Header Ads



இப்படியும் ஒரு ஆசிரியர்


ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் பகவான் . இவரது அயராத முயற்சியால், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி  ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.

பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

மாணவர்கள் - ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் திரை பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஹிர்த்திக் ரோஷன், நடிகர் விவேக்  ஆகியோர் ஆசிரியர் பகவானுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஹிர்த்திக்ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில் , “ ஆசிரியருக்கும் ,மாணவருக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு என் நெஞ்சை உருக்குகிறது “ என தெரிவித்துள்ளார்.


It warms my heart to see this bond between a teacher and his students... https://t.co/rgvMhVNKuH

— Hrithik Roshan (@iHrithik) June 21, 2018
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் , ஆசிரியர் பகவான் குறித்து வெளியான செய்தியை பதிவிட்டு ”குரு , சிஷ்யர்கள்” என பதிவிட்டுள்ளார்.
Guru Sishyas🌹 https://t.co/ZA9OQlLUuM

— A.R.Rahman (@arrahman) June 21, 2018
நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என கூறி உள்ளார்.
ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் @News18TamilNadu@news7tamil@ThanthiTV@sunnewstamil@PTTVOnlineNewspic.twitter.com/m0Y19NqZUc

— Vivekh actor (@Actor_Vivek) June 22, 2018
நடிகர் விவேக் ,   சூப்பர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும் உயர் கல்வி அதிகாரிகளுக்கும் நம் நன்றியும் பாராட்டும்! இவர் தான் “ஆதி பகவன்”!என கூறி உள்ளார்
சூப்பர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும் உயர் கல்வி அதிகாரிகளுக்கும் நம் நன்றியும் பாராட்டும்! இவர் தான் “ஆதி பகவன்”! https://t.co/jQ2bhQiV3j

— Vivekh actor (@Actor_Vivek) June 22, 2018

No comments

Powered by Blogger.