அம்பாறையில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 746 பேர் இஸ்லாமியர்கள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20
பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 2 இலட்சத்து 82 ஆயிரத்து 746 பேர்
இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து
கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு,
|
இம்மாவட்டத்தில் மொத்தமாக 6
இலட்சத்து 48 ஆயிரத்து 57 பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 2
இலட்சத்து 50 ஆயிரத்து 213 பேர் பெளத்தர்கள் 1 இலட்சத்து 02 ஆயிரத்து 454 பேர்
இந்துக்கள் 12 ஆயிரத்து 644 பேர் ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
கல்முனை மாநகர பிரதேசதிட்குட்பட்ட நற்பிட்டிமுனை,மருதமுனை ஊர்களில் வதியும் முஸ்லிம்கள் கல்முனையினுள் சேர்கபட்டுள்ளனரா .....? செய்தியாளர் கவனதிக்கு.
ReplyDeleteஜப்னா முஸ்லீம் செய்தியாளரின் கவனத்திற்கு !
ReplyDeleteஅக்கரைப்பற்றில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் உள்ளது இங்கு தமிழர்களும் ஓரிரு சிங்களவர்களும் மாத்திரமே உள்ளனர். குறிப்பாக முஸ்லீம்கள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழ்கிறார்கள்.
மாத்திரமன்றி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு முஸ்லீமும் அங்கு வாழ்ந்ததாக இதுவரை ஒரு பதிவுகளும் இல்லை என்பதை குறிப்பிட கடமைப்பட்டுளேன்.
இங்கு செய்தியாளர் குறிப்பிட்ட கணக்குகளின் அடிப்படையில் நோக்குகையில் கணக்கறிக்கைகள் பிழையாக இடம்பெற்றுள்ளதென்பதை அறிய முடிகிறது. இருப்பினும் ஜப்னா முஸ்லீம் ஒரு ஊடகம் என்பதால் இந்த கணக்கறிக்கைகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்களையும் தொடர்பு கொண்டு உண்மையென ஊர்ஜிதப்படுத்திய பின் வெளியிடிருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும்.
ஈழத் தமிழன் அவர்களுக்கு, இப்புள்ளி விபரம் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் அறிக்கையிலிருந்தே என்னால் வழங்கப்பட்டது.பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக திணைக்களம் இந்த புள்ளி விபரத்தைத் தந்துள்ளது.இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் புள்ளி விபரம் தரப்பட்டுள்ளது இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை வேறு, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வேறு என்பதயும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர் ஒருவர் புள்ளி விபரக் கணக்கு எடுக்கும் சந்தர்ப்பத்தில் இருந்திருக்கக் கூடுமல்லவா? தயவு செய்து புள்ளி விபரத் திணைக்களத்தின் அறிக்கைகளை வாசித்து உண்மை எது என்பதை அறிந்து கொள்வதற்கு முயற்சியுங்கள். நன்றி.
ReplyDeleteதிருவாளர் அஹமட் யுனைட் அவர்களுக்கு !
ReplyDeleteதிருக்கோவிலில் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லீம்களோ அல்லது இஸ்லாமியர்களோ பதிவில் இல்லை. என்பதே எனது கருத்து, அத்தோடு இலங்கை சனத்தொகை மதிப்பு புள்ளி விபர திணைக்களத்திற்கு கிராமசேவையாளர்களின் உதவியோடு பிரதேச செயலாளர்கள் மூலமாகவே சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று சனத்தொகை மதிப்பு புள்ளி விபர திணைக்களத்திற்கு இறுதியாக அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
திருக்கோவில் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டபோது அவர் கூறிய பதிலே (திருக்கோவிலில் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லீம்களோ அல்லது இஸ்லாமியர்களோ பதிவில் இல்லை) இதுவாகும்.
என்னை ஆதாரமாக தேடச்செய்தமைக்கு மிக்க நன்றி.
ஈழத் தமிழன் அவர்களுக்கு, சகோதரரே திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் இன ரீதியாக 02 இலங்கை முஸ்லிம்கள் என்றும் சமய ரீதியாக 01 இஸ்லாமியரும் வாழ்வதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். தயவு செய்து சனத்தொகை புள்ளி விபரத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இதற்கான பதிலை உங்களால் கண்டு கொள்ள முடியும். நன்றி.
ReplyDelete