Header Ads



கிழக்கு ஆளுநரின் மக்கள் பணியில் ஒரு போதும் தடைகள் வரக் கூடாது


 (அபூ அஸ்ஜத்)


மழை பெய்தும் துாவானம் இன்னும் விட்டபாடில்லை இது தற்போதைய அளுநர்களின் நியமனத்தினையடுத்து சமூக வளைத்தளங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. சமூக வளைத்தளங்களில் செய்திகளை அல்லது தகவல்களை பதிவிடுகின்றவர்கள் சமூகத்தினது பிளவுக்கு வழிகோலாக அமைந்து விடக் கூடாது என்பது எமது ஆழமான கருத்தாகும்.


இந்த நாட்டில் இன ரீதியான மோதல்களால் அனுபவித்துள்ள துன்பங்களும் ,துயரங்களும் எண்ணிலடங்காதவை,இந்த சந்தர்ப்பத்தில் நாம் மீளவும் அவ்வாறானதொரு காலத்துக்குள் பிரவேசிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொண்டு எமது ஜனநாயக மற்றும் சுதந்திரமான  கருத்துக்களை பதிவிடுவது அவர்களது உரிமையாகும்.


இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்கள் விடயத்தை சிலர் தமது தனிப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் விதை்து அதன் மூலம் தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்த முற்படுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.


இன்றைய முகப் புத்தகங்களும்,சமூக வளைத்தளங்களும் அதனை இயக்குபவர்களும் பேசும் பொருளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினை விமர்சித்து கருத்து கூறுவதை கவனத்தில் கொண்டு செந்தில் தொண்டமானின் எதிர்கால செயற்பாடுகள் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடாது என்பதினால் நான் கண்டதை மக்களுக்கு எடுத்துரைப்பது பொருத்தம் என கருதி இந்த கட்டுரையினை எழுத முனைகின்றேன்.


கிழக்கு மாகாணமானது  தமிழினை தாய்மொழியாக கொண்ட மக்கள் நிறைந்து வாழும் மாகாணமாகும்.இந்த மாகாணத்தின் நிர்வாக பணிகள் தமிழ் மொழியில் இடம் பெறுவதுடன்,சிங்கள மொழியும் பயன்படுத்தப்படுகின்றது.


 இந்த நிலையில் கடந்த காலத்தில் ஆளுநர் நியமனம் செய்யப்பட்ட போது கிழக்கு மகாகாண சமூக வளையமைப்பினர் என்ன கருத்துக்களை வெளியிட்டார்கள் என்பது பற்றியும் நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.


அன்று கிழக்கு மாகாண ஆளுநராக பெரும்பான்மையினை சேர்ந்த பெண்ணொருவரை அப்போதைய ஜனாதிபதி நியமித்த போது இங்கு ஒரு இஸ்லாமியரை அல்லது தமிழரை நியமியுங்கள் என்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டதாக எவ்வித ஆதாரங்களும் காணமுடியவில்லை.


இந்த நிலையில் தற்போயைத கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமான் ஒரு தமிழ் பேசும் தமிழன் என்பதில் நாம் மகிழ்வு கொள்வதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்காது. ஆனால் அவர் ஒரு கிழக்கு மாகாணத்தை சார்ந்தவர் அல்ல என்ற வாதப் பிரதிவதங்கள் முகநுாலில் வாதிக்கப்படுகின்றதை பார்க்கின்றோம்.


எனது பார்வையில் பெரும்பான்மை ஒருவர் அகற்றப்பட்டு சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய ஒருவர் நியமிக்கப்பட்டமை தற்போதைய கிழக்கு மாகாண குறிப்பாக முஸ்லிம்களுக்கு தமது பிரச்சினையினை தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருப்பதை நாம் மறுதலிக்க கூடாது.


இவ்வாரானதொரு நிலையில் செந்தில் தொண்டமான் என்பவர் மலையகத்தினை சேர்ந்தவர்.மலையக மக்களின் மீட்சிக்காக அரசியல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் மக்களுடன் நெருக்கமாக   செயற்பட்டுவருவதுடன்,200 வருடங்கள் பழமை வாய்ந்த மலையக சமூகத்தின் கட்சி அரசியலில் முக்கியமான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் அவர் செயற்படுவதானது பரந்த சகல சமூகங்களினதும் ஆதரவை பெற்ற ஒருவராகவே அவர் அடையாளம்படுத்தலாம்.


இது இவ்வாறு இருக்கையில் கிழக்கில் ஒரு முஸ்லிம் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா இருந்துள்ளார்.அவரின் பிற்பாடு   நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை மக்களாகிய நாங்கள் நன்கு அறிவோம்.ஆட்சிகளுக்கு வரும் அதிகாரம் கொண்டவர்கள் ஆளுநர் நியமனங்களில் என்ன செய்தார்கள் என்பதையும் மக்களாகிய நாங்கள் கேள்விகளை கேற்க வேண்டியுள்ளது.


இது இவ்வாறு இருக்கும் போது  கடந்த காலங்களில் மிகவும் வக்கிரமான முறையில் சோடிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீன் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்ற ஷாலினி  தொடர்பிலான விடயத்தின் போது,றிசாத் பதியுதீனின் நியாயத்தை பேசுவதற்க கூட அவர் பிரதி நிதித்துப்படுத்தும் கூட்டு கட்சியின் பிரதி நிதிகள் கூட முன்வராமையினையும் இந்த நேரம் நாம் நினைவுபடுத்த வேண்டும்.


அது மட்டுமல்லாமல் தமது சக அமைச்சரவை சகா பற்றி ஒரு துளியேனும்  நம்பிக்கையில்லாத நிலையில் மேற்படி மலையக சிறுமியின் மரணத்தை வைத்துக்கொண்டு வாக்குகளை அதிகரித்து கொள்ளலாம் என்று றிசாத் பதியுதீனின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியமை,பொலீஸாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரணை நடத்துமாறு கோறியமை போன்ற விடயங்களை பார்க்கும் போது இந்த அரசியல் வாதிகளின் உண்மை முகத்தினை புரிந்து கொள்ள முடிகின்றது.


அமைச்சரவையின்  தோழமை கொண்டிருந்த மனோ கணேஷன்,இராதா கிருஷ்ணன்.திகாம்பரம் போன்றவர்கள் அப்போது செயற்பட்ட விதம் இன்னும் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது.இதே வேளை முஸ்லிம் கட்சிகளின் தலைமையும் இது தொடர்பில் பேசா மடந்தையாகவே இருந்ததை சுட்டிக்காட்டுவதும் பொருத்தமாகும்.


அன்றைய இந்த சம்பவத்தின் போது தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் தோன்றிய தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஷாலினி தொடர்பில் முன்வைத்த விடயங்கள் வரவேற்க கூடியதொன்று.பிழையான தரவுகளின் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அவதுாறுக்கு,திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளுக்கும்  முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சரியான தரவுகளை ஆராய்ந்து அந்த முஸ்லிம் குடும்பத்துக்காக பேசினால் தமது வாக்குகளிலும்,அரசியலிலும் சங்கடங்களை எதிர் கொள்ளலாம் என்ற பேச்சுக்களுக்கு அப்பால் நியாயாதிக்கத்தை நாடறிய செய்த ஒருவராக இந்த செந்தில் தொண்டமானை நாம் பார்க்கின்றோம்.


இது இவரது பரந்து பட்ட அரசியல் மற்றும் சமூகம் பற்றி நல்லெண்ணத்தின் வெளிப்பாடக பார்க்க முடிகின்றது.


இப்படிப்பட்ட சிந்தணையாளர் ஒருவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டமையானது கிழக்கு முஸ்லிம்கள் தமது மத ,கலாச்சார விழுமியங்களை செய்வதற்கு போதுமான அரண்களாக இருக்கும் என்பது எனது அளவுகோலாகும்.


செந்தில் தொண்டமான் அவர்கள் ஜனாதிபதியிடம் தனக்கு ஊவா மாகாணத்தின் ஆளுநர் பதவி வழங்கினால் தனது அரசியல் பணியினை இலகுவாக செய்யலாம் என்று வேண்டியிருக்க வேண்டும்,அரசியலில் செயல் திறமையுடன் செலாற்றும் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பும் இதுவாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதிக்கு தேவைப்பாடு இருந்திக்கும் கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதனை தீர்க்கும் ஒரு அனுபவமிக்க இளைஞரை நியமிக்க ஜனாதிபதி நினைத்திருக்கலாம். இது எனது ஊகமாகும்.


எது எவ்வாராக இருந்தாலும் கிழக்கு மாகாண  ஆளுநர் நியமனம் முடிந்து அவர் பணிகளை அரம்பித்துள்ள நிலையில் தொடர்ந்தும் அவருக்கு எதிரான முறையற்ற கருத்துக்களை சமூக வளைத்தளங்களில் பதிவிடுவது அவரது மனதில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தைினை தோற்றுவித்திடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


இருந்த போதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நன்கு அறிந்தவர்,முஸ்லிம்களுடன் மிகவும் நட்புடன்,நெருக்கத்துடன் பழகும் பண்பாளர் என்ற வகையில் இந்த எதிர் கருத்துக்களை காதுகளுக்குள் வாங்காமல் கிழக்கு முஸ்லிம்களின் காணி,கல்வி,தொழில் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வினை பெற்றுத்தரும் ஒரு ஆளுநராக செந்தில் தொண்டமான் அவர்கள் காணப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரையினை எழுதியுள்ளேன்.

No comments

Powered by Blogger.