Header Ads



"கல்எளிய அரபிக் கலாசாலை இன்னும் பல, நூற்றாண்டுகள் பிரகாசிக்க வேண்டுமென்பதே நோக்கம்"


இறைவன் ஒருவனது தோற்றத்தினையோ அலங்காரங்களையோ பார்ப்பதில்லை மாறாக அவனது எண்ணங்களையும் உள்ளுணர்வுகளையுமே பார்க்கின்றான். அவ்வாறே ஒருவரது சமரசம், நடுநிலைப் பார்வை நலன்விரும்பி போன்ற வார்தை ஜாலங்களால் ஆகர்ஷிக்கப்படாமல் அதன் உள்ளடக்கம், நம்பகத்தன்மை போன்றவற்றை வைத்தே அதன் யதார்த்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.


மேற்படி நலன்விரும்பி எழுதியதை வைத்து நோக்குமிடத்து அதில் ஆரம்பம் முதல் இறுதி வரை உண்மைக்கு மாற்றமான தகவல்களே நிரம்பி காணப்பட்டன. அதன் உள்ளடக்கம் அவரது உள்ளக்கிடக்கையையும் அவர் எந்தப் பக்கம் சார்பு என்பதை படம் பிடித்துக் காட்டினாலும் அது பற்றி நான் இங்கு எதனையும் கூற வரவில்லை. மாறாக மறைக்கப்பட்ட சில உண்மைகளை குறிப்பிடுவதே இக்குறிப்பின் நோக்கமாகும்.


நான் அறிந்த வகையில் குறிப்பிட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட முன்னர் சம்பந்தப்பட்ட வாதிகள் உட்பட பல நல்லெண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்கள் பல முறை பிரதிவாதி தரப்பினருடன் நேரடியாகவும் மூன்றாம் தரப்பினர் ஊடாகவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். 


2022 ஜூலை முதல் 2023 மே வரை இந்த சமரச முயற்சி நடந்தன. இதில் சமூக ஆர்வம் கொண்ட பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், பிரபல சமூக ஆர்வலரான ஜனாதிபதி சட்டத்தரணி, பழைய மாணவிகள் சங்கம், MLAC பெற்றோர் அமைப்பு பிரதிநிதிகள் போன்ற பலர் சம்பந்தப்பட்டனர். 


இந்த தொடர் சமரச முயற்சியின் விளைவாக 2022, நவம்பர் 12-ம் திகதி மூன்று சட்டத்தரணிகளைக் (ஜாவித் யூசுப், சாபிர் ஸவாத், அப்தாப் ஜமீல்) கொண்ட ஒரு இடைக்கால நிருவாக சபை உருவாக்கப்பட்டன. இதன் பிரதான நோக்கம் கல்லூரியின் பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட 46-ம் இலக்க 1991 MLAC சட்டம் மூலமும் கல்லூரியின் சட்ட யாப்பின் சரத்துகளுக்கு முரணாக இயங்கிக்கொண்டிருக்கும் BOM புனர் நிர்மாணம் செய்வதாகும். 


இந்த இடத்தில் பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட 46-ம் இலக்க 1991 MLAC சட்டம் மூலமும் கல்லூரியின் சட்டயாப்பின் பின்னணி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். 1978-1980 களில் கல்லூரியிலும் Kal -eliya ஊரிலும் இதனை விட பாரிய ஒரு பிரசினை உருவானது. கல்லூரியின் 5 ஸ்தாபகர்களில் ஒருவரான தற்போதைய தலைவரின் தந்தையான சலீம் காஜிக்கு எதிராக நிதி மோசடி சம்பந்தமாக ஊர்  இரண்டாக பிளவுபட்டு இறுதியில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில் வாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி திரு. M M  சுகைர் ஆவார். பின் சமரசமாக வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


அந்த சமரசத்தின் இறுதி முடிவு தான் கல்லூரிக்கான சட்டயாப்பும் (Rule), பாராளுமன்றத்தினால்  கூட்டிணைக்கப்பட்ட சட்டம்  (Act). இந்த யாப்பின் படி மேற்குறிப்பிடப்பட்ட மோசடிகள் இடம்பெறாவண்ணம் கல்லூரியின் முகாமைத்துவ சபை ( இதன் பின் சபை எனக் குறிப்பிடப்படும்) வெளிப்படைத்தன்மை (Transparency ) கொண்டதாகவும், பொதுசபைக்கு (Society) பொறுப்புக்கூறக் (accountability) கூடியதாகவும் அமைய்ய வேண்டும் என சட்டமியற்றப்பட்டது.


1. 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பொதுசபை     உருவாக்கப்படல் வேண்டும். (சட்டயாப்பை பிரிவு 4 (a) 


2. பொதுச்சபை உறுப்பினர்களைக் கொண்ட வருடாந்த பொதுக் கூட்டம் கூட்டப்படல் வேண்டும். (சட்டயாப்பு பிரிவு 9)


3. முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் காலம் 03 வருடங்கள். (பிரிவு 6) 


4. வருடாந்த பொதுக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கட்டாயம் இடம்பெறல் வேண்டும். (பிரிவு 9)


I. வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டும் (பிரிவு 9(a)


II. முகாமைத்துவ சபை பதவி தாங்குனர்களும் ஏனைய்யா உறுப்பினர்களும் பொதுச்சபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும். (பிரிவு 9 (b)


5. இடைக்கால தீர்வாக (transitional measure) Act ன் பிரிவு 2 ன் பிரகாரம், முகாமைத்துவ சபையின் உறுப்பினர்களாக அப்போது இருந்த, கல்லூரியின் இரு ஸ்தாபகர்களான Abul Hasan Haji & Saleem Haji இடைக்கால தீர்வாக (transitional measure) Act ன் பிரிவு 2 ன் பிரகாரம், முகாமைத்துவ சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 


1997 மற்றும் 1999/2000 முறையே Abul Hasan Haji & Saleem Haji ஆகியோர் இறையடி எய்தவே, Saleem Haji மருமகன் மர்கூம் S A C M Zubair Haji  முகாமைத்துவ சபையின் தலைவனார். (மகன் பயாஸ் சலீம் ஏன் தலைவராகவில்லை என்பது வேறு ஒரு வரலாறு)


Transitional period சலீம் காஜியின் மறைவோடு நிறைவு பெறவே, யாப்பு மற்றும் Act ன் படி புது முகாமைத்துவ சபை பொதுச்சபை கூட்டப்பட்டு வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புக் கூறக்கூடியமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் .........


அதிகாரத்தில் உள்ள பெரும்பாலானோர் தனது அதிகாரத்தை பிறர் தட்டிக்கேட்பதை, பிறருக்கு பதில் கூறவேண்டிய Accountability யை விரும்பவதில்லை. மேலும் வருடாந்த பொதுக்கூட்டம் மூலம் Board of Management தேர்வு செய்யப்படும் போது தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது தனக்கு வேண்டியவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்சம். 


எனவே மேற்படி அதிகார துஸ்பிரயோகத்தின் விளைவு, கல்லூரியின் முகாமைத்துவ சபையில் பல ஒழுங்கீனங்கள், நிதி கையாள்வதில் துஷ்ப்பிரயோகம் (வரையறுக்கப்பட்ட சைப் கபிடல்  தனியார் நிறுவனத்தில் 15 மில்லியன் இழப்பு, வரையறுக்கப்பட்ட அசெட் லின்க் தனியார் நிறுவனத்தில் 15 மில்லியன் இழப்பு)


மட்டக்குளிய கட்டிடத்தை விற்பதில் ஏற்பட்ட நிதி முறைகேடு (2.7 million) பற்றி இரண்டாவது வாதி முன்னாள் தலைவருக்கு Letter of Demand அனுப்பியமை.


முதலாவது வாதி சுமார் 10 க்கும் மேலான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு முகாமைத்துவ சபைக்கு 2020 பிட்பட்ட காலத்தில் அனுப்பிய கடிதம் சமூக ஊடக வலைதளங்களில் வந்தது பலருக்கு  நினைவுருக்கலாம்.


1978-1980 களில் கல்லூரியில் எவ்வாறான ஒரு பாரிய பிரச்சினை, முறைகேடு, துஷ்ப்பிரயோகம் இடம்பெற்று அது நீதிமன்றம் வரை சென்று, இறுதியில் அவ்வாறு தொடர்ந்தும் அப்பிழைகள் நிகழக் கூடாது என்பதற்காக அந்த ஸ்தாபகர்களும் உண்மையான சமூக நலன் விரும்பிகளும் கல்லூரி Transparent ஆகவும் Accountable இருக்க வேண்டும் என்பதற்காக Act ஐயும் யாப்பையும் உருவாக்கினார். 


ஆனால் தற்போதும் அதே நிலை தொடர்கின்றது. வருடாந்த பொதுக் கூட்டமில்லை, கணக்கறிக்கைகள் சமர்பிக்கப்படுவதில்லை, முகாமைத்துவ சபை அங்கத்தவர்களின் காலம் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் இராஜினாமா செய்யும் வரை, எந்த ஒரு கொடுக்கல் வாங்கல் பற்றி விளக்கமோ கேள்வியோ இடம்பெறுவதில்லை, கல்லுரி ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு மத்தியில் திட்டமிடப்பட்ட பிளவும் பிரித்தாளும் கொள்கையையும், சம்பளம், வருடாந்த சம்பள அதிகரிப்பில் வெளிப்படைத்தன்மை இன்மை, கூஜா பிடிப்பவர்களுக்கு முன்னுரிமை. 


எனவே மேற்படி நிலைமை மாற வேண்டும், இன்றேல் மகரகம கபூரிய கல்லூரிக்கு ஏட்பற்ற இழிநிலையே ஏற்படலாம். ஒரு தீயணைக்கும் இயந்திரத்தின் (Fire Extinguisher) பெறுமதி ஒரு பொருளுக்கு தீ பிடித்ததின் பிறகு தான் தெரிய வரும். அதற்கு முன்னர் அதன் பெறுமதியை சாதாரண மதியுடையயோர் புரிந்து கொள்ளமாட்டார்கள்.


இங்கே கல்-எளிய முஸ்லீம் மகளிர் அரபிக் கலாசாலை பற்றிய பிரச்சினை ஒரு சிலர் வெளிக்காட்ட முனைவது போன்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டமோ, தனிப்பட்ட குடும்ப தகறாரோ, அல்லது ஒரு சிலரை பழிவாங்குவதற்கான முயற்ச்சியோ அல்ல. மாறாக கல்-எளிய முஸ்லீம் மகளிர் அரபிக் கலாசாலை இன்னும் பல நூற்றாண்டுகள் பிரகாசிக்க வேண்டும் அந்த ஸ்தாபகர்கள் கனவு நனவாக வேண்டும்.


கல்லுரியின் அனைத்து செயற்பாடுகளும் Act & Rule ன் படி வெளிப்படை தன்மையுடன் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்று, அதில் முகாமைத்துவ சபை தெரிவு செய்யப்பட வேண்டும், கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்பட வேண்டும். 


இவையே  எமது கோரிக்கைகள். இவற்றை சாதிப்பதற்காக நல்லுள்ளம் படைத்த பலர் தமது நேரம் முயற்ச்சி பணம், மானம் என்பவற்றை செலவழித்து உழைத்தனர், உழைக்கின்றனர், இன் ஷா அல்லாஹ் உழைப்பார்கள்.


இதற்கான கூலியை நாம் எதிர்பார்ப்பது அல்லாஹ்விடமே. நலன் விரும்பிகளும் அவர்களின் அடிவருடிகளும் போற்றலாம், தூற்றலாம். அது  பற்றிய கவலையில்லை. 


-விரும்பி-

No comments

Powered by Blogger.