Header Ads



நோன்பு நிய்யத்தின் குளறுபடிகள் - புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 9)

ஒவ்வொரு அமல்களுக்கும் நிய்யத் உள்ளது. நிய்யத் இல்லாமல் எந்த அமலும் இல்லை. நிய்யத் என்றால் (மனதால்) நினைத்தல். 

இன்று நமது பழக்கத்தில் உள்ளது போல தராவீஹ் ன்ற தொழுகையை தொழுத பின் மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ளார்களா? என்றால் நிச்சயமாகக் கிடையாது. நபி (ஸல்) அவர்களும் நோன்பு பிடித்தார்கள். ஸஹாபாக்களும் நோன்பு பிடித்தார்கள். நபி (ஸல்) அவர்ள் சொல்லிக் கொடுக்க ஸஹாபாக்கள் சொன்னார்களா என்றால், அப்படி எந்த செய்தியும் கிடையாது. 

நபி (ஸல்) அவர்களால் சொல்லித் தரப்படாத ஒரு செயல் அமலாக முடியாது. நம்மால் ஏவப்படாத ஒன்றை யார் அமலாகச் செய்கிறாரோ, அது அவரின் பக்கமே திருப்பப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஒரு அமலுக்கு நிய்யத் என்பது முக்கியமானது. அதை நபியவர்களின் வழியில்தான் நாம் நிறைவேற்ற வேண்டுமே தவிர, நல்லது தானே என்று பாவத்தின் பக்கம் செல்லக் கூடாது.  இன்று ரமழான் காலங்களில் சொல்லிக் கொடுக்கப்படும் நிய்யத் சரிதானா? என்பதை அவதானிப்போம். 

மௌலவிமார்களால் சொல்லிக் கொடுக்கப்படும் நிய்யத் இதுதான். 

இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன் அல்லாஹ்வுக்காக என்று மூன்று முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட நிய்யத்தில் எவ்வளவு பிழை என்பதை அவதானியுங்கள். 

முதலாவது நாளை பிடிக்க என்ற ஒரு வாசகம் இடம்பெறுகிறது. நாளை என்று சொல்லும்போது இன்ஷா அல்லாஹ் என்ற வாசகத்தை சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். இதை குர்ஆனில் அல்லாஹ் நபிக்கே சொல்லிக் காட்டுகிறான். 

அல்லாஹ் நாடினால் (என்பதை சேர்த்தே) தவிர நாளை நான் இதைச் செய்வேன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்...! (18:23) 

நானை என்று கூறும்போது நபி (ஸல்) அவர்களுக்கே இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால், நாம் அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சற்று சிந்தியுங்கள். 

இப்போது கூறுங்கள், நீங்கள் உருவாக்கிச் சொல்லும் நிய்யத் சரியா? பிழையா? குர்ஆனுக்கு முரணாக உள்ளதா? இல்லையா? சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். 

இரண்டாவது பிழை

நாளை என்று கூறுவதின் மூலம் மற்றொரு மிகப் பெரிய பிழை என்னவென்றால், அதே நாளில் இருந்து கொண்டு நாளை என்று கூறப்படுகிறது. உலமாக்கள் சிந்தனயாளர் என்று கூறுகிறோம். ஆனால், அதிகமான மார்க்க விடயத்தில் அலட்சியமாகவும் பொடுபோக்காகவும், சிந்தனையின்றி செயலாற்றவதைக் காணலாம். 

பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள், பிழையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்றால், அன்றைய மஃரிபிலிருந்து அடுத்த நான் மஃரிப் வரை ஒரு நாள்தான். அதாவது நாம் வழமையாக சூரிய கணக்கின்படி தான் பேசுகிறோம். அதனால் மறுநாள் அல்லது நாளை என்று சொல்வது வழக்கம். ஆனால் நோன்பு என்பது சந்திரக் கணக்குப்படி பிடிக்கிறோம். அப்படியானால், அன்றைய நாளில் இருந்து கொண்டு எப்படி நாளை என்று சொல்ல முடியும். ஏன் என்றால், இரவு 9 மணியளவில் இந்த நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பிறை கணக்குப்படி அதே நாளில் இரந்து கொண்டு எப்படி நாளை என்று கூற முடியும். 

மூன்றாவது பிழை

சூரியக் கணக்கின் படி பார்த்தாலும் ஒருவகையில் பிழையாக வருகிறது. அதாவது, ஸஹர் நேரத்திலும் இந்த நிய்யத்தை திரும்பவும் சொல்கிறார்கள். சூரியக் கணக்கின்படி இரவு 12 மணிக்கு நாள் உதயமாகிறது. அப்படியானால், அதே நாளில் நாளை பிடிக்க என்று எப்ழபடி சொல்ல முடியும். சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். எனவே எப்படிப் பார்த்தாலும் நோன்பு நிய்யத் பிழையாகவே அமைந்துள்ளது. 

ஆகவே நான் அல்லாஹ்வுக்காக நோன்பு பிடிக்கிறேன் என்று மனதால் எண்ணிக் கொள்வதே நிய்யத்தாகும். சரியானதை சொல்வோம். பிழையானதை விட்டு விடுவோம்.

கேள்வி – 1 நிய்யத் என்றால் பொருள் என்ன?

கேள்வி – 2 அல்லஹ் நாடினால் (என்பதை சேர்த்தே) தவிர நாளை நான் இதை செய்வேன் என்று எதைப்பற்றியும் கூறாதீர் என்ற குர்ஆன் வசனம் இடம் பெற்ற அத்தியாயத்தின் இலக்கக்தையும், வசனத்தின் இலக்கத்தையும் குறிப்பிடுக.

No comments

Powered by Blogger.