Header Ads



காசா சிறுவர் நிதியத்திற்கு, என்னால் முடிந்த சிறு பங்களிப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) “கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்” என்று நீர் கூறுவீராக. (புனித அல்குர்ஆன் 14.31)


1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இஸ்ரேல் என்ற கொடிய நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்த 76 வருடங்களாக தொடர் துன்பங்களால் துயருற்றுக் கொண்டிருக்கம் மக்களுக்கு உதவுவதில் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. ஆனாலும், தாராளமாக உதவுவதில் போதவில்லை என்ற கவலை. இருந்தாலும், இருப்பதைக் கொடுத்து உவந்தளிப்பதல் உள்ளம் உவகையடைகிறது. அல்லாஹ் அருள்பாலிக்கட்டும். என்னால் முடிந்தது 25 ஆயிரம் ரூபாய் காசா சிறுவர் நிதியத்திற்கு கிடைக்கச் செய்துள்ளேன்.


கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஓக்ரோபர் 07 2023 போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் முழுமுற்றுகையை செயற்படுத்தி வரும்நிலையில் அங்கு ஒட்டு மொத்தமாக மனித அவலம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மனித குலத்திற்கே அழிவையும் இழிவையும் ஏற்படுத்தும் அக்கிரமத்தைப் புரிந்து வருகின்றது. அதன் விளைவாக நாளொன்றுக்கு சுமார்  190 பேர் என்ற அடிப்படையில் மாதமொன்றுக்கு 5700 பேர் என்று இதுவரை சுமார் 34 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இஸ்ரேலின் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களில் 73 சத வீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாகும்.


போர் ஆரம்பித்தது தொடக்கம் 14,500 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 17,000 சிறுவர்கள் தமது பெற்றோர்களில் ஒருவரையேனும் இழந்துள்ளனர்.


இது தவிர, 484 மருத்துவ பணியாளர்கள், 140 ஊடகவியலாளர்கள் 65 பொதுமக்கள் பாதுகாப்பு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்வுகள் காரணமாக 1,088,764 பேர் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதோடு போதுமான மருந்துகள் இல்லாததால் 350,000 பேர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன அழிப்பின் ஒரு அம்சமாக  32 மருத்துவமனைகள் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


காசாவில் இஸ்ரேல் 70,000 தொன் குண்டுகளை வீசி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உணவு கிடைக்கவிடாமல் பட்டினி கிடக்க வைப்பது, போஷாக்கு உணவுகள்  கிடைக்க வழி செய்யாமல் தடுப்பது, மருந்துகள் இல்லாமல் செய்வது, உதவும் தொண்டு நிறுவன ஊழியர்களைக் குறி வைத்துக் கொல்வது போன்றவற்றை இஸ்ரேல் கொடுங்கோலர்கள் இன அழிப்புக்கான யுத்த ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.


பெண்களையும் குழந்தைகளையும் அழிப்பதன் மூலம் எதிர்கால பலஸ்தீனத்தில் பலஸ்தீன சுதந்திரப் போராளிகளே இல்லாமல் செய்யலாம் என்பது இஸ்ரேலின் தந்திரோபாயமாகும்.


இதேவேளை கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் முதல் நான்கு மாதங்களிலும் சுமார் 18.5 பில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக உலகவங்கி அறிவித்துள்ளது. இந்த விவரம் ஐக்கிய நாடுகள் சபையில் ஏப்ரில் 02 வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.