Header Ads



கோள்களின் அதிசயம் - ரமழான் முத்துக்கள் (கேள்வி 4)

நாம் அனைவரும் உலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராமலேயே நமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த கட்டுரையை வாசிக்கும் போதும் பயணித்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.  என்ன புரிய முடியாமல் தடுமாறுகிறீர்களா?  இது புரியாத புதிரல்ல. நாம் அனைவரும் அறிந்த விடயமே...

பூமி தன்னைத் தானே சுற்றுகிறது. அதனோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. இப்படியாக அனைத்துக் கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

ஆனால் அதை எம்மால் உணர முடிவதில்லை. அந்த சுழற்சி எமது புலன்களுக்கு எட்டுவதில்லை. என்றாலும் செட்லைட்கள் மூலமாகவும் போட்டோக்கள் மூலமாகவும் அதனுடைய பயணப்பாதையை கண்டு நம்ப முடியாத நிலையிலும் நம்பித்தான் ஆக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுக்கும். இதனையே நமது மொழி வழக்கில் 'நாள்' என்று கூறுகின்றோம். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுக்கும்.  இதனையே நமது மொழி வழக்கில் 'வருடம்' என்று கூறுகின்றோம். 

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுடம் 21ம் நூற்றாண்டில் வாசிக்கும் எமக்கு பாலர் பாடசாலை கல்வியாக இருந்தாலும் திருக்குர்ஆன் அருளப்பட்ட 6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த அறிஞர்களுக்கு கூட புரியாத புதிராகத் தான் இருந்தது. அந்த வேளையில் எழுதத் தெரியாத, எழுதியதைப் பார்த்து படிக்கத்தெரியாத , நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் 21ம் நூற்றாண்டு அறிஞர்களே, ஆச்சரியப்படத்தக்க வசனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான்...

'சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.' (சூறா யாசீன் 36:40)

இத்திருமறை வசனம் சூரியன் சந்திரனை நெருங்கிப்பிடிக்க முடியாது என்ற விடயத்தையும் இரவு, பகலை முந்தாது என்ற பேருண்மையை சேர்த்து கூறுகிறது.

அந்த அடிப்படையில் சூரியன் சந்திரனை பிடித்து விட்டால்...

இரவு பகலை முந்தி விடும்! என்ற உண்மையை புரிந்து கௌ;ள முடிகின்றது. 
அப்படியென்றால் சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாத அமைப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்றதாக திருக்குர்ஆன் கூறுகிறது. அதாவது சூரியனை விட்டு சந்திரன் வெகு தொலைவில் இருக்கிறதாக திருக்குர்ஆன் மறைமுகமாக சொல்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால்....

வெறும் கண் பார்வையாலேயே தூரத்தை தீர்மானிக்கின்ற 6ம் நூற்றாண்டு மக்கள் சூரியனுக்கும் நமக்கும் எந்த அளவு தூரம் இருக்கின்றதோ அதே அளவு தூரம் தான் நமக்கும் சந்திரனுக்கும் இருக்கின்றது. என்றே நம்பி வந்தார்கள். இன்றைக்கு கூட கண் பார்வையால் தூரத்தை நிர்ணயிப் போமேயானால்; சூரியனும் சந்திரனும் நம்மிலிருந்து ஒரே தூரத்தில் இருக்கின்றது என்ற முடிவுக்கே வருவோம். ஆனால் விஞ்ஞானம் கூறும் விதத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சுமார் 1,50,000 கி.மீற்றர் என்ற முடிவுக்கே வந்திருக்க மாட்டோம். 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இவ்வளவு தொலைவு இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும் நிரூபித்துக்காண்பிப்பதற்கு எந்தவொரு கருவியும் இல்லாத காலத்தில் இவ்விடயத்தை மக்கள் எப்படி நம்புவார்கள்? நம்புவது ஒரு புறம் இருக்கட்டும். இந்தளவு தொலைவு என்று நிரூபிப்பார்கள்? 
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களை நாம் ஆராய்வோமேயானால், அனைத்தையுமே நன்கறிந்த ஏக இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் அக்காலத்தில் இவ்வளவு தெளிவாக இதை சொல்ல முடியாது என்ற முடிவுக்கே வருவோம்.

சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது என்ற உண்மையை அவை இரண்டுக்கும் இடையிலான தூரத்தை கருத்திற் கொண்டே குறிப்பிட்டோம். இந்த ஒரு காரணம் மாத்திரம் சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதல்ல.  

ஏனெனில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருந்த போதிலும், சில வேளைகளில் சூரியன் சுற்றும் வேகம் அதிமாகி விட்டால் சூரியனுக்கும் சந்திரனுக்கும்; இடையிலான தூரம் குறைந்து சூரியனால் சந்திரனை பிடித்து விட முடியும். 

அப்படியும் பிடிக்காமல் இருக்க வேண்டுமென்றால், சூரியனால் சந்திரனை பிடித்து விட முடியாத அளவுக்கு கணக்கிட்ட ஒரு வேகத்தை இரண்டுக்கும் கொடுக்க வேண்டும். அப்போது தான் சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்ற வாதம் நிலையாகும். 

அற்புதம் என்னவென்றால், இவ்வாதத்தையும் அல்லாஹுதஆலா பின்வருமாறு சூரா ரஹ்மானில் கூறுகின்றான். 

 'சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)'

இவ்வசனத்தில் கணக்கின்படி இயங்குகின்றன என்ற வார்த்தை எவ்வளவு பொருத்தமாக பயன்படுத்தபட்டுள்ளது என்பதை வாசிக்கும் உள்ளங்கள் உணரும் உண்மையாகும்.

சூரா யாசீனில் 40ம் வசனத்தில் 'யஸ்பஹுன'  என்ற சொல் இடம் பெற்றுள்ளது. யஸ்பஹுன என்றால்  'நீந்துதல்' என்ற பொருள்படும். அதே வசனத்தில் 'பீ(கு)லக்கின்' என்ற சொல்லிற்கு 'தம் வட்டவரைக்குள்' என பொருள் படும்.

இதில் ஆச்சரியத்தக்க விடயம் என்னவென்றால்... 6ம் நூற்றாண்டு மக்களை விடுங்கள். எங்களிடம் இருந்து மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வசித்த ஒரு மனிதரிடம் விண்வெளியில், நாம் வசிக்கும் பூமி நீந்துகின்றது என்று சொன்னால்.... 'உனக்கு என்ன பைத்தியமா?' என்று தான் கேட்பார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வசித்தவர்களுக்கே இதை ஜீரணிக்க முடியவில்லை என்றால்,  14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வசித்த ஒருவர் எப்படி இதை சொல்லியிருப்பார்?

இதை விடவும் ஆச்சரியம் என்னவென்றால், கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் நீந்தவில்லை தனக்கு என்று போடப்பட்ட வட்டவரைக்குள் தான் நீந்துகின்றன என்ற மிகப்பெரும் விஞ்ஞான உண்மையை சாதாரண எழுதப்படிக்க தெரியாத ஒரு மனிதரால் எவ்வாறு சொல்லியிருக்க முடியும். நிச்சயமாக இது படைத்த இறைவனேயன்றி இதை சொல்லியிருக்க முடியாது என்ற  உண்மையை நடுநிலையாக சிந்திக்கும் உள்ளத்திற்கு ஓர் எடுத்து காட்டாக சமர்ப்பிக்கின்றோம்.

1400 ஆண்டுகளுக்கு முன் இவ்விஞ்ஞான உண்மை குர்ஆனில் பேசப்பட்டிருக்கின்றதா? என்று ஆச்சரியப்படலாம். கற்பனை கூடப்பார்க்க முடியாத அந்த காலத்தில் வியத்தகு விஞ்ஞான உண்மைகளை திருக்குர்ஆன் அடுக்கடுக்கா பேசிக்கொண்டிருக்கின்றது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வானவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசியர்கள் எல்லோரும் சிரமப்பட்டு ஆய்வு செய்த விஞ்ஞான உண்மைகளை, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னே மக்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். 

முஹம்மது(ஸல்) அவர்கள் கோள்களின் பயணப் பாதையை கண்டறிவதற்காக இரவு பகல் பாராது அயராது சிரமப்பட்டு ஆய்வு செய்தாரா? வானவியல் ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்பணித்து தியாகம் செய்தாரா?

இவை அனைத்திற்கும் பதில் இல்லை என்பது தான்! வானவியல் சம்பந்தமாக இவ்வளவு துல்லியமான செய்திகளை சரியாக, தெளிவாக சொல்லக்கூடிய ஆற்றல் எம்மைப் படைத்தவனுக்கு மட்டும் இருக்கின்றது என்ற நம்பிக்கை நாம் அனைவரும் உள்ளங்களில் உறுதியாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். 

கிறிஸ்துவுக்குப் பின் 1512 இல் 'நிக்கலஸ் கொப்பர்னிகஸ்' என்ற விஞ்ஞானி அவரது அறிவியல் கோட்பாட்டின் படி கோள்கள் அனைத்தும் சூரியனை மையாமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால் சூரியன் நகர்ந்து செல்லும் ஆற்றல் இல்லாதது என்ற கருத்தை வெளியிட்டார். சில நூற்றாண்டுகளுக்கு முன் புவியியல் பாடத்திலும் சூரியன் சுழலவில்லை. என்ற தவறான கருத்தே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. உங்கள் பாடசாலை பருவத்திலும் இந்த அறிவியல் கருத்தை கற்றிருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

அண்மைக்காலம் வரையிலும் சூரியன் சுழலவில்லை என்ற கருத்து தான் நிலவியது. தற்போதைய ஆழனநசn யுளவசழழெஅல சில வருடங்களுக்கு முன்னே தான் சூரியன் சுழலுகின்றது என்பதை கண்டுபிடித்துள்ளது. இதை திருமறைகுர்ஆன் என்றோ சொல்லிவிட்டது. இப்பொழுது அiதியாக சிந்தித்துப் பாருங்கள்!

இந்த உலகத்தில் எப்படிப்பட்ட அறிஞர் பேசினாலும், மாமேதைகள் பேசினாலும் அனைத்திலுமே பிழைகள் இருக்கும். பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த பிழைகளை திருத்துவார்கள். பெரும் பெரும் பேராசிரியர்கள் கூடி கலந்தாலோசித்து எழுதுகின்ற அரசியல் சாசனங்களையே ஆண்டுக்கு ஆண்டு மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ஆனாலும் திருக்குர்ஆனில் எந்தவொரு பிழை திருத்தத்தையும் செய்ய முடியவில்லை. செய்யத்தேவையுமில்லை. 

இவைகள் எல்லாம் இப்படி இருக்க இவ்விஞ்ஞான உண்மைகளை பேசுகின்ற யாஸீன் சூராவை மைய வீடுகளில் ஓதும் சடங்காக நம்மவர்கள் மாற்றி விட்டார்கள். 'உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், நம்மை மறுப்பவர்களுக்கு எதிராக கட்டளை உறுதியாவதற்கும் இதை அருளினோம்' என்று சூரா யாஸீனின் 70வது வசனம் குறிப்பிடுகிறது. மரணித்த அந்த மையத்துக்கு  முன்னால் வைத்துக் கொண்டு 'இது உயிரோடு இருப்பவர்களுக்கு எச்சரிக்கும்' என்று ஓதுவது எந்த வகையில் நியாயம்? 

62வது அத்தியாயத்தில் 5வது வசனத்தில் 'தவ்ராத்தை சுமத்தப்பட்டு பின்னர் அதை சுமக்காமல் (அதன் படி  நடக்காமல்) இருந்தார்களே! அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையை போன்றது' என்று இறைவன் கூறுகின்றான்.

இறைவனின் அற்புத குர்ஆன் எனும் ஏடு நம் கைகளில் தவழ்கிறது. அதில் உள்ளவைகள் என்னவென்று தெரியாமல் சுமக்கிறோம் என்றால் நமக்கு என்ன பெயர் சூட்டுவது நியாயம்......

ஒரு விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்வோம். நாங்கள் எங்கு சென்றாலும் இறுதியில் இறைவனிடம் சென்றாக வேண்டும். அவ்வேளையில் இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்தாக வேண்டும். 

அல்லாஹ் சொல்வதற்கு மாற்றமாக சொன்னால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயற்பாட்டுக்கு மாற்றமாக செயற்பட்டால், நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்பதை ஒரு தடவைக்கு பல தடவை சிந்தித்தாக வேண்டியுள்ளது. 

அன்புள்ள சகோதர சகோதரிகளே... ஒரு சிலர் திருமறைக் குர்அனை அதிலும் குறிப்பாக யாஸீன் சூராவை மரணித்தவர்களுக்காக ஓதுகின்றார்கள் என்றால், அதைப் பார்த்தும் , அது தவறு என்று அறிந்து நீங்கள் மௌனியாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறோம். 

அல்குர்ஆனில் ஏராளமான அற்புதங்கள் இருக்கின்றன. அந்த அற்புதங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்காமல் குர்ஆனின் கண்ணியத்தை உணர்ந்து எம் வாழ்வில் நடைமுறைப்பத்துவோம்.
அல்லாஹு அக்பர்!

எந்த கலப்படமும் இல்லாமல் அல்-குர்ஆனையும் நபி வழியையும் மட்டும்; தூய்மையான முறையில் பின்பற்றி இம்மை மறுமையில் வெற்றி பெற்றவர்களாக அல்லாஹ் எம் அனைவரையும் ஆக்கியருள்புரிவானாக! ஆமீன்.

04
கோள்களின் அதிசயம்
1 சூரியனும் சந்திரனும் அவற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின் படியே சுழல்கின்றன என்ற குர்ஆன் வசனத்தின் இலக்கத்தையும் அத்தியாயத்தின் இலக்கத்தையும் குறிப்பிடுக.
2 யஸ்பஹூன் என்ற சொல் எந்த சூராவில் இடம் பெற்றுள்ளது.

அறிமுக பகுதியை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
http://www.jaffnamuslim.com/2013/07/2013_5711.html

No comments

Powered by Blogger.