Header Ads



எவரையும் இழிவாக எண்ணவேண்டாம்


இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) கூறிய முத்தான் சில விடயங்கள்


இரவுதொழுகைக்கான வாசலை அல்லாஹ் உனக்குத் திறந்து விட்டால், உறங்கிக்கொண்டிருப்பவர்களை கேவலமாக பார்க்க வேண்டாம்


நபில் நோன்பு நோற்கும் வாசலை அல்லாஹ் உனக்குத் திறந்துவிட்டால் நோற்காதவர்களை கேவலமாகப் பார்க்கவேண்டாம்.


 ஜிஹாதுடைய வாசலை அல்லாஹ் உனக்குத் திறந்துவிட்டால் அதில் ஈடுபடாதவர்களை கேவலமாகப் பார்க்கவேண்டாம்.


இரவு வணக்கத்தில் ஈடுபடாத, நபிலான நோன்பு நோற்காத,ஜிஹாதில் கலந்து கொள்ளாத சிலர் உம்மைவிட அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருக்கக்கூடும்.


இரவுத் தொழுகையை தொழாமல் தூங்கிவிட்டு காலையில் அதை நினைத்து கைசேதப்பட்டு தவ்பா செய்வது, தொழுதுவிட்டு உனக்குள் நீ பெருமை  படுவதைவிட சிறந்தது.


ஏனென்றால் யார் தான் செய்த நல் அமல்களை  எண்ணி தனக்குத்தானே பெருமைப் பட்டுக் கொள்கிறானோ அவனின் அமல்கள் ஒருபோதும் மேலே உயராது


   தமிழில்: இஸ்மாயீலநாஜிபாஜில்மன்பயி

No comments

Powered by Blogger.