வான்மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது..
தீக்கோழியை நீங்கள் பார்த்ததுண்டா!!!
அது அவ்வப்போது தலையை நிலத்தில் ஏன் குத்துகிறது என்று கவனித்ததுண்டா!!!
நிலத்தடியில் எதிரொலிக்கும் நுட்பமான அதிர்வலைகளை உணரும் திறனை அது கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் தொலைதூரத்திலிருந்து தன்னை தாக்க வரும் விலங்குகளின் அடிச்சுவடுகளால் ஏற்படும் அதிர்வலைகளையும் உணர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே மண்ணில் தலையை குத்துகிறது என பறவையியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் எந்தத் திசையிலிருந்து அதிர்வுகளை அது உணர்கிறதோ, அதற்கு எதிர் திசைக்கு தப்பித்தோடி தனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக்கொள்ள இந்த ஆற்றல் அதற்கு ஏதுவாகிவிடுகிறது.
வான்மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:
((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் நமதிறைவன் தான் என்று அவர்(மூஸா) கூறினார்.))
📖 அல்குர்ஆன்: 20 / 50
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment