Header Ads



கோத்தாபாயவை களமிறக்குவதை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது - வாசுதேவ

பொது எதிரணி என்பது தனிப்பட்ட கட்சியல்ல. அனைத்து  உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பொது தீர்மானங்களையே எடுக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டு எதிரணியினரால் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேசிய அரசாங்கம் நாளுக்கு நாள் பலவீனமடைந்த செல்கிறது. இதன் காரணமாக கூட்டு எதிரணியினர் பலம் அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவு கட்சிக்கு மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதே தவிர  ஒரு சில உறுப்பினர்களுக்கு அல்ல என்ற விடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். 

கூட்டு எதிரணியில்  அங்கம் வகிக்கும்  கட்சிகள் முன்னாள்  சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பொது வேட்பாளராக களமிறக்க  விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் பொது எதிரணியினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். 

இந் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவை களமிறக்க முடிவுகள் எடுக்கப்பட்டதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொது எதிரணியினர் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் பொது எதிரணி என்பது தனிப்பட்ட கட்சியல்ல அனைத்து  உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பொது தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.