Header Ads



இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய, எதிர்ப்பு அலைக்கு யார் காரணம்..?

-யு.எச் ஹைதர் அலி-

இலங்கையில் அரபு நாடுகளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் இந்த இஸ்லாம் எதிர்பு அலைக்கு இவர்களும் பொறுப்பாளிகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த நிறுவனங்கள் தெருவுக்கொரு பள்ளி ஓவ்வொரு இயக்கததுக்குச் சார்பான பள்ளி என்று இந்த நாட்டில் அறபு றியால்களை அள்ளி இறைக்க என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பெரும்பான்மையினர் மத்தியில் எம்மைப்பற்றி தப்பபிப்ராயங்களும் சந்தேகங்களும் ஆரம்பிக்கத் தொடங்கியது.

நாம் இந்த நாட்டிள் உள்ள சட்ட திட்டங்களை அவமதித்து ( ) மார்க்கப்பாடசாலைளுக்கு வழங்கிய சட்டங்களை பயன்படுத்தி அறபு றியால்கலால் மார்க்கப் பாடசாலை என்ற பெயரில் தெருவுக்கொரு பள்ளியும் இயக்கத்துக் ஒரு பள்ளியும் ஒவ்வொரு ஊர்களிலும் கட்ட முற்பட்டதனால் எம்மைக்கண்டு பெரும்பான்மை சமூகங்கள் அஞ்சத் தொடங்கின.

இந்த இயக்கங்களும் அரேபியர்களும் இலங்கையர்களாகிய எம்மை சோமாலியர்களாக எண்ணி எப்பொழுது அரேபிய உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பித்தார்களோ அன்றில் இருந்து எம்மைப்பற்றி தப் அபிபராயங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது.

இந்த தப்பபிப்பிராயங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்புக்களும் இயக்கங்களும் தத்தமது நிறுவனத்திற்கான வெப்சைட்களை ஆரம்பித்து இவர்களது திட்டங்களை அதில் பிரசுரிக்கவும் செய்தது. எத்தனை பள்ளிவாயில்கள் கட்டினார்கள். எத்தனை மாடு உளுகியா கொடுத்தார்கள். எத்தனை கிணறு கட்டினார்கள் என்று முழு விபரத்தையும் அந்த வெப்சைட்களில் பிரசுரித்து தத்தமது இயக்கங்களை அரபிகளின் றியால்களுக்காக விளம்பரப்படுத்த முற்பட்டதனால் ஏனைய சமூகத்தவர்கள் இவற்றைக் கண்டு இந்த நாடு இஸ்லாமிய மதப்படுத்தளுக்கு உட்படுவதாக எண்ணி அஞ்சத் தொடங்கினர். இதன் அடிப்படையில் தான் பெரும்பான்மை சமூகத்திற்கும் எமக்கும் விரிசல்கள் ஆரம்பிக்கத் தொடங்கின.

இந்த விரிசல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு பர்மாவை இந்த நாட்டில் நாம் கூடிய விரைவில் கண்டு விடுவோம். எனவே இந்த நாட்டில் அரபு நாடுகளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் இஸ்லாமிய இயக்கங்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது யாதெனில் தயவு செய்து தொடர்ந்தும் இந்த பள்ளி கட்டும் வேலைகளையும் அரபிகளது உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுப்பதையும் உடனடியாக நிறுத்தி விடுங்கள்.

அரபு நாடுகளை மையமாவைத்து இயங்கும் இஸ்லாமிய இயக்கங்ளிடமும் முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவராலயங்களிடம் இஸ்லாமிய இயக்கங்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் பள்ளிகட்டுவதற்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு எமது நன்றிகள். இதற்கு பிறகு பள்ளிகள் எமக்கு போதும் உங்களால் முடிந்தால் மாட்டு கொட்டில்களைவிட மோசமான நிலையில் உள்ள எமது முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உதவுங்கள். குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு பாடசாலைகளையாவது சகல வளங்களைக்கொண்ட ஒரு பாடசாளையாக அபிவிருத்தி செய்ய உதவுங்கள்.

அல்லது எமக்கு உங்களது உதவிகள் எமக்கு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். அரேபியர் எமக்கு கட்டிய பள்ளிகளை விடவும் நாம் இழந்ததும் இழக்கப்போவதும் அதிகம்.

உங்களது உளுகியாக்கள் எமக்கு போதும் இவற்றை சோமாலியாவுக்கு அல்லது ஆபிரிக்காவுக்கு அனுப்புங்கள். தற்போது சிரியாவில் உள்ள எமது உறவுகளின் வாழ்க்கையை கெட்டி எழுப்ப உதவுங்கள.

உங்களால் முடிந்தால் எமது நாட்டுக்கு என்ன தேவை எமது தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு திட்டங்களுக்கும் தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுத்துங்கள்.

கடந்த 25 வருடமாக தொடரும் யாழ் மக்களின் மீழ் குடியேற்றும் முயற்ச்சிக்கு உதவுங்கள்.

அல்லது அதனை விட்டுவிட்டு அரபு நாட்டு செயற் திட்டங்களை இங்கு நடை முறைப்படுத்த முற்பட வேண்டாம். அரபிகளின் செயற்திட்டங்களையும் அவர்களுடைய றியாழ்களுக்கு வேளை செய்ததன் விளைவுகள் தான் இலங்கையில் உள்ள தவ்ஹீத் அமைப்புக்கள் மாத்திரம் 26 அமைப்புக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் விமர்சித்தும் சமூக ஒற்றுமையையே சீர் குளைத்து விட்டார்கள்.

இவ்வாருதான் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களது விரிசல்களுக்கு அரேபியரின் நிலையான தர்மம் ஒரு சாபமாக மாறி இருக்கின்றது

24 comments:

  1. இவர்கள் மஸ்ஜிதுக்கு பக்கத்தில் மஸ்ஜித்
    கட்டுவதும் (கட்டமுடியாமல் எத்தனை மஸ்ஜித்கள் பாதியில் இருக்கும்போது)எல்லோரும் இயக்கம் ஆரம்பித்து தலைவன் ஆவதும் வசதியாக வாழத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிஷயம்.அறபியின்பணம்(ஸகாத்,ஸதகா,வட்டி)நிறுத்தப்பட்டால்தான் இவர்கள் வேறு தொழில் தேடுவார்கள்.
    அதுவரை இயக்கங்கள் கூடும்.

    ReplyDelete
  2. Wonderful Article ,Arab Riyals are poured in Srilanka to create Wahhabism and Extrimism

    ReplyDelete
  3. எழுத்தாளர் ஹைதர் அலி சமூகத்தை நோக்கிய உங்கள் இதயத் துடிப்பும் கவலையும் புரிகிறது. என்றாலும் குறிப்பாக அரபு நாடுகளையோ தவ்ஹீத் ஜமாஅத்தினரையோ நோக்கி விரலை நீட்டுவது சரியாகாது.உங்கள் கட்டுரை இலங்கையில் முளைத்துள்ள எல்லா இயக்கவாதிகளுமக்கும் பொருந்தும்.
    அரபு நாடுகளிலுள்ள நன்கொடையாளர்கள் நல்லுள்ளம் படைத்தவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே வாரிஇறைக்கிறார்கள்.கேவலம் எமது இயக்கவாதிகள்தான் மூலைமுடுக்குகளிலெல்லாம் பள்ளிவாயல்களைக் கட்டி தனக்கென்றொரு இறப்பர் முத்திரையையும் கடிதத்தையும் வைத்துக்கொண்டு தனது கொள்கையைப் பரப்புவதற்காக பாடுபடுகிறார்கள். சமூகத்தின் கல்வியைப்பற்றியையோ பாடசாலைகளின் வளப்பற்றாகுறையைப்பற்றியோ சிந்திப்பதற்கு இவர்களுக்கு நேரம் கிடைப்பதே இல்லை.
    இயக்கவாதிகளே:பள்ளிவாயல்கள் கட்டி பெனரின் முன்னால் படம் பிடித்தனுப்பியது போதும்.முஸ்லிம்களின் கல்விவளர்ச்சிக்காக செலவழியுங்கள்.அரபு கொடைவள்ளல்களையும் முஸ்லிம்களின் கல்வியின் பின்னடைவைப்பற்றி விளிப்புணர்வையேற்படுத்துங்கள்.அதன்பால் செலவழிக்கத் தூண்டுங்கள்.

    ReplyDelete
  4. intha joakerikatturaiku muttalthan sari kaanban 1915 mudal muslimgalai ipadithan thuvesamaha paarkirargal allah irupathai adiyodu marathavanin katturai palli iruku neraya islam illa samudayathai katti kodukum hyderaligal neraya undu ithu emmadam sammdam koosti kafirudan sugama iruu allah vidam padil kuroo hakku solluvath sari illa enru

    ReplyDelete
  5. இதுதான் உண்மை. பொதுபல சேனாக்கள இந்த அரபு பணங்கள்தான் உருவாக்கின.

    ReplyDelete
  6. Very good article but we cannot change these people they belive in money not in way of Islam. I can't really understand what religion these people in?????????

    ReplyDelete
    Replies
    1. How do you know they believe money? Dawah is utmost priority of every Muslim. Their intention only Allah knows. Don't talk bullshit.

      Delete
  7. அரபு ரியால் வந்துதான் பெரும்பான்மை மக்கள் நம்மீது சந்தேகம் கொண்டார்கள் என்றால்,நாட்டில் பயங்கரவாதப்பிரச்சினை இருக்கும்போதும் அரபு ரியால் வந்தது அப்போது இந்த சந்தேகம் வரவில்லை இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது.இனத்துவேசத்துக்கான காரணம் இதுவல்ல அரசியல் பங்க்ரோத்துக்காரர்களின் வேலை புலிப்பிரச்சினை இருந்தால் இவர்களுக்கு ஒன்றும் கண்ணுக்கு தெரியாது.அரசியல் லாபத்துக்கு மேட்கொள்ளப்படும் இவ்வாறான வேலைகளை நல்லமல்கள் நடைபெறுவதை குற்றம் சாட்ட யாரும் முன்வர வேண்டாம் கியாம நாளை பயந்துகொல்லுங்கள்.

    ReplyDelete
  8. Mr.Haithar Ali. I appreciate your nice article. You have written the truth. This is our duty to make aware our people the dangers behind the unwantedly built mosques and madrasas. In such mosques, they use loud speakers during prayers and bayan which indeed is a big disturbance specially to non muslims. I don't know why they do so. This all happens after the arrival of such organizations. Pls write more regarding it to make our people aware of it.

    ReplyDelete
  9. My comment on this article has not been posted .... ? Double standard ?

    Calling the people to TAWHEED / Worshipping one God is compulsory. If the ARABS in the past have not done it.. Most of us in SriLanka will be in KUFR today. IF the ARABS and Us do not call non-muslims toward Islam today.. in future the KUFR will continue to dominate.

    Blaming the ARABS for helping our religion in this land blindly.. is leading and supporting KUFR.

    You may love this world and wanted to satisfy the Kuffar and live without worrying DEEN and DAWA field. It the HUBBUD DUNYAA which prevent you from writing against to spreading the DEEN of Allah. But it is not what Islam and it is not for why you have been created.

    Fear Allah for using you pen against the spread of ISLAM. If you still continue.. Insha Allah we will be witness over you on the day of judgement.

    NOTE:

    1. Those who take the money from ARABS and achieving their worldly benefit ( very few in numbers ) will have to face Allah too.
    2. Those who spread the SOOFI religion instead of way of SAHAABA (ral) also will have to face Allah for their crime.
    3. Those who compromise their DEEN for the sake of satisfying kuffar and love this world more than their DEEN will also have face Allah.

    INSHA ALLAH./

    May Allah guide toward the WAY OF MUHAMMED (sal) and HIS COMPANIONS, Protect us from all DEVIATED SECTS and people of HUBBUD DUNYAA.

    ReplyDelete
  10. SANDEGAME ILLAI ORU KABUR WANANGIYIN KAWALAI INDHA MADAL

    ReplyDelete
  11. This Haidar Ali always thinking like a Hindu RSS & BBS...
    What you want to tell...? How you know these all moments are getting Riyals from Arab Countries...?
    Sure you are the real agent of RSS & BBS....Damn

    ReplyDelete
  12. Hyder Ali,
    Da'awa is a must on every Muslim, it is not correct to say these things are happening due to Riyals and Dirhams, Millions of Riyals spent in Government project as well why cant you mention those and what about SHEA Iranian spending a lot to SHEA and THAREEKAS why these thing are being ignored,
    We must proud at least these stage people get to know about Islam in it's right way.
    I don't support for any grouping Even Thaweheed Jamaat or Tableeq Jamaat, Islam never teach us to be seperated by groups but we all should know about ISLAM and we shall not harm our community by raising any unwanted article like yours here
    Hope you understand

    ReplyDelete
  13. அரபு நாட்டு பணங்களை இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கும் மீள்குடியேற்ற பணிகளுக்கும் பயன்படுத்துவதட்கு முயற்சி எடுப்பது ஒரு விவேகமான செயலாக அமையும் .

    ReplyDelete
  14. Who is responsible for the wave of oppressions against Islam in SriLanka?? I wish I have a simple answer. However,with all due respect, I do not agree with the author. Eventhough, many mosques built, many Islamic organisations function, it is all good- people have better knowledge nowadays. The above are not the reasons for the oppression. Jealousy, racial mentality, selfishness are the reason. It is really sad when Muslims become cowards and blaming on other Muslims.

    ReplyDelete
  15. கல்வியைப்போன்று மதவிடயங்களிலும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் காரனம் நமது நாடு மூவினங்களை கொண்டது மட்டுமல்லாது பௌத்தர்கள் எந்த மூலைமுடுக்கிலும் முதலில் விஹாரைகளை அமைத்து அதன்பின் மக்களையும் மற்றவிடயங்களையும் முன்னெடுப்பார்கள் அது முஸ்லீம்கள் தனித்துவாழும் பிரதேசமாக இருந்தாலும் சொல்லும் காரனம் தொல்பொருல் ஆராட்சி ஆனால் ஆராட்சி ஆட்சியாக மாற்றம் பெரும் எனவே கருத்து எழுதியுள்ள சகோதரர்கள் குருகிய வட்டத்திற்குல் நின்று பள்ளிவாயல்கள் கட்டுவது பிழையென்ரு நினைக்காது பௌத்த நாட்டில் நம் அடுத்த சந்ததினரையும் நினைத்து வாழ்வோம்.....

    ReplyDelete
  16. thableeg jamath is not group . it is showing this ummah the duty of what we not doing or left behind . where our all success is left behind.

    ReplyDelete
  17. அன்பான சகோதரர்களே நாம் இப்போதிக்கும் இந்த பூகலத்தில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமும் அடாவடிகளும் சண்டை சச்சரவுக்களும்தான் இருக்கிறது.ஆனால் நம் சகோதரர்களின் கருத்தை பார்த்தால் உலக முஸ்லிம்கள் அமைதியாக வால்வதுபோலும் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் வண்சிக்கப்படுவதுபோல் சிந்திக்கிறார்கள்.உண்மையாகவே இது முச்ளிம்களுக்கன்று திட்டமிட்டு முஸ்லிம்களின் மிகப்பரம எதிரிகளான யூதர்களால் மிக நுட்பமாக வழி நடத்தப்படும் நிகழ்ச்சி இதனை நாம் எவ்வாறு முகம் கொடுத்து முறியடிக்க முடியும் என்ற சிந்தனையை மறைத்துக்குண்டு நாம் இயக்கச்சன்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம்.அரபு நாடுகளின் பணத்தில் பள்ளிகள் கட்டப்படுவதால் பிரச்சினையை ஏற்ப்படுத்திகிறார்கள் என்றால் ஈரானின் பணத்தால் பரப்பப்படும் ஷியா கொள்கைக்கு ஏன் இந்த பெரும்பான்மை எதிர்ப்பை காட்டவில்லை.இதிலிருந்து நாம் விளங்கவேண்டும் இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடக்கிறது.டொலர் யூரோவின் கூலிப்படைகளின் அடாவடிக்கு ஒரே மருந்து நாம் ஒரே சமுதாயமாக ஒன்றுபடுவதுதான் .

    ReplyDelete
  18. Good article. But it doesn't cover the whole issue we are facing today. And another point is that it is biased in its search for self criticism. History , politics , religion , culture ,change in global situation about religions in general civilizations and few more facts need to be taken into account before putting all blames on one side of the issue. It is true that some religious organizations or all, must take more
    responsibility than others for leading the community into a
    disastrous situation in the name of religion . They virtually made everyone a religious animal ! Didn't our prophet say that the best generations are " my generation ,the next and the next?" . In the name of religion , these organizations are
    disconnecting the community from the rest of the world instead of finding ways to strengthening the connections. The next thing that's ignored in the article is that there's a dangerous racist section in the majority community against all minority communities supported by some political and religious sections . They are just waiting for a chance to jump at us on a simple excuse, right or wrong. It is not only about how much we are doing or not doing , also about how much they are doing to live and let live ! The present regime is taking steps to correct these situations and we must cooperate with them in all their endeavours.

    ReplyDelete
  19. Most of the genuine people will extend their support to you for your good writing. Never stop writing the truth. Only the direct beneficiaries of the Riyals are against your writing. Don't mind these money minded fellows. They never think of our society. Whatever happens to our society, they won't worry. They want only money.

    ReplyDelete
  20. nangal ondrum arasanga anumati illamalo.. maravarkalin idamkalilo palli wasal katta villi. izi alutiyavar solhirar innoru barmavai uruvakka vendam andru.. muzalil burmavil appadi piratchinai vantazu andru unkalukku teriyuma.. summa neenka azatku aduttalum ivvari muditchu poda vendam.

    ReplyDelete
  21. mind your own business MR Haider Ali.

    ReplyDelete

Powered by Blogger.