குர்ஆன் கூறும் மரணித்தவர்களின் ஏக்கங்கள்.
1. நல்ல மனிதனாக வாழ ஏங்குதல்:
"அந்தோ! நான் மண்ணாக இருந்திருக்கக் கூடாதா!?” (78:40)
2. நற்செயல்கள் செய்ய ஏங்குதல்:
"ஐய்யோ! எனது வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை நான் செய்திருக்கக் கூடாதா?” (89:24)
3. வலது கையில் செயலேடு கிடைக்க ஏங்குதல்: "அந்தோ! என்னுடைய செயலேடு எனக்கு தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?” (69:25)
4. நல்ல நண்பனுக்காக ஏங்குதல்:
"ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” (25:28)
5. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட ஏங்குதல்: "அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்திருக்க வேண்டுமே!” (33:66)
6. நபிகளாரைப் பின்பற்ற ஏங்குதல்: "அந்தோ! நான் இறைத் தூதருடன் எனது பாதையை அமைத்திருக்கக் கூடாதா!” (25:27)
7. நல்லவர்களுடன் கூட்டுச்சேர ஏங்குதல்: "அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” (4:73)
இவையெல்லாம் மரணித்தவர்களின் ஏக்கங்கள்!
ஆனால்… இவற்றை அடைந்து கொள்ளவதற்கான சந்தர்ப்பம் நமக்கு இன்னும் இருக்கின்றது. காலம் கடந்து செல்லுமுன்.. இவற்றை அடைந்து ஆதங்கங்களை தவிர்ப்போம்.
Nooh Mahlari
.jpg)
Post a Comment