Header Ads



ஹதீஸ்கலை வல்லுனர், அல்லாமா ஷுஐப் அல் அர்னாஊத் (ரஹ்) வபாத்

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

முழுப் பெயர் : ஷுஐப் பின் முஹ்ரிம் அல் அல்பானி அல் அர்னாஊதி.

பிறப்பு : சிரியாவின் திமிஷ்க் நகரில் 1928 ம் ஆண்டு பிறந்தார்கள்.  

மார்க்கப்பற்றும் அறிவுப் பின்னணியும் கொண்ட சிறந்த குடும்பத்தில் பிறந்த இமாமவர்கள் நல்ல மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே வளர்க்கப்பட்டார்கள். 
ஆரம்பத்தில் தனது தாய் தந்தையிடமிருந்து கல்வியும் கற்றார்கள். 

சிறு பிராயத்திலிருந்து மார்க்கப்பற்றுள்ளவராகவே இமாமவர்கள் காணப்பட்டார்கள், தனது சிறு வயதிலே அல் குர்ஆனின் அதிகமான பகுதிகளை மனனமிட்டு முடித்தார்கள். அதன் பின் திமிஷ்க் பள்ளிவாசலிலும் மத்ரஸாவிலும் நடைபெறுகின்ற ஹல்காக்களில் கலந்து கொண்டு அரபுச் சொல் இலக்கணம், அரபு இலக்கணம், இலக்கியம், போன்ற கலைகளை படிப்பதில் தனது நேரத்தை செலவு செய்தார்கள்,
சிறு வயதிலே அவர்களிடம் விவேகமும் , நல்ல மனன சக்தியும் அறிவில் முதிர்ச்சியும் காணப்பட்டது.

அதன் பிறகு அன்றைய நாட்களில் சிரியாவின் மாமேதையாக திகழ்ந்த அஷ்ஷெய்க் பத்ருத்தீன் ஹஸனீ அவர்களின் நேரடி மாணவர்களான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் புர்பூர், அஷ்ஷெய்க் ஆரிப் அத்தூஜீ போன்றோரிடம் கல்வி கற்றார்கள். 

பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர், ஹதீஸ் கலைகள், எல்லாவற்றையும் திறம்பட கற்றுக் கொண்ட இமாமவர்கள்
தனது பயணத்தை முன்னோர்களின் நூற்களை உறுதிப்படுத்துதலிலும் ஹதீஸ்கலைகளுக்கும் என முழுமையாகவே அர்ப்பணித்திருந்தார்கள். 

ஆரம்பத்தில் திமிஷ்கின் மக்தபா இஸ்லாமிய்யாவில் இருந்து கொண்டு தனது ஹதீஸ்கலைகளுக்கான பணிகளைத் தொடர்ந்தார்கள் 

இமாமவர்கள் முதுசங்களின் நூற்களை தஹ்கீக் செய்வதிலும் ஹதீஸ்கலைகளுக்கும் என 240 க்கும் மேற்பட்ட பாகங்களில் செய்த பணிகளில்...

16 வால்யூம்களில் இமாம் பகவி அவர்களின் ஷர்ஹுஸ் ஸுன்னாவையும் 

12 வால்யூம்களில் இமாம் நவவி அவரகளின் ரௌழதுத் தாலிபீனையும்

12 வால்யூம்களில் இமாம் இப்னு மன்ழூர் 
அவர்களின் முஹத்தபுல் அகானியையும்

10 வால்யூம்களில் இமாம் இப்னு முப்லிஹ் அல் ஹன்பலி அவர்களின் அல் முப்திஃ பீ ஷர்ஹில் முக்னிஃ என்ற கிரந்தத்தையும் 

09 வால்யூம்களில் இமாம் இப்னுல் ஜௌஸி அவர்களின் ஸாதுல் மஸீர் பீ இல்பித் தப்ஸீர் என்ற கிரந்தத்தையும் தஹ்கீக் செய்து முடித்தார்கள். 

அதன் பின்னால் ஒமானிலுள்ள முஅஸ்ஸஸதுர் ரிஸாலாவில் இருந்து கொண்டு தனது ஹதீஸ்கலைகளுக்கான பணிகளைத் தொடர்ந்தார்கள் அங்கு 

25 வால்யூம்களில் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமிந் நுபலாவையும்

16 வால்யூம்களில் சுனன் திர்மிதியையும்
12 வால்யூம்களில் சுனன் நஸாஈயையும்
05 வால்யூம்களில் சுனன் தாரகுத்னியையும் 
50 வால்யூம்களில் முஸ்னத் அஹ்மதையும்
இமாம் தஹபியின் தாரிஹுல் இஸ்லாம் என்ற கிரந்தத்தையும் தஹ்கீக் செய்து முடித்தார்கள். 

இமாமவர்களின் வபாத் : 
2016 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி காலமானார்கள் இறக்கும் போது அவர்களுக்கு வயது 88 ஆக இருந்தது. 

எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.

4 comments:

  1. Innalillahiwainnailaihirojiun. Allah Yarhamhu.

    ReplyDelete
  2. انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه

    ReplyDelete
  3. Innalillaahiwainnaailaihiraajioon.

    ReplyDelete
  4. Innalillaahiwainnaailaihiraajioon.

    ReplyDelete

Powered by Blogger.