பெயர் சூட்டு விழா - புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 10)
அல்லாஹ் சிலருக்கு ஆண் குழந்தைகளை கொடுக்கிறான். சிலருக்கு பெண் குழந்தைகளைக் கொடுக்கிறான். குழந்தை பிறந்தால் நல்ல பெயரை தெரிவு செய்து அக்குழந்தைக்குச் சூட்ட வேண்டும். சிலர் மொடல் பெயரைத் தேடி இறுதியில் பொருள் வித்தியாசமான பெயரை வைத்து, பிறகு திண்டாடுவதைக் காணலாம்.
பெயரை குழந்தை பிறந்து நாற்பதாம் நாள் வைக்கப்படுகிறது. குழந்தைக்கு எப்போது பெயர் வைக்க வேண்டும், தவறான பெயர்களை வைத்து விட்டால் அதை எப்படி மாற்றிக் கொள்வது என்பதைத் தொடர்ந்து அவதானிப்போம்.
முதலில் தவறான பெயர்கள் வைக்கப்பட்டால் அதைப் பற்றித் தெரிந்தவுடன் அதற்குப் பகரமாக நல்ல பெயரை வைத்துக்கொள்ள வேண்டும். பின்வரக் கூடிய ஹதீஸ்களை கவனியுங்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர் கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) உமர் (ரழி) அவர்களுக்கு ஆஸியா (பாவி) எனப் படும் புதல்வியொருவர் இருந்தார். அவ ருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜெமீலா (அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள். (முஸ்லிம்-4333)
மேலும் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஜுவைரியா (ரழி) அவர்களுக்கு முதலில் ஷபர்ரா' என்ற பெயர் இருந்தது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியா (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் பர்ராவிடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். (முஸ்லிம்-4334)
மேலும் ஸைனப் (ரழி) அவர்களுக்கு முதலில் பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார் என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள். (புகாரி-6192, முஸ்லிம்-4335)
அதேபோல் (மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர் (உலகில்) ஒரு மனிதன் மன்னாதி மன்னன் (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (முஸ்லிம்-4338)
எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்கும்போது சரியான, அழகான பெயரை தெரிவுசெய்து வைக்க வேண்டும்.
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் (அல் லாஹ்வின் அடிமை) அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 4320)
அதேபோல் என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் (அபுல் காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற அபுல் காசிம் ஆவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-4323)
அபுல் காசிம் என்ற பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றியதை முஸ்லிமில் 4325 இல் காணலாம். மேலும் அஸ்மா பின்த் அபீ பக்கர் (ரழி) கூறுகிறார்கள். மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு சுபைரை நான் கருவுற்று இருந்தேன். கர்ப்ப காலம் முழுமை அடைந்துவிட்ட நிலையில், நான் (புலம்பெயர்ந்து) மதீனா சென்றேன். (வழியில்) குபாவில் நான் தங்கினேன். குபாவிலேயே அவரை நான் பெற்றெடுத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அக்குழந்தையை கொண்டு சென்று அவர்களது மடியில் வைத்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் உணவு நபி (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு மீண்டும் அந்தப் பேரீத்தம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவலானார்கள். பின்னர் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். அதற்காக அருள் வளம் (பரகத்) வேண்டினார்கள். (என் குழந்தை) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்குப்) பிறந்த முதல் குழந்தை ஆவார். (முஸ்லிம்-4344)
அதேபோல் குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்பட்ட நிகழ்ச்சியை முஸ்லிமில் 4347 லும் காணலாம். எனவே, குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கலாம் என்பதையும் அல்லது ஏழாம் நாள் பெயர் வைப்பதையும் ஹதீஸ்களில் நாம் காணலாம். அதை விட்டுவிட்டு, குழந்தை பிறந்து நாற்பதாம் நாள் பெயர் வைக்க வேண்டும் என்று நமது சமுதாயம் தவறாக வழிதவறிச் சென்று கொண்டிருப்பதைக் காணலாம்.
குழந்தை பிறந்து நாற்பதாம் நாள் உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தார்கள், நண்பர்கள், சொந்தங்கள் என்று பரவலாக வரவழைத்து நாற்பது சாப்பாடு என்று பரிமாறப்படுவதைக் கண்டு வருகிறோம். இப்படி ஒரு சாப்பாட்டை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்பதை முதலில் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். சில இடங்களில் பத்திரிகை அடித்து, பந்தல் போட்டு விழாக் கோலம் போடுவதையும் அவதானிக்கலாம்.
அந்நியர்களை அப்படியே பின்பற்றி, அவர்களின் கலாச்சாரத்தை நமது மார்க்க மாக அமைத்து வருகிறார்கள். குழந்தைக் கும் நாற்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. தாய்க்கும் நாற்பதுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதாவது ஒரு தாய் குழந்தை யைப் பெற்றெடுத்த பின் தொடர் உதிரப் போக்கு ஏற்படும். அந்த காலங்களில் தொழக் கூடாது. கணவனோடு எந்த உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது. உதிரப் போக்கு (பிரசவ தீட்டு) நின்ற பின் தொழுகை, மற்ற ஏனைய விடயங்களைச் செய்யலாம். பொதுவாக குழந்தை பிறந்து தொடர் உதிரப் போக்கு குறிப்பிட்ட நாட்க ளில் நின்றுவிட்டால் குளித்து சுத்தமாகி விடலாம்.
இருந்தாலும் நடைமுறையில் நாற்பது என்று வைத்துள்ளார்கள். இதன்படி தாய் சுத்தமாகும் நாளே நாற்பதாகும். என் மனைவி சுத்தமாகிவிட்டால் அதற்காக சாப்பாடு போடுகிறேன் என்றால் என்னடா மனைவி சுத்தமானதற்கு சாப்பாடா? என்று கேலி செய்ய ஆரம்பிப்பார்கள். அதனால் பிள்ளைக்கு நாற்பது என்று கூறி, இந்த விழாக் கொண்டாட்டம் எடுக்கப்படுகிறது.
ஏனென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் தெரிவு நடக்கிறது. குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவரும்போது பெயரை பதிவுசெய்து விட்டே வருகிறார்கள். குறைந்தது ஏழாம் நாள் பெயர் வைக்கப்படுகிறது. பிறகு ஏன் ஒரு நாற்பது?
இப்போது நாற்பதுடைய இரகசியம் உங்களுக்குப் புரிந்திருக்கும்? படித்த மௌல வியும் பணத்துக்காக அந்த வீட்டில் பக்திப் பரவசத்தோட பாதிஹா ஓதுகிறார்? மார்க் கத்தை சொல்லிக் கொடுத்து, தவறை சுட்டிக் காட்டக் கூடிய மௌலவியே சபை யில் முதலாவது அமர்ந்து விடுகிறார்.
இரத்தம் சுத்தமானதற்கு ஒரு சாப்பாடு, அதற்கு ஒரு பாதிஹா? பணம் கிடைக்கும் என்றால் மார்க்கத்தை எப்படியும் திரிபு படுத்துவார்களா? இப்போது கூறுங்கள், குழந்தைக்கு நாற்பதா? அல்லது தாய்க்கு நாற்பதா? எனவே பெயர் சூட்டும் விழா என்பது கிடையாது. மர்யம் (அலை) அவர் களுடைய தாய் மர்யம் (அலை) அவர் களுக்கு அவர்களாக பெயர் வைத்து வழி காட்டியுள்ளார்கள்.
எனவே உங்கள் குழந்தைக்கு நீங்களே அழகிய பெயரை வைத்து அழையுங்கள். இனி யாராவது நாற்பது சாப்பாடு என்று அழைத்தால், அவருடைய மனைவி சுத்த மானதற்காக நம்மை சாப்பிட அழைக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். எதை வெளியே சொல்ல வேண்டும்? எதை வெளியே சொல்லக் கூடாது என்பது கூட இன்றைய சிலருக்குத் தெரியாமல் போய் விட்டது.
பெயர் சூட்டு விழா - 10
கேள்வி – 1 பர்ரா என்றால் பொருள் என்ன?
கேள்வி – 2 ஆசியா என்றால் பொருள் என்ன?
.jpg)
Post a Comment