இன்ஷா அல்லாஹ் இந்தக் கதவு திறந்தே இருக்கும்..
மதீனா முனவ்வரா மஸ்ஜிதுன்னபவியில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லாவை நோக்கி நேராக திறந்த நிலையில் எப்போதும் இந்த பெரிய ஜன்னலை நீங்கள் பார்க்கலாம்.
இன்றும், என்றும் இந்த கதவு திறந்த நிலையில்தான் இருக்கும்.
ஏன்..?
உம்முஹாதுல் முஃமினீன் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லம் இங்கு தான் இருந்தது.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறையழைப்பை ஏற்று இங்கு நல்லடக்கமான பின்னர் அவர்களின் புனித ரவ்லாவை நினைவு வரும் போதெல்லாம் பார்த்துக் கொள்வார்கள்.
உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி காலத்தில் மஸ்ஜிதுன்னபவியை மிகப்பெரிய அளவில் விஸ்தீரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அப்போது தனது மகளாரான ஹஜ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இந்த இல்லத்தை விட்டுக் கொடுக்க வேண்டுகிறார்கள்.
புனித ரவ்லாவை நோக்கி நேராக இருக்கும் தனது இல்லத்தை வழங்கி விட்டால் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரவ்லாவை பார்க்கும் பாக்கியம் கிடைக்காமல் போய் விடும்.. என வழங்க மறுத்து விடுகிறார்கள்.
மஸ்ஜிதுன்னபவியி விரிவாக்கத்துக்கு எப்படியும் அந்த இடம் வேண்டும் என்பதற்காக, தனது மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான ஒரு இடத்தை தனது மகளார் ஹஃப்ஸா அவர்களுக்கு வழங்கிவிட்டு அந்த இடத்தை கேட்டார்கள்.
அதற்கு ஹஜ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா விதித்த நிபந்தனை.
எனது இல்லத்தை மஸ்ஜிதுன்னபவி விரிவாக்கத்துக்கு வழங்குகிறேன். வழக்கம் போல எனது இல்லத்தின் கதவு ரவ்லாவை நோக்கி திறந்தே இருக்க வேண்டும்... என்று கூறினார்கள்.
அதன்படி இன்று வரை..
இனி கியாமத் வரை இன்ஷா அல்லாஹ் இந்த கதவு திறந்தே இருக்கும்.
(முனைவர் முஜீபுர்ரஹ்மான் சிராஜி)

Post a Comment