Header Ads



27 வருட சேவையிலிருந்து விடைபெறுகிறார் டாக்டர் ஏ.எச்.குல்நார் பேகம்


(முஹ்ஸி) 


டாக்டர் ஏ.எச்.குல்நார் பேகம் புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயுர்வேத வைத்தியராவார். அவரது 27 1/2 வருட சேவைக் காலத்தில் 23 1/2 வருடங்கள் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் அவர் சேவையாற்றியமை விஷேட அம்சமாகும். 


1998 ல் அவர் அங்கு சேவைக்கு வந்த போது ஒரு வைத்தியரும் ஒரு ஊழியருமாக வெளிநோயாளர்ப் பிரிவை (OPD) மாத்திரம் கொண்ட மத்திய மருந்தகமாக இருந்தது. அதனை வைத்தியசாலையாக தரமுயர்த்த தொடர் முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அவரின் வேண்டுகோளையேற்று 2004ல் முன்னாள் வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எச்.எம்.நவவி மத்திய மருந்தகத்தை வைத்தியசாலையாக தரமுயர்த்தினார். 


இதன் விளைவாக ஆண், பெண்களுக்கு 20 படுக்கைகள், அதுபோல் பெண்களுக்கான தனியான வாரட் திறக்கப்பட்டது. அதற்கான சகல தளபாடங்களும் அமைச்சர் நவவியினால் பெற்றுக் கொடுக்கப்பட்டன.


மேலும் டாக்டர் குல்நார் பேகம் அவர்களின் முயற்சி, வேண்டுகோளுக்கு இணங்க வடமேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் டாக்டர் அனுர செனவிரத்ன அவர்களின் உதவியுடன் நிதி மற்றும் மனிதவள ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதுடன் அங்கு நிலவிய குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டன. 


சமையலறை, டாக்டர் ஓய்வு அறை மற்றும் காரியாலய அறை என்பன புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.

தற்போது அங்கு Community Medical Officers உட்பட 12 Doctors, 16 Minor Staff சேவையாற்றுவது டாக்டர் குல்நார் பேகம் அவர்களது அர்ப்பணமிக்க சேவை மற்றும் நிர்வாக முகாமைத்துவம் என்பவற்றுக்கு சான்று பகர்கின்றன.


அது மாத்திரமன்றி Special Clinics, Skin, Orthopedic, Cupping, Leach Therophy, N.C.D Clinic போன்ற சேவைகளையும் அங்கு வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.


இறுதியாக 6 வருடங்களுக்கு முன்பு அவர் புத்தளம் ஆயுர்வேத  வைத்தியசாலையின் பிரதம பொறுப்பாதிகாரியாக பதவி உயர்வும் வழங்கப்பட்டிருந்தார். 


இவ்வாறு இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆரவாரமின்றி அமைதியாக அளப்பரிய சேவையாற்றிய டாக்டர் குல்நார் பேகம் அவர்கள் 12.09.2023 முதல் 3 மாத முன் ஓய்வு பெறுவதுடன் 01.12.2023 முதல் நிரந்தரமாக சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். 


டாக்டர் குல்நார் பேகம் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் பிரித்துப் பார்க்க முடியாத பன்முக ஆளுமையாகும். 


அவரது ஓய்வு காலம் மகிழ்ச்சிகரமாக அமைய பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.