.

மாகாணரீதியாக அல்ல,மாவட்ட ரீதியாக‌ மக்களின் அவசர அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பரவல்படுத்தச் சொல்லுங்கள்,ஆகக் குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு நகரையாவது சகல வசதிகளையும் கொண்ட நகராக மாற்றச் சொல்லுங்கள் அதன் பின்னர் ஒருவரும் வர மாட்டார்கள் உங்கள் கொழும்பிற்கு,

கொழும்பின் அபிவிருத்தியில் தலைநகரம் என்ற அடிப்படையில் நாட்டின் மக்களால் மத்திய அரசிற்கு செலுத்தப்படும் நேர்,நேரில் வரிகளின் கணிசமான ‌பங்கு செலவு செய்யப்படுகின்றது. என்பதையும் கவனத்திற்கு கொள்ளுங்கள்.

மீப்பே எனும் பிரதேசத்தில் குப்பைகள் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது,அப்பிரதேச மக்களும்,அரசியல்வாதிகளும் எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் வில்பத்து சரணாலயத்திற்கப்பால் கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது,ஆனால் வன‌ பரிபாலன அதிகாரிகள் அனுமது கொடுக்காது எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இவ்விரண்டையும் கூறுவது கௌரவ அமைச்சர் பாட்டளி சம்பிக்க அவர்கள்தான். ஆக மீப்பேயில் அரசியல்வாதிகள் முன்னின்று மக்களோடு எதிர்த்ததால் அப்பிரதேச மக்களும்,அப்பிரதேச சூழலும் பாதுகாக்கப்பட்டது.

அதிகாரிகள் எதிர்த்ததால் வில்பத்து பிரதேசமும் வனஜீவராசிகளும் பாதுகாக்கப்பட்டன.

புத்தளப் பிரதேசத்தையும்அம்மக்களையும் பாதுகாக்க மத்திய அரசாங்கமும் தயாரில்லை,புத்தள பிரதேச அரசியல்வாதிகளும் எதிர்ப்பை மக்களுடன் சேர்ந்து முன்னெடுக்க தயாரில்லை.

அரசியல்வாதிகளுக்கு அவர்கள் இருப்பும்,பதவியும்,மேலிட அனுசரனையும் அவசியம்.

மீப்பே மக்களை விட,வில்பத்து சரணாலய ஜீவராசிகளைவிட புத்தள மக்களின் வாழ்க்கையும்,பிரதேச சூழலும் பெரிதல்ல.

ஏனெனில்  அரசியல்வாதிகள் உரிய காத்திரமான எதிர்ப்ப்பு நடவடிக்கைகளில் இறங்கவில்லை,

புத்தளத்தில் கணிசமான முஸ்லிம் மக்களும்,வறுமைக் கோட்டில் இருக்கும் மக்களும் அதிகமாக இருப்பதால் எந்த எதிர்ப்பும் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. குப்பை அகற்றுவதில் கூட சரி ரியான முகாமைத்துவம் இல்லாத குப்பை அரசியல் கூட ஒழுங்கற்றிருக்கும் அரசுக்கு ஒரு குட்பை, முடியாண்ட மன்னரும் ஒரு பிடி சாம்பராவார் என்பதை மறந்து விடாதீர்கள் அரசியல்வாதிகளே.

இந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் புத்தள மக்களே நாம் உங்களோடு கைகோர்த்து நிற்கின்றோம்.

அனாதரவற்று, அகதியாய் உங்கள் பிரதேசம் வந்த போது எம்மை ஆதரித்து, அரவனைத்தவர்கள் நீங்கள் ,எங்கள் வாழ்வும்,இறப்பும் உங்களோடுதான்...!

2 கருத்துரைகள்:

எமது ஆதரவு என்றும் புத்தளம் மக்களுக்கே..

இலங்கையில் உள்ள ஏனைய பகுதி மக்களுக்கும்,இலங்கை அரசாங்கதிட்கும் ஒரு பணிவான வேண்டுகோள் நாட்டின் பிரச்சினைகள தீர்பதில் நம் அனைவருக்கும் கடமை அந்தவிததில் புத்தளமக்கள் இலங்கைகு தேவையான சீமந்து தொழிட்சாலை,அனல்மின்நிலையம் இந்த இரண்டையும் தங்கள் பகுதிகளில் வைத்துக்கொண்டு பல பிரச்சினைகளுக்குள்ளாகி இருக்கின்றார்கள் ஆகவே இந்த குப்பகளையும் அங்கு எடுத்துச் சென்று அம்மக்களை கஸ்டப்படுத்துவது அநியாயம் இதை தடுத்து அவைகளை ஏனைய பகுதிகளுக்கு செல்ல இலங்கை மக்கள் அனைவரும் புத்தளம்மக்களுக்கு உதவிசெய்யவும் இல்லாவிட்டால் உங்கள் பகுதிகளில் பூகம்பம் உண்டாகும்

Post a Comment