Header Ads



நாம், ஆட்­சியில் இருந்­தி­ருந்தால்...?

அர­சி­ய­ல­மைப்பு சபையின் இடைக்­கால அறிக்­கையில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­விடின் மீண்டும் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரியில் அதனை விவா­திக்க முடியும். இறு­தியில் பொது உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பில் சர்­வ­தேச அழுத்­தங்கள் ஏற்­பட ஆட்­சி­யா­ளர்­களின் அச­மந்­தப்­போக்கே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்­தினார். புதிய அர­சியல் அமைப்பு குறித்த நகர்­வுகள் தொடர்பில் கருத்து தெரி­வித்த போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில் ஒவ்­வொரு அர­சியல் தலை­வரும் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தாக வாக்­கு­றுதி கொடுத்தே ஆட்­சிக்கு வந்­தனர். 1988 ஆம் ஆண்­டிலும் 1994 ஆம் ஆண்­டிலும், 2000 ஆம் ஆண்­டிலும், 2005 ஆம் ஆண்­டிலும் மீண்டும் 2015 ஆம் ஆண்­டிலும்  மக்கள் மத்­தியில் வாக்­கு­றுதி வழங்­கினர். குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக முழுப் பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சியல் அமைப்பு சபை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்கப்பட்டது. இன்று அதுவே இடம்­பெற்று வரு­கின்­றது. 

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­போது  மக்கள் வாக்­கெ­டுப்பு இல்­லாது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யை நீக்­கு­வ­தாக  ஜனா­தி­பதி கூறினார். ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யை நீக்க மக்கள் வாக்­கெ­டுப்பு அவ­சியம். அவ்­வா­றென்றால் புதிய அர­சியல் அமைப்­பா­கவே அது அமைய வேண்டும். இவர்கள் மறை­மு­க­மாக கூறி­னாலும் இதனை புதிய அர­சியல் அமைப்­புக்­கான வாக்­கு­று­தி­யா­கவே கருத வேண்டும். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்­பாட்டில் இருந்தே மக்கள் விடு­தலை முன்­னணி அர­சியல் செய்து வரு­கின்­றது. 1978 ஆம் ஆண்டில் இருந்தே எமது நிலைப்­பாடு இது­வா­கவே அமைந்­தது. 2015 இல் ஆட்சி மாற்­றத்தின் போதும் நாம் புதிய அர­சியல் அமைப்பு என்ற நிலைப்­பாட்டில் இருந்தே செயற்­பட்டு வந்தோம். ஆகவே எவ்­வா­றேனும் புதிய அர­சியல் அமைப்பு சரி­யான முறையில் அமைய வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

தமிழ் மக்­களின் நீண்­ட­கால போராட்­டத்தை இந்த அர­சியல் அமைப்பின் மூல­மாக நிறை­வுக்கு கொண்­டு­வர முடியும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பு­கின்­றது.

இதன்­மூலம் தமது கட்­சியை பலப்­ப­டுத்­தவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கையை உரு­வாக்­கவும் ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கலாம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை தக்­க­வைத்து ஆட்­சி­யை கொண்­டு­செல்ல ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கருத முடியும். எனினும் தீர்வு ஒன்று அவ­சியம் என்ற நிலைப்­பாட்டில் இருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.

அர­சியல் அமைப்பு வழி­ந­டத்தல் குழு சட்­ட­வி­ரோ­த­மா­ன­து என்று விஜ­ய­தாஸ 

ராஜபக் ஷ கூறு­கின்ற போதிலும் ஆரம்­பத்தில் இருந்தே அவர் வழி­ந­டத்தல் குழுவில் செயற்­பட்டார். கடந்த ஒன்­பது மாதங்­க­ளாக நாம் இந்த நகர்­வு­களை முன்­னெ­டுத்தோம். 75  தட­வைகள் கூடி இடைக்­கால அறிக்கை தொடர்பில் ஒவ்­வொரு வாக்­கி­ய­மாக விவா­தித்து இறுதி முடி­வுக்கு வந்தோம். இப்­போது விவா­திக்­கப்­பட்­டி­ருப்­பது பொது­வான அறிக்­கை­யாகும். இதில் முரண்­பா­டு­களும் அனை­வரும் ஏற்­று­கொள்ளும் நிலைப்­பா­டு­களும் உள்­ளன. இந்த அறிக்­கை­களில் பொது உடன்­பாடு எட்­டா­விடின் மீண்டும் பெப்­ர­வரி மாதம் விவா­திக்­கப்­படும். அதன் போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வேண்டும். அதில் அனு­மதி கிடைத்தால் அமைச்­ச­ர­வையில் அங்­கீ­காரம் பெறப்­படும். அதன் பின்னர் மீண்டும் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் வெற்­றி­பெற வேண்டும். அதன் பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­படும். 

நாம் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இதனை விட சரி­யான அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட்டு இப்­போ­தைக்கு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும். இவர்­களால் முடி­யா­ததை நாம் செய்து காட்­டி­யி­ருப்போம். எனினும் இப்­போதும் சரி­யான அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற ஒரே கார­ணத்தை கருத்தில் கொண்டே போராடி வரு­கின்றோம். அதே­போன்று சர்வதேச தேவைகள் தொடர்பில் நாம் புதிதாக கூற ஒன்றும் இல்லை. இது எல்லா காலகட்டத்திலும் காணப்பட்ட ஒன்றாகும். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத காரணத்தினால் தான் சர்வதேசம் எம்மை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. முதலில் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தவறை செய்துகொண்டு சர்வதேசத்தை விமர்சிக்க இயலாது  என்றார்.

No comments

Powered by Blogger.