Header Ads



பாராளுமன்றத்தில் அநுரகுமார ஆற்றிய, முக்கியத்துவமிக்க உரை

ஜனநாயகம் மறுக்கப்பட்டமை யுத்தம் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்திருந்ததே தவிர யுத்தத்தினால் ஜனநாயகம் இல்லாமல்போகவில்லை என்று நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி., பாராளுமன்றத்தின் 70 வருடங்களில் பொருளாதாரம் அல்லது தேசிய ஒற்றுமை என எதை எடுத்துக் கொண்டாலும் சாதகமான விடயங்களை விடவும் கறைபடிந்த வரலாறே அதிகம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

விசேடமான சந்தர்ப்பங்களானது எண்ணிவிடக் கூடியதாக இருக்கின்ற அதேநேரம், அடக்குமுறை மற்றும் அழிவுமிக்க சந்தர்ப்பங்களானது எண்ண முடியாத அளவில் இருக்கின்றன என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். 

இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"கடந்து சென்ற 70 வருடங்களில் ஜனநாயகம் என்பதன் மையமாக அமைந்திருந்த இந்த பாராளுமன்றத்தில் தான் ஜனநாயகம் என்பது சிதைந்தும் போயிருந்த பல சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. 

இந்த பாராளுமன்றத்தில் தான் 4 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் 6 வருடங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியிருக்கும் போது தமது ஆட்சி காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கு கையுயர்த்தி திருத்தம் நிறைவேற்றுகின்றனர். 

இந்த நிறுவனத்தினால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதாக சிலர் மேற்கோள் காட்டியிருந்தனர். எனினும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தவறியமையினால் மக்கள் வேறு வழிகளை தேர்ந்தெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். இதனால், யுத்தம் உருவாகியது. யுத்தத்தினால் ஜனநாயகம் இல்லாமல்போகவில்லை.

ஜனநாயகம் மறுக்கப்பட்டமை தான் யுத்தத்துக்கு வழிகோலியிருந்தது. 
இந்த சபையினால் மக்களை அடக்குமுறைக்குட்படுத்தும் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

உயர்நீதிமன்றத்தின் உயர்பதவியில் இருந்தவரை இந்த சபையினாலேயே வழக்கு விசாரித்து பதவி நீக்கம் செய்த அசுத்தமான வரலாறு இந்த சபைக்கு உரித்தாக காணப்படுகிறது.  இந்த பாராளுமன்றத்தில் தமது நடப்புக்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் இந்த சபையினால் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


ஆகவே, 70 வருடங்கள் என்ற நீண்ட வரலாற்றில் பல்வேறு கரும்புள்ளிகள் மற்றும் இரத்த களரிகளுக்கு இந்த இடம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. 70 வருடங்கள் கடந்தும் இந்த நாட்டுக்கான பொருளாதாரத்தில் சரியான நோக்குகளையும் சரியான தீர்மானங்களையும் இந்த சபை எடுக்க தவறியுள்ளது. 

எம்மால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது. 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தேசிய ஒற்றுமையின் அடையாளமொன்று காணப்பட்ட போதிலும், 1947 ஆம் ஆண்டின் பின்னர் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான விடயங்களானது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒற்றுமை நோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கே ஏதுவாக அமைந்திருந்தது. 

அதேபோல், கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புகளிலும் சகல மக்களினதும் உரிமைகள், சகல இனக் குழுமங்களினதும் பாதுகாப்பு, சகல மதங்களுக்குமான கௌரவம், சகல மொழிகளுக்குமான உரிமைகளை உறுதிசெய்வதற்கு பதிலாக அவற்றிலான சமத்துவமின்மைள்  ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறான நிலைமைகளில் தேசிய ஒற்றுமை ஏற்படாது. சகல மக்களினதும் உரிமைகளை வழங்க தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் இன்றும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. 

இது எவ்வளவு தூரம் வரை சென்றதென்றால், இரத்தக் களரிமிக்க 30 வருட யுத்தத்தை இந்த பாராளுமன்றம் எமக்கு உரித்தாக்கியது. ஆகவே, ஜனநாயகம், பொருளாதாரம் அல்லது தேசிய ஒற்றுமை என எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் சாதகமான அம்சங்களை விடவும் துரதிர்ஷ்டவசமான கறைபடிந்த அனுபவங்களே எமக்கு இருக்கிறது.  

 விசேடமான சந்தர்ப்பங்களானது எண்ணக் கூடியதாக இருக்கின்ற அதேநேரத்தில் அடக்குமுறை மற்றும் அழிவுமிக்க சந்தர்ப்பங்களானது எண்ண முடியாத அளவில் இருக்கின்றன.

ஆகவே, 70 வருடம் கடந்துள்ள இந்த நிலையில் நாம் எமது கடந்த கால அனுபவங்களை நன்கு மீள் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ஸ்தானங்களுக்கு அமைய ஒவ்வொரு அர்த்தப்படுத்தல்களை வழங்கி மூடிமறைத்துக் கொள்ளக்கூடாது. 

அன்று கொண்டுவந்த 4 ஆவது அரசியலமைப்பு திருத்தமே இந்த நாட்டில் இரத்தக் களரிமிக்க யுத்தமொன்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. இந்த அனுபவங்களில் இருந்து எமக்கு புரிவது என்னவெனில், சகல மக்களுக்கும் அனைத்து விடயங்களிலும் சம உரிமைகளை வழங்கி எப்படி சுபீட்சமான நாட்டை ஏற்படுத்துவது என்ற சவால் எம்முன்னிலையில் உள்ளது. இந்த சவால்களை எம்முன் நிறுத்தியே இந்த 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.  

7 comments:

  1. Even it better if he touch current situations in the country and where will this lead the country. What action needs to do stop future catastrophy in the country.

    ReplyDelete
  2. Next Time all our Votes is to JVP!.

    ReplyDelete
  3. @ Razeeq - yes bro. Useful speech. But wrong destination. I know so many politician in the history have voiced for this. But no change. These kind of thinks should be adopted in School history books for at least the next generation to better.

    ReplyDelete
  4. @ Razeeq - yes bro. Useful speech. But wrong destination. I know so many politician in the history have voiced for this. But no change. These kind of things should be adopted in School history books for at least the next generation to better.

    ReplyDelete
    Replies
    1. Still u don't understand Mr anura kumara and about JVP.

      Delete
  5. We can try one time with jvp

    ReplyDelete

Powered by Blogger.