July 30, 2012

இஸ்லாமிய ஷரீஆபடி மரண தண்டனை வழங்கவேண்டிய குற்றத்தை ரணில் செய்துள்ளார்


புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சகல முஸ்லிம்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுக் கண்டிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய ஷரீஆவின் படி மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றத்தையே ஐ. தே. க. தலைவரான ரணில் இழைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐ. தே. க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையில் புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையிலான கருத்துகளைக் கூறியுள்ளார். இவரது கூற்றுக்கள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. இஸ்லாத்தை அறிந்திராதவர்கள் கூட இப்படி உரையாற்றமாட்டார்கள்.

அல்-குர்ஆன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்த் தஆலாவின் அருள் வேதம். அதுவே முஸ்லிம்களின் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடாக முஸ்லிம்கள் எதனையும் ஆதாரமாக எடுக்க மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸோ அல்லது வேறுஎந்த முஸ்லிம் கட்சியோ அல்-குர்ஆனைப் புறந்தள்ளிவிட்டு வேறு அரசியல் சிந்த னைகளை ஏற்றுள்ளது என்று கூறுவதே மிகப் பெரிய பாவமான விடயம்.என்றாலும் இஸ்லாத்தின் போதனைகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும் திரித்தோ, அரைகுறையாகவோ பேச உலகில் எவருக்கும் இடமளிக்க முடியாது.

அந்த வகையில் தான் மர்ஹும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் நிந்தித்த சல்மான் ருஸ்டிக்கு மரண தண்டனையை இஸ்லாமிய ஷரீஆ படி அறிவித்தார்.

ஐ. தே க.தலைவரான ரணில் விக்கிரமசிங்க இக்கூட்டத்தின் போது மக்கா குறைஷியர் முஹம்மத் (ஸல்) அவர்களைத் துன்புறுத்தியது போன்று இந்த அரசு செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பாரதூரமான ஒப்புவமை கூற்றாகும். இக்கூற்றை எந்த முஸ்லிமுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்.

பேருவளையில் ஏற்கனவே இவர் பங்குபற்றிய கூட்டமொன்றில் கல்லெறி இடம்பெற்றது. அச்சமயம் தாயிப் நகரில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இடம்பெற்ற கல்லெறி போன்றே தமக்கும் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டு தமக்கு காபிர்கள் (இறை நிராகரிப்பாளர்கள்) கல்லெறிந்ததாக பிதற்றினார்.

இவை மாத்திரமல்லாமல் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இவர் உரையாற்றும் போது, இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனக் கூறி வாய் உழறினார்.

ரணிலின் இந்த நடவடிக்கைகள் எம்மத்தியில் பெரும் ஐயத்தை ஏற்படுத்துகின்றது. அவர் இஸ்லாம் தொடர்பான அறிவு இல்லாத நிலையில் இவ்வாறு பிதற்றுகிறார். அல்லது இஸ்லாத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் இவர் வேண்டுமென்றே இழிவுபடுத்துகின்றாரா? இவரது செயற் பாடுகள் பெரும் புதிராகவே உள்ளன. இவருக்கு இஸ்லாம் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு கற்பதே நல்லது.

இத்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கை கேட்கும் இவர் அல்-குர்ஆனின் புனித தன்மையையும், முஹம்மத் (ஸல்) அவர்களின் மாண்புகளையும் மாசுபடுத் துவதை இப்போது அரசியலில் வழக்காக்கிக் கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ஒரு தடவை பெளத்த மத கொள்கை தொடர்பாகவும் வரலாறு குறித்தும் கூட பிதற்றி வாங்கி கட்டினார். இஸ்லாத்தை அவமதிக்க முயற்சி செய்யும் சியோனிஸவாதிகளின் குணங்களையே ரணிலின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

அன்று குறைஷிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி கதைக்கும் ரணில் அவரது கட்சியின் ஆட்சியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இவர் என்ன செய்தார்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் கூட தமது சொந்த வாழிடங்களில் மீளக்குடியேறுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இன்று புலிகள் இல்லாவிட்டாலும் அவர்களது ஊது குழலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கைகோர்த்திருக்கும் ரணில் இம்முஸ்லிம்களுக்காக இற்றைவரையும் ஒரு வார்த்தையும் கூட பேசவில்லை.

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் இவர் தொடர்ந்தும் பிதற்றித் திரிவாராயின் முஸ்லிம்களின் கல்லெறிக்குக் கூட இவர் உள்ளாகலாம். தெற்கில் ஐ. தே. க.வின் வாக்கு வங்கி தினமும் கரைந்துகொண்டிருக்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்த சக்தியற்ற ரணில் கிழக்குக்கு போய் குர்ஆனையும், ஹதீஸ்களையும் அவமதிக்கும் வகையில் உரையாற்றி முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்கின்றார். இவருக்குப் புத்தி பேதலித்து விட்டது என்றே நான் கூறுவேன்.

இது அல்-குர்ஆன் அருளப்பட்ட மாதம். முஸ்லிம்கள் ரமழானின் வசந்தத்தில் நோன்பு நோற்கிறார்கள். இவ்வாறான சூழலில் ரணிலின் கூற்று பேரதிர்ச்சிமிக்கதாக உள்ளது. அக்கூற்றுகளை சகலரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றார்.

11 கருத்துரைகள்:

சும்மா போங்க சார்..இந்த விடயத்தில் உங்களுக்கும் அவருக்கும் ஒரு வேறுபாட்டையும் நாம் காணவில்லை. சில மாதங்களாகவே எங்கே சார் போயிருந்தீர்கள்

தேர்தல் வருகிறதே, ஷரீஆ, ரஸுலுல்லாஹ் எல்லாம் நினைவுக்கு வரும்.

ரணில் ஒரு காபிர், அவருக்கு வேண்டுமானால் இஸ்லாம் சரியாகத் தெரியாமல் இருக்கலாம்.

சரியாகத் தெரியாமல் இருப்பதால் தானே அவர் காபிராக இருக்கின்றார்.
சரியாகத் தெரியாத விடையத்தை பேசாமல் இருப்பதுதான் நல்லது.

அவர் போகட்டும், இந்த அஸ்வர் யார்? இவர் முஸ்லிம் இல்லையா?
இவருக்கு இஸ்லாம் தெரியாதா?
தெரியாவிட்டால் பேசாமல் இருப்பதுதானே நல்லது.'''மர்ஹூம் இமாம் கொமைனி (ரஹ்) ''' ..... நஅஊது பில்லாஹி மின்ஹா.
இத்னா அஸ்அரா கொள்கையை தெளிவாக ஏற்றுக் கொண்ட ரவாபிதா - ஷீயா காபிரைப் பார்த்து ஒரு முஸ்லிம் இப்படி அழைக்க முடியுமா? சல்மான் ருஸ்தி எழுதியதை விட பன்மடங்கு கேவலமாக நபி (ஸல்) அவர்களின் மனைவியர் பற்றியும், சஹாபாக்கள் பற்றியும், ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் பற்றியும் ஷீயாக்கள் எழுதி வைத்து பாடம் நடத்துகின்றனர். ஈரானில் முஸ்லிம்களை கடும் இம்சைக்கு உள்ளாக்கியவன் இந்த வழிகெட்ட மொமைனி. கடைசிவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல், தவ்பா செய்யாமல் இத்னா அஸ்அரா காரனாகவே மரணித்தான்.

அஸ்வர் ஹாஜியாருக்கு புத்தி எங்கே போய் விட்டது?

அமைச்சர் அஸ்வர் அவர்களே ,எனக்கென்னவோ இந்த அறிக்கையும் அரசியல் ரீதியான நகர்வாகவே தென்படுகிறது. முதலில் ரணில் ஒரு காபிராக இருப்பினும் ஓரளவாவது இஸ்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது வரவேற்கத்தக்கது .அவருடைய குற்றுகளிளிலுள்ள பிழைகளை கலைவதற்ற்கான முயற்ற்சிகளை விடுத்து உங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு பத்வா கொடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .மாண்புமிகு அமைச்சரே நீங்கள் உங்கள் கூற்று மூலம் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படக்கூடிய தவறிய செய்துள்ளதாக குறிப்பிடுகிறீர் .புனித இஸ்லாத்தை மார்க்க நெறியாக பின்பற்றும் உங்களது இந்த கூற்றும் ,காபிரான ரணிலின் கூற்றும் அப்படாமான அரசியலே அன்றி வேறில்லை .எமது இருப்பிற்ற்கான உத்தரவாதமே சந்தேகமான இந்த கால கட்டத்தில் தயவுசெய்து ,உமது அரசியல் மனோபாவங்களை புறந்தள்ளி கொஞ்சம் முஸ்லிம்களின் நலன்களுக்காக நேரம் ஒதுக்குவது சாலச்சிறந்தது என்பது எனது கனிவான வேண்டுகோளாகும் .

ஹலோ மிஸ்டர் அஸ்வர் ரணில் என்னா அப்படி பெரிதாக சொல்லி விட்டார் என்று ஊமைக்கண்ணீர் விடுகின்றீர் சிலநேரம் அவர் விளங்கிய இஸ்லாம் அவ்வளவுதான் இதை அவரிடம் பக்குவமாக உங்களுக்கு எடுத்து சொல்லலாம் அல்லவா ?

நீங்களும் அவரிடம் ( ஐ தே வில் )பல வருடம் குந்தி விட்டு கடைசி காலத்தில் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு பிதற்றுகின்றீர்கள்.வடக்கில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் அப்போது யாருடன் இருந்தீர்கள் அதே ரணிலுடன் தான் ஒட்டி இருந்தீர்கள் அப்போது வாய் திறக்காத நீங்கள் இப்போது வைதிரண்டு உள்ளீர்கள் என்ன ? முஸ்லிம்களை இன்னும் கூறு போடவா துடிக்கிண்றீர்கள் .

யுத்தம் முடிந்து நான்காவது வருடத்தை எட்டி இருக்கும் இந்நேரத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றதில் இன்னும் பல நெருக்கடிகள் தொடருவதாக நீங்கள் சொல்கின்றீர்கள் அப்படியானால் நீங்கள் முஸ்லிம்களை பிரதிநிதிபடுதும் ஒருவராக ஆளும் கட்சியில் (ஒட்டி ) சேர்ந்து பல சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு வாய் பிதற்றுகின்றீர்கள் இந்த முஸ்லிம்களுக்காக அதாவது இவர்களின் நெருக்கடிகளை உங்களால் முடிதுகொடுக்க முடியும் தானே ஏன் அப்படி செய்யாமல் அடுத்தவர்களின் மேல் பழி சுமத்துகிண்றீர்கள். அது போகட்டும் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் மீது தொடுத்து வரும் வன்முறை நீங்கள் அறிவீர்கள் இதற்கு நீங்கள் (உங்கள் பங்குக்கு ) என்ன செய்தீர்கள், வன்முறையல் ஈடுபட்டவர்களில் ஒருவரையாவது நீதியின் முன் கொண்டுவந்து நிரித்திநீர்களா ? நீங்கள் அரசுடன் சேர்ந்து இருந்து கொண்டு என்ன செய்கின்றீர்கள் ????? அன்னியர்களுக்காக வக்காலத்துதன் வாங்குகிறீர்கள்!!!!!!!!!!!!!!!

இப்போது வாய் திறந்து உள்ளீர் வரும் தேர்தலில் முஸ்லீம் வாக்குகளை (சூதாட) பிரிக்க ..............

இஷாக் ரஹீம்

1990 வடக்கு இனச் சுத்தீகரிப்பின் போது அஸ்வர் ஹாஜி எங்கு இருந்தார்?

This Azwar Buriyani how can call the Shia Khomeni as Raliyallah?
what Azwar developped brain fever may be this is the causes.
Don`t believe these kind of people have also kind of Islam THANKAL,BUHANUDDIN of BOHARA religion then this Azwar could be a Shia???
LA VIOX comments is very accurate when I was reading this artical as soon as it pulished i was so angry but I could not write a comment but Viox well done

Aloso Ranil is An ANIL leave him alone he is just traiter bu Azwar must be careful RANIL could sue for Capitol Panishment statement this is very Greavious and Irresponsible

ஒரு சில வருடத்திற்கு முன் கிரிக்கட் போட்டி ஒன்று நடைபெற்றபோது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. அப்போது கிரிக்கெட் வர்ணணையில் ஈடுபட்டிருந்த அஸ்வர் ஹாஜி " போட்டி தொடங்குவதா இல்லையா என்பது வருண பகவானின் கையிலேயே உள்ளது" என்றார். மழையை பெய்விப்பவன் அல்லாஹ் என்று ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் வருண பகவானிடம் நமது ஹாஜி நம்பிக்கை வைக்கிறார்.

Hello Mr.Azwar, where was your voice on Dambulla case? now you are barking on Ranil, you are the one who spoil all muslims reputation, shame on you..... today you are with Mr. Mahinda that's why you bark on Ranil, tomorrow if Ranil on Mr. Mahinda's seat definitely you will be with Ranil.
Mr. Azwar you don't have any right to talk about muslims, because when it's needed to raise your voice, you keep mum, you are like a chameleon.... no absolutely you are......

பாவம் அஸ்வர்... விட்டுவிடுங்கல்.. அவர் பதவியை காப்பதுக்கு ஏதவது கதைக்கதனே வேனும்.

I welcome all comments delivered against Mr. Aswer's statement on Ranil.It is very apparent Mr. Aswer is doing politics.

Post a Comment