68 வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஆற்றிய உரை
(ஆதில் பாக்கிர் மரைக்கார்)
நான் வட மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது சிவா என்ற ஒரு நபரை சந்தித்து கதைத்தேன். அப்போது அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்:
நான் வட மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது சிவா என்ற ஒரு நபரை சந்தித்து கதைத்தேன். அப்போது அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்:
'மற்றவர்கள் என்னை தங்கள் சொந்தங்களாக கருத்தில் கொள்வதையே நான் விரும்புகிறேன். நாங்கள் பல ஆண்டுகளாக இந்நாட்டின் இந்த பகுதியில் வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல்; இந்த இடத்தையே சேர்ந்தவர்கள். இங்கு எங்களுக்கு அதிக வாய்ப்புக்களை நல்குவதன் மூலம் நாங்களும் உள்வாங்கப்பட்டு கண்ணியப்படுத்தப் பட்டுள்ளோம் என்பதை நாம் உணர வேண்டும்'
சிவாவும் தன் தலைமுறையில் உள்ள பலரை போன்று 27 வருட பயங்கரவாத போர் வடுக்களையும், வலியையும் கடக்க முயற்சிப்பவன். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்ட பிரகாரம் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் சமரசம் மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு தளமாக உள்ளது. இது தேசிய சட்ட இயறு;றுனர்களுக்கான திறமைச் சபையாக பணியாற்றுவதோடு இளைஞர்கள் தேசிய அடிப்படையிலான முடிவை எய்துவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையையும் வழங்குகிறது. புதிதாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள செனட் அரங்கு பன்முகத்தன்மைக்கொண்ட உள்ளடக்கத்தை மேலும் வளர்த்துள்ளது. இவ்விளைஞர் பாராளுமன்றமானது இலங்கை இளைஞர்கள் தமது திறன், கொள்கை நிபுணத்துவம், தலைமை பண்பு மற்றும் குடிமை மதிப்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழியாகவும் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் தலைமையிலான 10,000 அமைப்புக்களின் உள்ளடக்கத்துடன், நாம் நமது சமூகங்களில் செயல் பங்காளிகளாக ஆகியுள்ளோம்.
நாட்டின் முன்னாள் குழந்தை போராளிகள் குற்றவாளிகளாக இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் சமூகங்களோடு மறுஒருங்கிணைப்பு செய்யப்படடுள்ளதையிட்டு நாம் மகிழச்;சியடைகிறோம். இது தேசிய சமரசத்திற்கு மிக முக்கியமாக திகழ்வதோடு மறுவாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை ஒட்டு மொத்த சமூகத்தடன் சேர்த்துக் கொள்வது ஒரு சவாலாகவே உள்ளது. முடிவெடுத்தல் விடயத்தில்; இளைஞர்களின் ஈடுபாடு தொடர்பான நமது அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலான கண்ணோட்டம் மற்றும் மனோபாவம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இளைஞர்கள் பல விடயங்களில் பங்கேற்று பங்களிப்புச் செய்ய காத்திருக்கிறார்கள் என அவர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இளைஞர்களை சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபடுத்தி அவர்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் சிறந்த கொள்கை வகுத்தல் மற்றும் செயல்படுத்தல், இன்னும் கொள்கை மதிப்பீட்டு இடைவெளிகளை நிரப்புதல் ஆகிய வி;டயங்களை அடையலாம் என்று கொள்கை வகுப்பாளர்களிடம் நாம் கூறியுள்ளோம். எங்களை ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே எமது அதிருப்தியை, எதிர்பார்ப்புக்களை மற்றும் நம் அன்றாட அனுபவங்கள் அல்லது கல்வி, சுகாதார, தொழிலாளர் சந்தை தொடர்பான பிரச்சினைகளை, அபிலாஷைகளை புரிந்து கொள்ள முடியும் என அவர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.
இந்த உணர்தலால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டள்ளன. ஓன்று, இலங்கை தேசிய இளைஞர் கொள்கை திறந்த தேசிய, பன்முக பங்குதாரர்; ஆலோசனை என்ற செயல்முறை மூலம் மீளாய்வு செய்யப்பட்டு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பை விட முற்போக்கானதொரு தொழில் பயிற்சி திறன்கள் அபிவிருத்தி தரத்தை மேம்படுத்தல் உட்பட்ட, தரமான கல்வி முன்னேற்றத்தை அது அங்கீகரிக்கிறது. இன்னும் பாலியல் சுகாதாரம், கல்வி மற்றும் இனப்பெருக்க உரிமைகள் மீதான ஒரு பெரும் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.
இரண்டாவது, 2014ல் இலங்கையில் இளைஞர் உலக மாநாடு ஒன்றை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பிராந்தியத்தில்; இளைஞரகளுக்கான முதல் உலக மாநாடு என்ற அடிப்படையில், உண்மையில் இலங்கை மற்றும் ஆசியாவில் ஒரு முக்கிய தருணமாகும். இளைஞர் உலக மாநாடானது மில்லனியம் (சகத்திராண்டு) முன்னேற்ற குறிக்கோளை பரிசீலனை செய்து 2015க்கு பின்னான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் இளைஞர்கள் பங்கு வழிவகை கொள்கையின் உருவாக்கம் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை கலந்து ஆலோசிப்பதற்கான அனைத்து பங்குதாரர்களின் ஒரு அர்த்தமுள்ள மேடையாக இருக்கும. இது இலங்கைக்கு அப்பால் உள்ள தங்கள் சகாக்களை சந்தித்து இணைந்தியங்க இலங்கை இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்பபாயும் அமையும்.
இவ்வுலகம் மென்மேலும் பின்னப்பட்டு செயல்படும் அதே வேலை எங்களது கூட்டான பகிர்ந்த சவால்களோடு வலம் வரும் இத்தருனத்தில் எமக்கான வலுவான தலைமை முக்கியமாகும். விருப்பார்வம், ஈடுபாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் இளைஞர் நலன் இன்னும்; சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் நாம் ஒத்தழைப்பதற்காக எங்களுக்க உதவும்படி எங்கள் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கிடம் நாம் தொட்ந்தும் கோரிக்கையிடுவோம்.
இலங்கையில் சமாதானத்தை அடுத்து புதிய வாய்ப்புகளுக்கான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை இளைஞர்களிடம் மகத்தான ஆற்றல் உள்ளது. பொதுவான இலக்குகளை அடைவதற்கு நாம் சவால்களை எதிர்கொண்டு, முன்னோக்கி நகர தேவையான உறுதியும் விரிவாற்றலும் எம்மிடம் உள்ளது.


Post a Comment