Header Ads



மு.கா. உயர்பீடம் நாளை கூடுகிறது - பசீர் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இல்லை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அக்கடசியின் தவிசாளராக உள்ள பசீர் சேகுதாவூத் குறித்து ஆராய்வதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சில ஊடகங்கள் முஸ்லிம் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய முயலுகின்றன. அதற்கு நாம் இடமளிக்க கூடாது. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸில் பிளவு ஏற்படுவதை கட்சிப் போராளிகள் விரும்பமாட்டார்கள். அதேநேரம் கட்சிக் கட்டுப்பாடும் மிகமுக்கியமானது.

நாளை நடைபெறவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்  உயாபீடக் கூட்டத்தில் எவரும் ஹக்கீம் - பசீர் விவகாரம் குறித்து எவரும் பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பசீர் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. "World is a stage where people are all actors." Shakespeare is not wrong.People who have
    learned skills,should not use it against the people who are depending on them for safety
    and survival.

    ReplyDelete
  2. It does not make any differnce on the community wheather SLMC exist or not. Definitely SLMC is useful for few persons.In in a way it might be useful, IF SLMC is erased, at least out side world will not be misguided by Rauf Hakeem on the issue of Muslim Community of Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.