அல்லாஹுவே, நீ எங்களுக்காக விதித்த அனைத்துச் செயல்களையும் நன்மையுடையதாகவே ஆக்குவாயாக,
ஒடுங்கிய பாதையில் சிக்கிய மான்குட்டி, துணைக்கு யாரும் இல்லை. முன்னோக்கி செல்ல வழியில்லை, பின்வாங்கி சென்றாலும் தப்பிக்க முடியாது, அங்கேயே நின்றால் பசியால் உயிர் போய் விடும். கீழே குதித்தாலும் மரணம் உறுதி.
ஏறக்குறைய, இவ்வாறே நம்முடைய மனங்களும் இருக்கின்றன.
சில தருணங்களில், அடிவானங்கள் அதற்குக் குறுகியனவாகத் தோன்றும். அதன் முன்னால் உள்ள பாதைகள் அடைபட்டிருக்கும்.
இருப்பினும், அதற்கு ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
அல்லாஹ்வைத் தவிர அடைக்கலமோ, புகலிடமோ வேறு இல்லை என்று.
அல்லாஹுவே, நீ எங்களுக்காக விதித்த அனைத்துச் செயல்களையும் நன்மையுடையதாகவே ஆக்குவாயாக, நாங்கள் எதிர்பாராத வழிகளின் மூலமாக எங்களுக்குப் விசாலமான அருளை வழங்குவாயாக..🤲
DrHafeed Nadwi

Post a Comment