'முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும் போது ரவூப் ஹக்கீம் குரல் கொடுக்கவில்லை'
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
மஹரகமவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளுமன்றத்தில் வழங்கத் தயாராகவுள்ளோம்.
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. எமது நாட்டில் பயங்கரவாதத்தை இந்திய மத்திய அரசும் தமிழ் நாடுமே உருவாக்கியது. இந்நிலையில் தமிழ் பிரிவினைவாதிகள் இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் 13 ஆவது திருத்தத்தை மேற்கொள்வோம் என கூறுகின்றனர்.
இராணுவத்தினர் வடக்கில் ஈழம் மலரவா தமது உயிர்களை தியாகம் செய்தனர். இந்நிலையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபை பிரிவினைவாதிகளின் கையில் போனால் அது ஈழத்திற்கு வழிவகுக்கும். வடக்கு மாகாண சபையை பிரிவினைவாதிகள் கைப்பற்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
இதேவேளை, இவ்வளவு காலமும் முஸ்லிம் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும் போது குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரவூப் ஹக்கீம் இப்போது 13 க்கு ஆதரவாக கூக்குரல் கொடுக்கின்றனர். மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா மற்றும் சிங்க ராவய போன்ற 27 க்கு மேற்பட்ட பௌத்த அமைப்புக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. vi
.jpg)
So you accepted what you have done is wrong for Muslims up to now with bbs, now our politicians also will accept it as you.
ReplyDeleteஅப்படியானால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததை அமைச்சர் ரணவக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அப்போது அமைதி காத்து விட்டு இப்போது ஏன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது?
ReplyDeletemr sambika first of all wash your mouth.then talk
ReplyDeleteஇனவெறியன் உன்போன்ற மிருகங்களை சரியாக வளர்க்கவில்லை உனது பெரியோரிகள் உனக்கு மனிதர்களுக்கு கற்றுத்தரும் கல்வியைக்கற்றுத்தரவில்லை மாறாக நீ மற்றய சகோதர்களுடன் சண்டையிட்டு வாழ்வதையே கற்றுத்தந்துள்ளார்கள் அல்லது நீயே அவ்வளியைத்தேர்ந்தெடுத்துள்ளாய். நீ மனிதன் இல்லை மிருகம் உனக்கு மனித உணர்வுகள் புரியாது.
ReplyDeleteஅப்படியானால் முஸ்லீம்கள் அநியாயமிலைக்கப்படுகிறார்கள் என்று ஒப்புக்கொள்கிறான் (ஆடு நணைவதை பார்த்து ஓநாய் அளுகிறது!
ReplyDelete