புத்தளத்திற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விரைந்தார் - பதற்றம் நீடிப்பு
(Tm) வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புத்தளம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எனினும், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஸ்தலத்திற்கு விரைந்து இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
எனினும், வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டமையினால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தொடர்வதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

.jpg)
மாகானசபைகளுக்கான தேர்தல் முடிந்தவுடன் தேர்தலகள் ஆணையாளர் நாட்டு மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார் அதனை அவர் மானசீகமாக நிறைவேற்றுவாரா?மாகானசபைகளுக்கான தேர்தல் முடிந்தவுடன் தேர்தலகள் ஆணையாளர் நாட்டு மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார் அதனை அவர் மானசீகமாக நிறைவேற்றுவாரா?
ReplyDelete