முஸ்லிம்களின் பிம்பத்தை சிதைக்க, இஸ்லாத்தின் எதிரிகளால் அடிக்கடி கூறப்படும் பொய்கள்
(நபிகளாரின் மரணத்திற்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) ஆட்சியில், இஸ்லாத்தை விட்டு வெளியேறி, முஸ்லிம்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்ட சமையப் பகைவர்களுக்கு எதிராக நடைபெற்றவை, 'ரித்தா போர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன)
இஸ்லாத்தின் எதிரிகள் பொய்களை அள்ளி வீசும்போது…
முஸ்லிம்களுக்கு எதிராக முதலில் போர் தொடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கோத்திரங்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடுவதில்லை.
அந்தக் கோத்திரங்களிலிருந்தே துலைஹா, பொய்யன் முசைலமா போன்ற பொய் நபிமார்கள் தோன்றியதை அவர்கள் குறிப்பிடுவதில்லை.
அந்த பொய் நபிமார்கள் இறைமறுப்புக்கும் முஸ்லிம்களைக் கொல்லவும் பொது மக்களைத் தூண்டினார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை.
இறை மார்க்கத்திற்கு எதிராகப் போரிட மக்களைத் தூண்டிய ஏனைய கோத்திரங்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடுவதில்லை.
மதீனாவின் புனிதத்தை மீறவும் முஸ்லிம்களை ஒழித்துக்கட்டவும் முயன்று, தாக்குதலுக்குத் தயாராகி, மதீனாவுக்கு அருகில் அணிவகுத்து முகாமிட்டவர்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடுவதில்லை.
தற்காப்புக்காக முஸ்லிம்கள் எடுத்த நடவடிக்கைகளை மட்டுமே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எந்தக் காரணமும் இன்றி அப்பாவி மக்களைத் தாக்கும் குற்றவாளிகளாக முஸ்லிம்களைச் சித்தரிக்கிறார்கள்.
மக்களை மதம் மாற்ற கட்டாயப்படுத்துவதாக அபாண்டப் பழிகளை அள்ளி வீசுகிறார்கள்.
இதில் வேதனை என்னவென்றால்; இத்தகைய பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுவதால்; அப்படியும் இருக்குமோ என்று அப்பாவி மக்கள் நம்ப முற்படுவதுதான்.
✍️ நூஹ் மஹ்ழரி See less

Post a Comment