ஒரு கொசுவை அல்லாஹ் உதாரணமாக கூறியபோது...
தனது படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு கொசுவை அல்லாஹ் உதாரணமாக கூறியபோது அதை நம்பாதவர்கள், "பிரபஞ்சத்தைப் படைத்தவன் எப்படி ஒரு சிறிய பூச்சியை உதாரணமாகக் கூற முடியும்?" என்று கேட்டனர்.
ஆனால் 1450 ஆண்டுகளுக்குப் பிறகு, கொசுவில் கூட மிகப்பெரிய ஆச்சரியமும் படைப்பாற்றலும் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
கொசுவின் தலையில் 100 கண்களும் வாயில் 48 பற்களும் உள்ளன.
அதன் உடலுக்குள் மூன்று முழுமையான இதயங்கள் உள்ளன.
அதன் மூக்கில் ஆறு கத்திகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு முனையிலும் மூன்று இறக்கைகள் உள்ளன.
இருட்டில் மனித தோலின் நிறத்தை ஊதா நிறத்திற்கு பிரதிபலித்துக் காட்டும் வெப்ப அமைப்பு அதன் உடலில் உள்ளது. இது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் இரவு பார்வை அமைப்புகளைப் போன்றது.
மனித உடலில் ஊசியைச் செலுத்தி இரத்தத்தை உறிஞ்சும் வரை அதை உணராமல் இருக்க உதவும் ஒருவகை மயக்க மருந்து சாதனம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
60 மீட்டர் தூரத்திலிருந்து மனித வியர்வையின் வாசனையை ஒரு கொசுவால் உணர முடியும்.
இவை அனைத்தையும் விட விசித்திரம், கொசுவின் முதுகில் கூட மிகச்சிறிய பூச்சிகள் உயிர் வாழ்வதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.
அவற்றை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
"நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான்” (குர்ஆன் 2:26)
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment