November 03, 2016

முஸ்லிம் தாய், கோழிக்கூட்டில் அடைக்கப்பட்டார் என்பது சுத்தப் பொய் (வீடியோ)


–அனஸ் அப்பாஸ் –

கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த எமது பணிகளால் சமூகத்துக்கு நலவே அன்றி கெடுதி இடம்பெற நாம் இடமளிக்க முடியாது. உண்மை நிலையை நேரில் சென்று அறிந்து வருவதற்காக சென்றிருந்தேன். அது ஒரு இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதை அப்பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீள்பார்வைக்காக தெளிவுபடுத்தினர். இதோ அந்த காணொளி.. https://www.youtube.com/watch?v=7U5qPf-3kbg

யா அல்லாஹ் அறிந்தோ அறியமலோ நாங்கள் ஏதாவது பாவம் செய்திருந்தால் எங்களை மன்னிப்பாயாக...!


பிற்குறிப்பு - இதனுடன் தொடர்புடைய செய்தியை எமது இணையமும் ஏனைய ஊடகங்களிடமிருந்து பெற்று பிரசுரித்திருந்தது. தற்போது அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த தாயிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம். அல்லாஹ்வுக்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்..!

2 கருத்துரைகள்:

இவ்வளவு கஷ்டத்திற்கு பிறகும் அந்த பெண் அல்லாஹ்வை புகழ்வதை பார்க்கும்போது அந்தப்பெண்ணுக்கு ஒரு salute . இந்த அவதூரை பரப்பிய அந்த சிங்கள ஊடகம் மன்னிப்பு கேட்குமா? குறிப்பாக உண்மையை கூறிய அந்த பௌத்த மதகுருவிற்கும் அந்த பௌத்த சகோதரர்களும் நன்றிகள்
இந்தத்தாய்க்கு உதவுவதற்கான ஏதாவது முறை உள்ளதா ? வங்கிக்கணக்கு விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் எனபன?

We Have Noticed many time the news in jaffanamuslim.com and warned in our comments not to rush in publishing messages.

Even If a message is TRUE it is not needed to publishing to every body in the world. Islam Dose not promote propaganda.. Rather It direct us to solve the problem without making further destruction to the incident.

Also have a well disciplined and Educated Editors who fears Allah for in publishing messages to public. Do not publice a matter just to satisfy your readers.

THINK before many time, IS this message going to bring GOOD to society ? Is this message will keep you stand in front of Allah on the day of Judgement ?

WE HOPE the ADMIN of JAFFANAMUSLIM.com will not only publish apology on its website, Rather reach the family and ask for forgivness before you reach Allah.

Post a Comment