Header Ads



ஒற்றுமையின்றி பிரிந்தால், நிச்சயம் அழிந்துவிடுவோம் - விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டில் சம்பந்தன்

-பாறுக் ஷிஹான்-

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் நிச்சயம் அழிந்துவிடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இன்று (24) இடம்பெற்ற  முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

“கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் புலிகளை அழிக்க உதவினார்கள். இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றிபெற்றது.

விடுதலைப்புலிகளை அழிக்கும்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக சர்வதேச சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சனை தீர்விற்கு முயற்சிக்கவில்லை.

தனது பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் நீங்க  முடியாது.

இந்த நாட்டின் ஆட்சிமுறை சிறுபான்மையினருக்கு உதந்ததல்ல. அதை மாற்ற வேண்டுமென மக்கள் வாக்களித்துள்ளனர்.

இவற்றை நாம் அடைவதாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒரு தூணாக நிற்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமாகஇ இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளோம். அந்த ஒற்றுமை தொடர வேண்டும். சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

சில நாட்களின் முன்னர் நான்இ ஜனாதிபதிஇ பிரதமர் மூவரும் சந்தித்து பேசினோம். அப்போது மஹிந்தவை சந்தித்து பேசினோம்.அப்போது மஹிந்த  என்னை திரும்பி பார்த்து சொன்னார்- என்னுடைய தோல்விக்கு பாரிய காரணகர்த்தா நீங்கள் என்றார்.

'நான் அல்ல. எமது மக்கள்' என பதிலளித்தேன்.

இந்த ஒற்றுமை தொடர வேண்டும். ஒற்றுமையே பலம். நாங்கள் பிரிந்தால் அழிவோம். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

1 comment:

  1. புலிகள் அழிக்கப்படக் காரணம் அவர்களது பயங்கரவாதமே அன்றி சர்வதேசம் அல்ல.

    மஹிந்த தோல்வி அடைந்ததற்கு  காரணம் அவரது இனவாதமே அன்றி நீங்களோ உங்களது மக்களோ அல்ல.

    தமிழர்களது உரிமைகளை அடைந்து கொள்வதற்குத்  தேவையான ஒற்றுமைக்கு தடையானது அவர்களிடையே சமத்துவம் இன்மை அல்லது சாதி வேறுபாடுகள்தாம்.

    சாதிகள் அற்ற சமுதாயத்தையும்,  தமிழ்-சிங்களப் புத்தாண்டால் புத்துயிர் பெரும் சிங்களவர்களையும், மொழிகளால் இணைந்த முஸ்லிம்களையும் நீதியாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைக்க முடியும் என்றால், வட-கிழக்கு என்ன, வடக்கிலிருந்து தெற்கு வரை, சிங்களவர்கள் என்ன நீங்களும்தான் இந்நாட்டையே ஆள்வதற்குத் தகுதியானவர்களே!

    நாட்டில் வெற்றிடமாக உள்ள இந்த நிர்வாகியைத்தான் நாடளாவிய ரீதியில் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.