மஸ்ஜிதுல் ஹரமில் வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்ட இடம்
🕋 மஸ்ஜிதுல் ஹாரமில் கிங் அப்துல் அஜீஸ் நுழைவாயிலின் அருகே இந்த பகுதி உள்ளது.
வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்ட அந்த இடத்தில் தான் ஹஜ்ரத் உம்முஹானி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லம் இருந்தது.
இங்கிருந்து தான் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்ரா - மிஃராஜ் பயணம் துவங்கியது.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கு தங்கியிருந்த போது தான் ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜெரூசலமில் உள்ள மஸ்ஜிது அக்ஸாவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கிருந்து மிஃராஜ் பயணம் ஆரம்பமானது.

Post a Comment