July 07, 2018

பைசரின் உடம்பில் ஓடுவது, என்ன இரத்தம்..?

-வாலித்-

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (06) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முஸ்லிம்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தேசிய கட்சிகளில் தொங்கிக் கொண்டு இனவாதத்தைப் பரப்பி வாக்குகளைப் பெற்று தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள் சில, புதிய முறையில் தமது பங்கு கிடைக்காது போய்விடும் என்பதாலேயே மீண்டும் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் எனக் குரல்கொடுத்து வருகின்றனர். புதிய முறையில் எந்தவொரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படாது. அரசியல் செய்யும்போது தாம் சார்ந்த இனத்தைப் பற்றி மாத்திரம் யோசிக்கக் கூடாது. அப்படி யோசிப்பதாயின் தனித்துப் போட்டியிட வேண்டும். இதனைவிடுத்து தேசிய கட்சிகளில் தொங்கிக்கொண்டுவந்து உறுப்பினர்களைப் பெற்ற பின்னர் தமது இனத்தை விற்று அரசியல் நடத்துகின்றனர். உத்தேச தேர்தல் முறையின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குவங்கி குறைவடையாது" 

என பைசர் முஸ்தபா நேற்று (06) சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைகளிலிருந்து 13 பேர் மாத்திரமே முஸ்லிம்களிடமிருந்து தெரிவாகுவர்.

பழைய தேர்தல் முறையின் கீழ் 43 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப்படி முஸ்லிம்களுக்கு மிகத்தெளிவான அநீதி இழைக்கும், புதிய தேர்தல் முறையை பைசர் முஸ்தபா வலியுறுத்துவதானது, அவரது உடம்பில் ஓடுவது முஸ்லிம் இரத்தமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்காகவும், மைத்திரிபால சிறிசேன மற்றும் சிங்களத் தரப்புகளிடம் நல்ல பெயர் பெறுவதற்காகவும் இதுபோன்ற பேச்சுக்களை பேசும் பைசர் முஸ்தபா, போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே இது நோக்கப்படும்

பைசர் முஸ்தபா, முஸ்லிம் சமூகத்திற்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து சிங்களவனுக்கு முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பதை அவர் நிறுத்த வேண்டும்

தனது உடம்பிலிருந்து சில அவயங்களை இழக்க பைசர் முஸ்தபா தயாரா..?

இதற்கான பதில், அவரிடமிருந்து இல்லை என்பதாகவே இருக்கும். அதுபோன்றுதான் முஸ்லிம் சமூகமும் மாகாண சபையில் தனது பிரதிநிதித்துவத்தை இழக்கத் தயாரில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கூட, எந்த முறையிலாவது மாகாணத் தேர்தலை நடத்துவதற்கு தாம் தயாரென சொல்லும் நிலையில், முஸ்லிம்களுக்கு பாதகமான புதிய முறையின் கீழ்தான் மாகாணத் தேர்தலை நடத்த வேண்டுமென, பைசர் முஸ்தபா பிடிவாதம் பிடிப்பதன் காரணம்தான் என்ன..? என முஸ்லிம் சமூகம் பைசர் முஸ்தபாவிடம் வினா எழுப்புகிறது...!

14 கருத்துரைகள்:

இது என்ன கேள்வி.......அப்படியென்றால்......உண்மையை பேசினால் அது முஸ்லிம் ரத்தம் இல்லை என சொல்லவருகிறீர்களா?

There is nothing called " Muslim Irattam" the writer is only very racist. I think what the Minister meant was very clear. I am not a fan of Faizar Mustafa, but as Muslim I believe in truth should prevail.

Politicians are talking "TRUE"? What a Joke??

விகிதாசார தேர்தல் முறைமையை கொண்டு வரும் போது ஏன் முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கவில்லை?
அப்போது வாய்மூடி மெளனிகளாக இருந்து விட்டு இப்பொழுது எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.
எல்லாருமே தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக மட்டுமே சத்தம் போடுகிறார்களே தவிர சமூக அக்கறை துளியளவு கூட இல்லை.
இம்முறைமை முஸ்லிம்களுக்கு அநீதி என்று தெரிந்து கொண்டே பைசர் முஸ்தபாவும் அதனை கொண்டு வர உடந்தையாக இருந்தார்.
எமது சமூத்துக்கான உண்மையான விரோதிகள் இவர்கள் தான்.
இவர் போன்றவர்களை இனி மேலாவது நம் சமூகம் புறக்கனிக்க வேண்டும்.

The stament said by Mr.Faizar Mustafa is 10000000% correct.muslims should support the truth and should't stand against the truth to establish their community in wrong way

தற்கால இலங்கை அரசியல் சூழ்நிலைகளின்படி, நீதிக்கு நெருக்கமாக உள்ள ஜேவிபி யினரின் கருத்துக்களும் முடிவுகளும் இது விடயத்தில் தேசியம் சார்ந்ததாகவும் முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கும்.

Muslim politicians used Muslim votes to get elected but do not at all serve the interests of the community. They only serve themselves using the name and votes of the community. Therefore there is just no purpose in increasing the number of Muslim seats. What is needed is a political system that serves all the people equally and fairly. That is what the JVP too says. Faizer too is correct in that respect.

பழைய விகிதாசார முறையோ, புதியதோ முஸ்லிம்களுக்குத் தேவை இல்லை.

அவர் கண்டியிலும் இதைத்தான் செய்தார் அதனால்தான் கண்டிக்க போக முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர் சிங்கள மக்களுக்காக முஸ்லிம்களுக்கு எதையும் செய்யத்தயார் என்பதை அவருடைய பல நடவடிக்கைகளில் கண்டுள்ளோம்! அவருடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர் பேசுவது சிங்களம்! இப்போதுதான் அவர் தமிழ் கற்க துவங்கியுள்ளார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். சிங்களவர்களுடனே சிங்களவராக வாழும் அவருக்கு முஸ்லிம்களின் வாக்கு மட்டும் தேவை! இது கண்டி முஸ்லிம்களுக்கு எப்போதோ விளங்கிவிட்டது. அதனால்தான் அவர் கொழும்புக்கு சென்றார்!

Anushath இதே போல் இனி நீ வட கிழக்கு இணைப்பு பற்றி மூச்சு விட கூடாது. நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் எவ்வளவு காலம் பின்தள்ளப்படுகிறதோ அவ்வளவு காலம் இவர்வீட்டு ஆட்சி அதாவது ஆளுனர் (அ-து அதிபரினால் நியமனம் செய்யபடுகின்றவரின்) நடைபெறுமாகையால் அதற்கான ஏற்பாடுகளை இவர் இவ்வாறு கதைத்து ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது மகா சனங்களுக்கு புரியாதோ! கடைசியில் இவர் பழையதுக்குத்தனர் வருவார்!

It is true the small parties like Slmc andAcmc wanted to old system so that the leaders can appoint their hench men as MP people without the support shouldn't be elected as candidate or MP.Let the people elect directly not through these brokers if the Muslim people want to elect Sinhalese or Tamil that is their right.In 1960 Borella elected M H Mohamed Balangoda elected ABusally Tamilsvoted for Ahamed and Majeed in Pottvil Sinhalese votedDr Jalaldeen.Democracy means people elect their own choice not the candidate selected by HAkeem or Rishad they have nothing to do with Eatern Muslim.
If Puttalam Mp resign select some one from that district they badly need a MP these two guys are playing with EAstern Muslim.The new system need some changes but old system will push us to old era .under old system people can vote only for the list of candidates selected by party leaders.some argue under old system muslims have more MPs.whats the point,are they are acting as a one unit in of the people who voted for them.Why Rauf or Rishard crying for old system If new system works well they will not have any place in East,or out side their region.New system mainly asked on eloctral basis that is the true democracy.see how it's work in U.K.

அவர் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய சுப்பிரமணியம் சுவாமி, அவ்வளவுதான். He is a Muslim name-tagged Subhramanium Swamy.

Muslims' blood will not cheat anyone and will not speak for any benefits obtained by keeping a society in pignoration.

Post a comment