Header Ads



மாகாண சபைத் தேர்தலில், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் முன்வைத்த செய்தி என்ன..?

(J.M.Hafeez)

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முஸ்லீம்கள் மத்தியில் பல்வேறு பட்ட அபிப்பிராயங்களைக் காணமுடிந்தது. அதில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் எடுத்துக் காட்டப்பட்டன.

1.    இனவாதம்
2.    ஓற்றுமைப்படாமை
3.    வாக்குச்சிதரல்
4.    பேரின கட்சிகளின் செல்வாக்கு
5.    ஸ்ரீல.மு.கா. வருகை என்பன முக்கிய மாகும்.

இவை அனைத்தும் நுணிப்புல் மேய்பவர்களுக்கு சரியாகத் தோன்றுவதாகவும் ஆழமாகப் பார்க்கும் போது அவை வேறு தகவல்களைத் தாங்கி நிற்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய மாகாணத்தையும் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பின்வரும் சுருக்கத்தை பார்ப்போம்.

ஏற்கனவே ஆளும் தரப்பில் இருந்த மூவரையும் எதிரணியிலும் ஒருவரை இழந்து முன்னர் ஐந்தாக இருந்த பிரதி நிதித்துவம் தற்போது மூன்றாகி உள்ளது. அதே நேரம் ஆளும் தரப்பில் ஒருவரும் இல்லை. எமது பிரதேச அபிவிருத்தி தடைப் படும். எனவே கூட்டு மொத்தமாகத் தோல்வி என்று சிலர் அடித்துக் கூறுகின்றனர்.

ஆனால் நிலைமை அப்படி அல்ல. கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் நிலைப்பாடு வேறு விதமானது-
ஆளும் தரப்பில் இருந்த மூவரில் இருவர் போட்டியிட்டு உள்ளே சென்றது ஐக்கிய தேசிய கட்சியிலாகும். பொருத்த மற்ற சந்தர்ப்பத்தில் கட்சி தாவினர். இதனால் சங்கடத்திற்குள்ளாகினர்.
ஆனால் ஐ.ம.சு.கூட்ணியில் தெரிவான ரிஸ்வி பாரூக்கின் நிலைமை சற்று வித்தியாசமானது. கடந்த மாகாண சபையிலும் அவர் முதல் அறிவிப்பிலே உள்வாங்கப்பட இல்லை. பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களை அடுத்து முன்னுரிமை அடிப்படையில் உள்வந்தார். அதற்கு இரண்டு வருடங்கள் எடுத்தன. இம்முறையும் அது இன்ஸா அல்லா நடக்கலாம். அதற்கு இரண்டு வருடம் பொறுக்க வேண்டும்.

அத்துடன் ஐ.மு.சு.கூட்டணி பேரினவாதிகளின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள இக்காலத்தில் குறைந்த முஸ்லிம் வாக்குகளால் ஒருவரை முன் கொண்டு வருவது நடை முறைச் சாத்தியம் அற்றது.
மற்ற இருவரைப் பொருத்தவரை அவர்களது வாக்குப் பலம் அவர்கள் மேற்கொண்ட சேவையை உறுதி செய்கிறது. கடந்த மாகாண சபையில் முஸ்லீம்களுக்கு வாக்களிக்க தெரிவு என்று ஒன்று இருக்கவில்லை. தமது வாக்கை யாராவது ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். கொடுத்தார்கள். வெற்றி பெற்றவர்கள் பின்னர் அரசுடன் சல்லாபித்தார்கள். அல்லது முஸ்லிம்களுக்கு மனம் நோகும்படி அறிக்கை விடுபவர்கள் பக்கம் இருந்து கொண்டிருந்தார்கள். இதனால் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் காத்திருந்த வேளை சந்தர்ப்பம் தெரியாது காலை விட்டனர். எனவே அவர்கள் பெற்ற சொற்ப வாக்கானது அவர்களைப் பொருத்தவரை மிகப்பெறுமதியானது.
பேரின வாத செயற்பாடுகள் காரணமாக தமது மன உலைச்சலை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாது கண்டி மாவட்ட முஸ்லீம்கள் காத்திருந்த போதுதான் மாகாண சபைத் தேர்தல் முன்வைக்கப்பட்டது.
அதில் முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்துள்ளனர்.
ஆத்திரத்தை பிழையான வழியில் காட்ட முடியாது. ஜனநாயக ரீதியில் புள்ளடி மூலம் காட்ட முட்பட்டனர். காட்டினர். இது எங்கள் சமூகத்திற்கு மத்தியில் எடுபடாவிட்டாலும் பிற சமூகத்தார் மத்தியல் பாரிய சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தியுள்ளது.
கௌரவ அங்கத்தவர் ஆஸாத் சாலி என்பவர் பெரும்பான்மையான கண்டி சிங்கள மக்களுக்கு மத்தியில் நன்கு அறியப்பட்டவர் அல்ல. அப்படியாயின் அவருக்கு எப்படியும் முதலாவது இடம் கிடைக்க முடியாது. ஆனால் அது நடந்தது. அப்படியாயின் முஸ்லீம்களது வாக்கினால் மட்டும் அவர் முதலிடத்திற்கு வந்துள்ளமை தெளிவு. சுருங்கக் கூறின் 60000 மேற்பட்ட முஸ்லீம்கள் ஐ.தே.க.க்கு வாக்களித்துள்ளனர். இது பாரிய மாறுதலாகும்.
முஸ்லீம்கள் ஓரணியில் இணைய வில்லை என்பது தவறு. ஏனென்றால் கண்டி மாவட்டத்தில் 140000 முஸ்லிம்வாக்குகள் உள்ளன. ஒரு வீட்டில் 5 வாக்களர் இருந்தால் இருவர் அல்லது மூவர் வெளி நாட்டில். அப்படியாயின் 40- 50 சதவீத வாக்குகள் வெளிநாட்டில் உள்ளன. எனவே முழு சமுகமும் சேர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களித்ததாலும் 70 000 வாக்குகளைத் தாண்ட முடியாது.

ஏற்கனவே எமது கணிப்பின் பிரகாரம் அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் இருந்த முஸ்லிம்கள் மூலம் 60 000 வாக்குகள் ஐ.தே.க.க்குச் சேரலாம் என யூகித்தோம். அதைத்தான் ஆஸாத் சாலியின் 58 000 வாக்குகள் காட்டுகின்றன. எனவே கண்டி மாவட்ட மக்கள் ஓரணியில்தான் வாக்களித்துள்ளனர்.

அதை விடப் புத்திசாலித்தனம் என்ன வென்றால் கண்டி மாவட்டத்து வாக்களர்கள் அனைவரும் ஸ்ரீல மு.கா. வாக்களித்திருந்தாலும் கூட இருவர் மட்டும்தான் தெரிவாகலாம். அல்லது மிகச் சிரமத்திற்கு மத்தியில் மூன்று பேர் தெரிவாகலாம். இது தற்போதும் நடந்துள்ளது. நாம் இனவாதம் காட்டாது தேசிய கட்சி ஒன்றுக்கு வழங்கி இரு பிரதி நிதிகளைப் பெற்றுள்ளோம்.

சிங்கள மக்களுக்கு மத்தியில் ஆத்திரத்தை கிளரி விட்டு முற்று முழுதாக முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால் இந்த இலக்கை அடைய நாம் பெரிய விலை கொடுத்திருக்க வேண்டும்.
ஆகவே இலகு வான ஒரு வழி முஸ்லிம்காங்கிரஸ் ஆர்பாட்டமில்லாத வகையில் ஓரிரண்டு அங்கத்தவர்களைப் பெறுவது. அதுவும் மிக இலகுவாக நடந்து விட்டது. சுமார் 3500 வாக்குகளுடன் ஒரு பிரதி நிதிகள் தெரிவாகி விட்டனர். அவர் அரச சார்பு  பங்காளிக்கட்சி. எனவே நாம் ஆளும் தரப்பிற்கு வாக்களிக்கவில்லை என்பது தவறு. அரசுடன் இணைந்து கேட்ட மூவருக்கு சுமார் 16000 வாக்குகளை தாரை வார்த்து ஒரு பிரதி நிதியையாவது பெறாத அதே நேரம் வெறும் 3500 விருப்பு வாக்குடன் ஒருவர் தெரிவாகியுள்ளார். விரும்பினால் அவருக்கு மாகாண முஸ்லிம் கல்வி அமைச்சையும் வழங்கலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருக்கு பேரம் பேசவும் முடியும்.

இதே நேரம் அனைத்து முஸ்லிம்களும் ஆளும்கட்சி வாகளித்திருந்தாலும் ஆகக் மூடியது மூவரரத்தான் தெரிவு செய்ய முடியும். ஆனால் கண்டி மாவட்ட முஸ்லிம்களது மன நிலை ஆளும் தரப்பை ஆதரிக்கும் நிலையில் இல்லை, ஏனென்றால் சுதந்திரத்தின் பின் 65 வருட ஆயுளைக் கொண்ட நாம் எமது ஆயுளில் என்றும் காணாத இனவாதம் தாண்டவமாடுகிறது. இதற்கு அரச ஆதரவாளர்கள் நாம் என்ன செய்ய என்று கேட்கலாம். அரச தரப்பில் இருந்து உறுதியான நடவடிக்கை இன்மையும் தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையைக் கிள்ளுவதும் புரியாத புதிர் அல்லவே.

'உடைக்கப்பட்வை பள்ளி அல்ல மத்ரசா என்றவர்களும், நாம் பள்ளிகளைக் உடைக்கவில்லை புதிதாகக் கட்டுகிறோம் என்றவர்களும், முஸ்லீம்கள் செய்யும் தவறை சிங்களவர்கள் பெரிது படுத்துவதில்லை. எனவே பள்ளி விடயத்தில் மட்டும் முஸ்லீம்கள் அதனை ஏன் பெரிது படுத்து கிறீர்கள் என்றவர்களும், முஸ்லிம்களுக்கு ஹபாயா தேவையில்லை. ஹலால் தேவையில்லை' என்று சொன்னவர்களும் சற்று தமது நிலைப்பாட்டை மீள் பரிசீலிக்கக் கூடிய காலம் வந்துள்ளது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் விமல் வீரவங்ச அவர்களது கட்சியின் சார்பாக போட்டி இட்டவர்களும் ஹெல உருமய சார்பாகப் போட்டியிட்டவர்களும் தோல்வியைத் தழுவி உள்ளமை கண்கூடு. மத்திய மாகாணத்தில் விவசாய அமைச்சராக இருந்து மிக முன்மாதிரியான சேவையைச் செய்த நிமல் பியதிஸ்ஸ நுவரெலியாவில் தோல்வி அடைந்துள்ளார். இங்கு அவரது உயரிய சேவை குணப்பண்புகளை அவர் சார்ந்த ஜனநாயக ஐக்கிய முன்னணி பின்தள்ளியுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற விமல் வீரவன்சவின் பீரங்கிப் பேச்சுக்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இதுகாட்டுகிறது. அதேபோல் ஹெல உருமய கட்சியயைப் பிரதி நிதித்துவப் படுத்திய கண்டி மாவட்ட அங்கத்தவரும் ஏனைய பல அங்கத்தவர்களும் தோல்வி கண்ட நிலையில் சிங்கள மக்கனாலே அவர்கள் பின்தள்ளப் பட்டுள்ளனர். துசார சுவர்ணதிலக பகிரங்கமாக தான் தமது இனத்தின் உரிமை சார்பாக பேசுவதாகவே ஒவ்வொரு கட்டத்திலும் கூறினார். அதேபோல் இன்னும் சிலர் முஸ்லீம்களை வம்புக்கிழுக்காது அமைதியாக அடக்கிப் பேசிய இடமே இல்லை. அப்படியான வர்களையும் சிங்கள மக்களே உதரித்தள்ளியுள்ளனர். எனவே இனவாதம் எடுபடவில்லை. ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி சில இடங்களில் இனவாதம் பலவந்தமாகப் புகுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எதிர் காலத்தில் இத்தேர்தல் முடிவுகளின் விளைவுகளை மீள் பரிசிலனை செய்து கொள்ள முடியும்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்ச்p சார்பாக போட்டி இட்ட இரண்டு சகோதர தமிழ் பேசும் அபேடசகர்களான வேலுகுமார் மற்றும் எஸ்.இராஜரட்னம் ஆகியோர் இணைந்தே தமது பயனத்தை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் சமசமான வாக்குகள்பெறும் சந்தர்ப்பமே காணப்பட்டு. இதில் இராஜரட்னம ஒரு தொழிற் சங்கவாதி. ஏற்கனவே கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவாராக இருந்தது மட்டுமல்ல மாகாண சபையையும் பிரதி நிதித்துவப் படுத்pய அனுபவம் பெற்ற அரசியல்வாதி. நாலு பேரை நன்கு தெரிநிந்தவர். ஆடிக்கடி தமது இனம் சார்பாக மாகாண சபையில் ஒலித்த குரல். இருப்பினும் அவரைப் பின்தள்ளி வேலு குமார் எப்படி முன்வந்தார் என சிந்தித்தால் பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள்ளமுடியும்.

வேலு குமார் இறுதிக்கட்டத்தில் ஆஸாத் சாலி உடன் இணைந்து அறிக்கை விட்டார். வாக்குகளை பங்கீடு செய்து கொள்ளும்படி மனோ கனேசனுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்தனர். இது தவிர தனது மதிப்பிற்குறிய முஸ்லிம் மாணவர்களையும் அவர் அரவணைத்தார். அவரது சகல விளம்பரங்களிலும் முஸ்லிம் சார்பு ஊடகங்களை அவர் கைவிட வில்லை. இதன் காரணமாக கணிசமான முஸ்லிம் வாக்குகள் அவருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

இதன் காரணமாகவும் வேலு குமார் என்ற புது முகம் முன் கொண்டு வர முஸ்லிம்களது பங்களிப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். எனவே இன பேதமற்ற முஸ்லிம் நண்பர் வேலு குமாரது வெற்றியிலும் முஸ்லீம்கள் பங்காளியாக இடமுண்டு.

சுமார் 12000 வாக்குகளுடன் ஒரு அங்கத்தவரையாவது பெற முடியாது போய் இருந்தால் ஸ்ரீல.மு.கா. தலைவரின் தொகுதி பற்றி விமரிசனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்திருக்கும். அதனையும் கண்டி மாவட்ட மக்கள் காப்பாற்றியுள்ளனர். முஸ்லிம்களுக்காக் குரல் கொடுத்தார் என்ற ஒரு காரணத்திற்கு மட்டும் ஆஸாத் சாலியை உச்சணி ஏற்றி வைத்தனர். இது எதிர் காலத்தில் எமது ஏனைய முஸ்லி; தலைவர்களுக்கு ஒரு சிந்தனைச் சிதரலை ஏற்படுத்தா விட்டால் அது தான் சமூகத்தின் தோல்வியாகும். சுந்தர்ப்பம தெரியாது சுகபோகத்திற்காக கட்சி மாறியவர்களும் தம்மை சுய பரிசிலணை செய்து கொள்ள வேண்டும். ஆதை விட முக்கிய மாக தமது சுயநலத்திற்காக பக்க வாத்தியம் போடட அரசியல் பிரபலங்களும் தம்மை சுய விசாரணை செய்து கொள்ள வேண்டிய முடிவையே கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்களர்கள் முன்வைத்துள்ளனர்.

கண்டி மாவட்ட முஸ்லீம்களைப் பொருத்தவரை இனவாதம்,வாக்குச் சிதரல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வருகை, என்பன ஒருகாரணமாக இல்லை. ஐ.தே.க. சார்பாகப் போட்டி இட்டவர்களது எண்ணிக்கை 3-4 ஆக இருந்திருந்தால் இதனை விட பாரிய வெற்றியை அடைந்திருக் முடியும்.

No comments

Powered by Blogger.