Header Ads



இலங்கை முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை தமிழக முஸ்லிம்கள் அறியாமைக்கு இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களே காரணம் - கவிக்கோ அப்துல் ரகுமான்

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் இந்தியா - தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதுவுமே தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்  என்று கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பட்டுள்ளார்.

இதற்கு இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களே காரணமென்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் உரியமுறையில் எழுதியிருந்தால் தமிழ்நாட்டில் இன்று இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய தெளிவு பிறந்திருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடொன்றை நடத்துவது தொடர்பில் கொம்பனித்தெரு முஸ்லிம் நூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கவிக்கோ அப்துல் ரஹ்மான இவ்வாறு தெரிவித்துள்ளர். இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் உள்ளிட்டவர்களுடன் மூத்த கல்விமான எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் இலக்கிய படைப்பாளிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இங்கு அப்துல் ரகுமான் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், இன்று இணையத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களின் பெயர்களிலேயே இஸ்லாத்திற்கு எதிராக இயங்கும் இணையத்தளங்கள் உள்ளன. இஸ்லர்தை சரியாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கு கொடுப்பதற்கு எம்மிடம் சிறந்த நூல்கள் இல்லை. இஸ்லாத்தை  பற்றிய பற்றிய தப்பபிப்பிராயங்கள் வேகமாக பரப்பபடும் நிலையில் அவற்றi களைவதற்கான எழுத்துக்கள் இன்று அவசியமாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. உண்மைதான்! முஸ்லிம் எழுத்தாளர்களின் அசிரத்தை மட்டுமல்ல, முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைதியாகி இருக்கின்றனர்.

    முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகள், அவலங்களுக்கு இன்னும் சிறிதளவாவது கண்டனம் கொடுக்காமலும் அதை ஆதரிக்கும் போக்கிலும் அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தலைமைகளுடன் சேர்ந்து நடக்கும் நமது அரசியல் தலைவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.

    முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழனைப்பற்றி சிந்திக்கிறார்கள். முப்பது வருடமாக தாங்க முடியாத அட்டூழியங்களை வரப்பிரசாதமாகப் பெற்ற எமது ஈமானிய உறவுகளைப்பற்றி, மூச்சு விடுவதற்கு எமது முஸ்லிம் எழுத்தாளர்களுக்கோ முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கோ நேரம் எங்கே இருக்கப் போகிறது?

    தற்போது இருக்கும் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகளின் இன்றைய செயல்பாடுகள் ஓரளவு முஸ்லிம்களுக்கு நன்மையையும் பெற்றுக்கொடுக்கிறது என்பது எமக்கு சிறிய ஆறுதல்.

    ஜஸ்ஸாக் கல்லாஹு ஹைரன்!

    ReplyDelete

Powered by Blogger.