Header Ads



சர்வதேச உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில், கலாநிதி ஸாதிக்கின் வழிகாட்டல்கள்


ர்வதேச  உயர் கல்வி வாய்ப்புகள்  தொடர்பில்   பிரித்தானிய பொறியியல் கலாநிதி  Dr (Eng) ஏ.எம்.ஐ. ஸாதிக்  அவர்களின் வழிகாட்டல்கள்


ஐக்கிய ராஜ்யத்தில் (UK)  பொறியியல்துறை  பல்கலைக்கழக  விரிவுரையாளராக  கடமையாற்றி வரும்  கலாநிதி  Dr (Eng) A . M. I. ஸாதிக்  அவர்களுடன்  இந்த நேர்காணலை  மேற்கொள்கிறோம்.


விண்வெளி தொலைத்தொடர்பு பொறியியல்  (Space Communication Engineering) துறையில்  கலாநிதி பட்டம்  பெற்ற  முதல் இலங்கை முஸ்லிமான  கலாநிதி ஸாதிக், பிரித்தானியாவிலும் மத்திய கிழக்கிலும்  உயர் கல்வித் துறையில் கடந்த இரண்டு சகாப்தங்களாக  சேவையாற்றி வருகிறார்.


பேராதனை பல்கலைக்கழக  பொறியியல் பட்டதாரியான  கலாநிதி ஸாதிக்,   Electrical and Electronic Engineering துறையில்  தனது இளமானி பட்டத்தை  நிறைவு செய்தார். பின்னர் முதுமானி மற்றும் கலாநிதி பட்டத்தை உலகப் பிரசித்திப்பெற்ற SUSSEX UNIVERSITY - UK இல் விண்வெளி ஆராச்சித்துறையில் பெற்றதுடன் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். மேலும் PORTSMOUTH UNIVERSITY - UK இல் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். அதே நேரத்தில் ஒரு விண்வெளி விஞ்ஞானியாகவும், Space System Engineer ஆகவும் தனது ஆய்வுகளை  மேற்கொண்டு வருகிறார்


 அத்தோடு , ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையில் இயங்குகின்ற UniUmart UK ( International Education consultants) நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்


எமது நேர்காணல் கேள்விகளும்  அவற்றிற்கான கலாநிதி ஸாதிக்கின்  பதில்களும்  வருமாறு:


1 இந்த நிறுவனத்தை எதற்காக ஆரம்பித்தீர்கள்?


இந்த நிறுவனத்தினை  ஆரம்பித்ததன் பிரதான நோக்கமானது எமது சமூகத்தின் மாணவர்களின் கல்வியானது வெறுமனே உள்நாட்டில் மட்டுமே தங்கி விடாது சர்வதேச மட்டத்திலும் விரிந்து, நமது மாணவர்கள் உலகத்தரத்திலான  (world class) அதிநவீன  கல்வி வாய்ப்புகளை பெறுகின்ற வழிவகைகளை   உருவாக்க வேண்டும்  என்கின்ற  நல்நோக்கத்தில் ஆகும். 


அத்துடன், கல்வி மறுமலர்ச்சி சிந்தனையை உருவாக்குவது மட்டுமல்லாமல் பரந்த உலகத்தின் நடைமுறைகளை பழகித்தேர்ந்தவர்களும் (broader world experienced), வேலை வாய்ப்பு  சந்தைகளுகேற்ப தகுதியானவர்களுமான  தொழில்வல்லுநர்களை உருவாக்க வேண்டும் நோக்கத்திலும் இந் நிறுவனத்தை ஸ்தாபித்தேன்.




3, நீங்கள் குறிப்பிட்ட  பரந்த  நல்நோக்கங்களுக்கு  மேலாக, மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலம் நீங்கள் உடனடியாக   அடைய நினைக்கும் இலக்குகள் யாவை?


எனது உடனடி இலக்குகளாவன, தகுதியான மாணவர்களை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு ஆங்கில மொழியினை ஒரு கட்டாயத்தின் அடிப்படையில் கற்பிக்க வேண்டுமென்பதுடன், அவர்களை IELTS போன்ற சர்வதேச ஆங்கில பரீட்சைகளை திறம்பட சித்தி பெற வைத்து,  அவர்களின் விருப்பத்திற்கேற்ற பட்டப்படிப்பையும் அதன் சார்பான பல்கலைக்கழகத்தினையும் பெற்று உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்பனவாகும்.

மேலும்  இதன் மூலமாக இந்நபர்களின் குடும்பங்களினதும், அவற்றை ஒற்றிய பரந்த சமூகத்தினதும் பொருளாதரத்தினை விருத்தி செய்வதுடன்  அதன் மூலம்  நிலைபோணக்கூடிய சமூக கட்டமைப்பொன்றை உருவாக்குவதும் எனது உடனடி இலக்குகளாகும்.

எமது நிறுவனத்தினூடாக மேற்கத்திய பல்கலைக்கழகங்களுக்கு  சென்ற மிகப்பல மாணவர்கள் மதிப்புமிக்க முதுமாணி கற்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

இதில் பலர் குடும்பங்களுடன் வேலை வாய்ப்பைப் பெற்று சந்தோஷமாக வாழ்கின்றனர்.



4, தற்போது O/L பரிசை முடிந்துள்ளது.  அந்த மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?


உயர் தரத்தை  நன்றாகக்கற்று  உள்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு  செல்ல வேண்டும்  என்ற  குறிக்கோளோடு  அவர்கள்  கல்வியை தொடர வேண்டும்  என்பதே  எல்லோரதும்  விருப்பம்.  எனினும்  வளப்பற்றாக்குறையால் தோற்றுவிக்கப்பட்ட போட்டிப்பரீட்சை  முறை  காரணமாக இலங்கையில்  உயர்கல்வி வாய்ப்பு  என்பது  குதிரைக்கொம்பாகவே  இருக்கிறது.   சாதாரண தரத்தில்  மிகச் சிறந்த  சித்திகளை  பெற்ற மாணவர்களும்  உயர்தரத்தில்  சறுக்கி விடுகின்றனர். மாணவர்கள் உள்ளாக்கப்படும் அதிகூடிய உள அழுத்தம் இதற்கு காரணமாக அமைகிறது.  மேலும், உயர் தரத்தில்  பல்கலைக்கழக  அனுமதிக்கு  தேவையான  சித்தி பெறுபவர்களில்  கூட மிகச்சிறு  சதவீத த்தினரே  பல்கலைக்கழக  அனுமதி  பெறுகின்றனர்.  அனுமதி பெறத் தவறும்  மாணவர்களுக்கு  இலங்கையில்  சரியான  தீர்வு ஒன்று இல்லை.  

சுய விருப்பத்தின் அடிப்படையில் OL   பரீட்சைக்கு பிறகு  நேரடியாகவே  வெளிநாடுகளுக்கு  கல்வி வாய்ப்புக்காக  செல்லக்கூடிய  சந்தர்ப்பம்  இருக்கிறது.  நாங்கள்  அவ்வாறான வாய்ப்பை  பல மாணவர்களுக்கு  எடுத்துக் கொடுத்துள்ளோம். 

ஆங்கில கல்வியில் குறைந்தது C சித்தி பெற்ற சாதராண தர மாணவர்கள் OL பரீட்சையை நிறைவு செய்ததுடன் மேற்கத்தைய நாடுகளில் Level 3 அல்லது Foundation தொடக்கம் டிப்ளோமா , உயர் டிப்ளோமா , மற்றும்  பட்டப் படிப்பு வரை தொடரலாம். 


இதற்கு சர்வதேச ஆங்கில மொழி தேர்ச்சியினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்காக   எமது நிறுவனம் இலவச ஆன்லைன் வகுப்புக்களை நடத்தி வருகிறது. அதனூடாக குறைந்த செலவில் மேற்கத்தேய பல்கலைக்கழகங்களில் கற்கையினை தொடரலாம்.



5, உயர் கல்விக்காக அல்லது தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?



மேற்கத்தைய நாடுகளுக்கு வருபவர்கள் இயன்ற அளவு ஆங்கிலத்தேர்ச்சி பெற்று வருமாறு கேட்டுக்கொள்கிறென். இங்கே ஆங்கிலத்தேர்ச்சி இல்லாதவர்கள் தற்காலிக தொழிலையும் , சாதாரண தொழிலையும் கூட பெற முடியாமல் அல்லல்படுவதோடு இன்னும் சிலர் புகலிடம் கோரி வழக்கறிஞர்களுக்கு தங்களது ஊதியத்தில் பெரும்பகுதியை வழங்கி வருகின்றனர்.


இதனை தவிர்த்து முறையான முகவர்களிடம் வேலை வாய்ப்பு  வீசா மற்றும் மாணவர் அனுமதி வீசாக்களுக்கான கோரிக்கைகளை பெற்று வருவது காலச்சிறந்ததாகும்.


6, வேறு நிறுவனங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் யாது..?

எங்களுடைய நிறுவனமானது மாணவர்களின் கல்விக்காக தொடங்கப்பட்டது. கல்விச் சேவையும் , சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு மிகவும் குறைந்த செலவில் , நம்பகரமான வகையில் செயற்படும் இந் நிறுவனம் UK, USA, Canada, New Zealand, Australia, Malaysia  மற்றும் European union நாடுகளில் 500 மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவங்களிக்கு அங்கீகரிக்கப்பட்ட முகவராக செயற்படுகின்றது. 

BSc , BEng, BBA, LLB, BA, Msc, MBA, MA, LLM, MPhil மற்றும் PhD கற்கை நெறிகளை உலக பிரசித்திப்பெற்ற பல்கலைக்கழகங்களில் மிகக் குறைந்த கட்டணங்களில் புலமைப்பரிசில்களோடு மேற்கொள்வதற்கும் பட்டப்பின் படிப்பு நிறைவில் இருவருட WORK PERMIT களை பெற்றுக்கொள்வதற்குமான மிகச் சிறந்த வாய்ப்பை எமது நிறுவனம் வழங்குகின்றது.

எங்களிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது கல்விப்புலம் , ஆங்கிலப்புலம், தொழிற் பின்புலம் போன்றவற்றை மிக்க கூர்மையாக ஆராய்ந்து அவர்களுக்கு பொருத்தமான வெற்றி பெறக்கூடிய கல்விக் கற்கை நெறிகளை, 500 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 40,000 மேற்பட்ட பாடநெறிகளிலிருந்து தெரிவு செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான மேலதிக ஆலோசனைகளை, சர்வதேச தரத்தில் எம்நிறுவனம் மாத்திரமே இலங்கையில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவர்களின் கல்வித்திறன், தொழிண்வான்மைகேற்பான ஆவணத் தயாரிப்பு, நேர்த்தியான சுயவிபரக்கோர்வை (Profile) மற்றும் பொருளாதார வசதிகேற்ப பொருத்தமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் திறமையாகவும் கவனமாகவும்செயற்படுவது ஆகியவை காரணமாக எம்நிறுவனம் நூறு வீதம் (100℅) Success Record பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புகளுக்கு 

+94 779697226 

+94 758022512

+94 11 27 27 222

+44 7502173410

No comments

Powered by Blogger.