Header Ads



நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ அல்குர்ஆனின் அழகிய வழிகாட்டுதல்


சமூகம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ அல்குர்ஆன் அழகிய வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது. அவை நல்வாழ்வுக்கான அறநெறிகள். சமூகம் உயர்பண்பாடுகளுடன் வாழ்வதற்கான உன்னத வரைபடம். (Methodology for a Righteous Life)


1. "பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்” (2:60)


2. "அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை குழப்பிவிடாதீர்கள்”. (2:42)


3. "உங்களிடம் எதைப் பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்கள்” (17:36)


4. "பூமியில் செருக்குடன் நடக்காதீர்கள்” (17:37)


5. "முகத்தைத் திருப்பியவாறு மக்களுடன் பேசாதே!” (31:18)


6. "உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்” (31:19)


7. "மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக!”(7:199)


8. "அறிவீனர்களை விட்டு விலகி இருப்பீராக!” (7:199)


9. "எது சிறந்த வழிமுறையோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக!” (23:96) 


10. "உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்!” (29:31)


11. "யாரும் யாரையும் பரிகாசம் செய்ய வேண்டாம்!” (49:11)


12. "உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்!” (49:12)


13. "அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்!” (49:12)


14. "உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்” (4:86)


15. "வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உணவளியுங்கள்” (22:28)


16. "நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்!” (4:2)


17. "சொல்வதைத் தெளிவாக - நேரடியாகச் சொல்லுங்கள்!” (33:70)


18. "மனிதர்களிடம் நல்லவற்றையே பேசுங்கள்” (2:83)


19. "எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் இருக்கிறதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்!” (5:2)


20. "எது பாவமானதாகவும் வரம்பு மீறியதாகவும் உள்ளதோ அதில் அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள்!”. (5:2)


21. "உங்கள் சத்தியங்களை முறித்துவிடாமல் பேணுங்கள்!” (5:89)


22. "அளவையிலும் நிறுவையிலும் நீதியைக் கடைபிடியுங்கள்!”. (6:152)


23. "வாய்மையாளர்களுக்குத் துணையாக இருங்கள்!” (9:119)


24. "நீதியைக் கடைபிடிப்பவராகத் திகழுங்கள்!” (4:135)


25. "நம்பிக்கையாளர்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக!” (15:88)


இந்த 25 வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வாழும் சமூகத்தின் நிம்மதியையும், இவற்றை அலட்சியம் செய்யும் சமூகத்தின் நிலையையும் நினைத்துப் பாருங்கள். இஸ்லாம் எவ்வளவு அழகிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என்பது புரியவரும்.


✍️ நூஹ் மஹ்ழரி 

No comments

Powered by Blogger.