Header Ads



சாத்தான்கள் ஓதுகின்ற சமாதானம்


- யாழ் அஸீம் -


ஐக்கிய நாடுகள் சபையானது அதிகாரபூர்வமாக 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஐ.நா. சபையானது பல நோக்கங்களை தன்னுள் கொண்டு இருந்தது.


அந்தவகையிலே எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றுவது, மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து நபர்களுக்கும் சம உரிமை உருவாக்குதல் மிக முக்கியமாக இன்னொரு மாபெரும் போரை ஒஏற்படுத்தாதிருத்தல் மட்டுமல்லாது ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளினதும் மக்களுக்கு நீதி, சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பரந்த நோக்கத்தையும் கொண்டிருந்தது .


இதற்கு மேலதிகமாக அகதிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், தீவிரவாதத்தைத் தடுத்தல், மக்கள் ஆட்சியை மேம்படுத்தல், குழந்தைகளின் நலம் பேணுதல், அம்மை நோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், போலியோ நோயை ஒழித்தல், மலேரியா இழப்புகளைத் தடுத்தல் மற்றும் உணவு உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற உப நோக்கங்களையும் கொண்டே ஐ.நா. சபையானது உருவாக்கப்பட்டது.


 உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா?


   இனவெறி பிடித்தாடும் இஸ்ரேலின்  கோரத்தாக்குதலால்,தற்போதைய நிலவரப்படி,காஸா மண்ணை  ஒருமணி நேரத்திக்குள் ,சுமார் 42 குண்டுகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன,15 அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டி்ருக்கின்றனர்.அதில் 6 பச்சிளம் குழந்தைகள்., 35 பேர்  படுகாயமடைந்து  கொண்டிருக்கின்றனர்.12 குடியிருப்புக் கட்டிடங்கள் வாழ்ந்த அடையாளமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன்.


        இது வரை கொல்லப்பட்ட 11,000க்கு மேற்பட்ட பலஸ்தீனியர்களில் 70 வீதமானோர் குழந்தைகளும் பெண்களுமாவார்கள்.


      காஸாவில் நடைபெறுகின்ற ,இனப்படுகொலைகளையும்,உணவு,நீர்,மின்சாரம் என்பவற்றை தடுத்தது மட்டுமன்றி அவர்களின் இணையவசதிகளையும் தடுத்து ,ஏவுகணைத் தாக்குதல்களாலும்,விமானக் குண்டு வீச்சுக்களாலும் அவர்கள் வீடுகளை தகர்த்த்து  அவர்களது வீடுகளையே மண்ணறைகளாக்கி  ,காஸாவை மயானபூமியாக்கி வரும் இஸ்ரவேலின்  கொடுமைகளைக் கண்டும், கண்மூடிக் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.நா சபை  உருவாக்கப் பட்ட நோக்கத்தை மறந்து இஸ்ரேலின் நலன்களுக்காக செயற்படுவது வேதனைக்குரியதாகும் . 


ஐ.நா வின் செயலாளரும்  இதனைத்தான்  சில தினங்களுக்கு முன் ,”ஹமாஸின் வெடிகணைகளுக்குப் பின்னனியாக ,காஸாவில் ஐம்பத்தாறு வருடகால இஸ்ரவேலின் அடக்கு முறையும்,.அதனால் அம்மக்களின் மூச்சு விட முடியாத திணறலும் உண்டு’ என்ற கருத்தை ஐநா சபையில் வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார்.


    உண்மை,நேர்மை,நீதி,கருணை இவைகளுக்காக  பக்கச்சார்பின்றி குரல் கொடுப்பவர்கள் இவ்வாறான அமைப் புகளிலிருந்து ஒதுக் கப்படுவார்கள் அல்லது தூக்கி வீசப்படுவார்கள்..


 இந்த்சபைகள் அமெரிக்காவின் இரண்டு விமானப் தாங்கி யுத்தக்கப்பல்கள் ,போர் விமானங்கள்,அணுசக்தி நீர்மூழ்கிக் கப் பல்கள், அமெரிக்காவின் 40,000படைகள் புடைசூழ ,குழந்தைகள், பெண்கள ,வயோதிபர்கள், நோயாளிகளைக் கொன்று குவிக்கும் மிலேச்சத்தனமான, கோழைத்தனமான,பேடிமைத்தனமான , இனவெறி பிடித்தாடும் இஸ்ரவேலுக்குப் பாதுகாப்பளிக்கின்றதா? அல்லது ..கொடூரமான விமான , ஏவுகணைத் தாக்குதல்களால் இறந்த 11,000 க்கு மேற்பட்ட காஸா  மக்களைப்  பாதுகாப்பதற்காகவா இந்த சபைகள் செயற்படுகின்றன?


 சுடுபட்ட பொம்மைகள் போல்  சாம்பலோடு கலந்துவிட்ட பாலகரின் வதனம் கண்டு  உங்கள் குழந்தையின் வதனம் நெஞ்சில் நிழலாடவில்லையா?இடிபட்ட கட்டிடத்தில்  துடிதுடித்துக் கதறும் மழலைகளின் உயிர் பிரியும் ஓசை  உங்கள்  செவிப்பறைகளில் அதிர்வை ஏற்படுத்தவில்லையா?


ஓ!இது பாலஸ்தீனக் குழந்தையல்லவா?


 நீதி,சுதந்திரம்,பாதுகாப்பு,மனித உரிமை,மனித நேயம் இவைகளெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்லவா?


(இரட்டை வேடமிடும் இதயமற்ற இந்த நயவஞ்சகர்களின் சபை பற்றி ,2008ம் ஆண்டு எங்கள் தேசம் பத்திரிகையில் ‘சாத்தான்கள் ஓதுகின்ற சமாதானம்’என்னும் தலையங்கத்தில் வெளிவந்தது. இக் கவிதை ‘மண்ணில் வேரோடிய மனசோடு’ கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது)

No comments

Powered by Blogger.