Header Ads



"யா அல்லாஹ், ஏதும் நன்மை இருந்தால் குணப்படுத்திவிடு"


இக்கதை சவூதி அரேபியாவில் உள்ள, மிகப்பெரிய மருத்துவமனையின் இருதய நோயியல் பிரிவின் தலைவர் சொன்ன மனதை நெகிழவைக்கும் சம்பவங்களின் கோவை.


“அது ஒரு செவ்வாய்கிழமை, அன்றுதான் நான் அக்குழந்தைற்கு சத்திரசிகிச்சை செய்தேன். அடுத்தநாள், அவனின் உடல் சற்று தேறியது,அவன் விளையாடினான்.வியாழக்கிழமை காலை 11.15 மணிக்கு தாதி பதறியடித்துக்கொண்டு என்னிடம் ஓடி வந்தாள்: ‘டாக்டர்,டாக்டர்! அக்குழந்தையின் சுவாசம் நின்றுவிட்டது! அவனின் இருதயம் நின்றுவிட்டது போலிருக்கின்றது!’ என்று அலரினாள். நான் உடனடியாக அவனைப்பார்க்க விரைந்தேன்,அவனின் நெஞ்சுப்பகுதியில் மெதுவாக கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ‘மசாஜ்’ செய்தேன்,ஆனாலும் இதயம் துடிக்கவில்லை, ஆனால் சற்றுநேரத்தில் கண்ணியம் நிறைந்த அல்லாஹ் அவனுக்கு புதிதாக கொஞ்சவாழ்க்கையை கொடுத்தான், அவனின் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. வல்லவன் அல்லாஹ்விற்கு நன்றி கூறினேன், அவனது நிலைமை எனக்கு பூரண திருப்தியானதும் அவனது உறவினர்களை அழைத்து என்ன நடந்தது என்று கூறினேன்”.


“எப்போதும் நோயாளிப் பிள்ளைகளின் நிலைமைபற்றி பெற்றோரிடம் சொல்வது மிகவும் கடினமாகும். நான் அப்பிள்ளையின் தாயை கண்டு அவரிடம் அவரின் மகனின் இருதயம் நின்றுபோனதையும் மருத்துவ விதியின்படி அவர் இறந்து விட்டதாகவும் கூறினேன்.”


“சில தாய்மார்கள் இவ்வாறான செய்திகளை கேட்டவுடனேயே மோசமாக பிரதிவினையைக் காட்டுவார்கள்,அநேகமாக அழுது பிரண்டு மருத்துவருக்கும் குறை கூறுவார்கள்.ஆனால் இந்தப்பெண் அவ்வாறு அழவில்லை, மாறாக அமைதியாக மிகப்பொறுமையாக எனக்கு செவிதாழ்த்தினார். பின்னர் ‘அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்’ எனமட்டும் கூறிவிட்டு வெளியேறினார்.”


“அக்குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பத்து நாட்களின்பின் அப்பிள்ளை சிறிது அசைந்தது, நாங்கள் அல்லாஹ்விற்கு நன்றி செழுத்தினோம்,சிறிது சிறிதாக அதற்கு சுயநிணைவு திரும்பியது.ஆனால் பன்னிரண்டு நாட்களின்பின்,மீண்டும் அவனின் இருதயம் துடிக்காமல் நின்றது.நாங்கள் மீண்டும் நெஞ்சுப்பகுதிற்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் மசாஜ் செய்தோம்,ஆனால் இருதயம் துடிக்கவில்லை. நான் அப்பிள்ளையின் தாயாரிடம் சிறிது நம்பிக்கையே இருப்பதாக்க்கூறினேன்.”


“இதனை அப்பிளையின் தாய் கேட்டபோது, அழுவதற்கும் விம்முவதற்கும் பதிலாக ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக்கூறி வானை நோக்கி கைகளை உயர்த்தி பிராத்தித்தாள்: ‘யா அல்லாஹ், என் பிள்ளை குணமடைவதில் ஏதும் நன்மை இருந்தால் அவனை குணப்படுத்திவிடுவாயாக.’ எனக்கூறினார். ஆச்சரியமாக அவனின் இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது,எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது, அல்லாஹ்விற்கு நன்றி கூற்னோம். இத்தருணத்தில் அத்தாய் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்.”


“அடுத்துவந்த சிலநாட்கள் கிழமைகளில் குழந்தையின் ஆரோக்கியம் மோசமாவதும் நல்ல நிலைக்கு திரும்புவதாகவும் இருந்தது,ஆனால் அவனின் தாய் இறைவனின் அருளில் நம்பிக்கை வைத்தவளாக இருந்தாள்,அநேக நேரங்களில் பிராத்தனையில் ஈடுபட்டாள்.”


“முன்றரை மாதங்கள் கழிந்தும் குழந்தை அதிதீவிரசிகிச்சைபிரிவிலேயே இருந்தது. இப்போது புதிய ஒருவருத்தம், அவனின் மூளை வீக்கமடையத்துவங்கியது. மருத்துவர்கள் தொடராக அவனை கவணித்துக்கொண்டாலும் அவனின் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது,அவன் பிழைப்பது கடினம் எனத்தோன்றியது. நான் அதிதீவிர சிக்கிச்சை பிரிவின் பொறுப்பாளன் என்ற வகையில் அவன் பிழைப்பது கடினம் என்ற மோசமான செய்தியை சொல்வதற்கு தாயின் மனதை தயார்படுத்த எண்ணினேன். ‘அவன் இருதயம் செயலிலக்காவிட்டலும்,அவனின் மூளை வீக்கமடைவது அவனின் உயிருக்கு ஆபத்தானது,’ என அவரிடம் கூறினேன்.”


“மீண்டும் அப்பெண் என்னைப் பிரியும் முன், ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக்கூறிவிட்டுச்சென்றாள். நான் அவள் இறைவனோடு மிக ஆழமான தொடர்பை பேணுவதாக உணர்ந்தேன்.அவளின் வார்த்தைகளான ‘ஓ..அல்லாஹ்,என் பிள்ளை குணமடைவதில் ஏதும் நன்மை இருப்பின் கருணையோடு அவனை குணப்ப்டுத்துவாயாக’ என்பது அவளின் தளராத இறைவிசுவாசத்தை காட்டியது. அதுபோன்ற ஒரு பெண்ணை எனது 23 வருட மருத்துவ சேவையில் காணவில்லை.”


“இன்னொரு நாள் அக்குழந்தை சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்றது. நாங்கள் நிச்சமாக இம்முறை அக்குழந்தை உயிர்பிழைக்காது என நினைத்தோம். நான் மீண்டு அத்தாயை அழைத்து விபரத்தைக்கூறினேன்,வழமைபோலவே அப்பெண் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினாள்.”


“அக்குழந்தை நாங்கு மாதங்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது திடிரென புதுமையான நோய் ஒன்று அதனை தொற்றியது,நான் மருத்துவராக சேவை செய்த காலத்தில் ஒருபோதும் அதுபோன்ற நோயிற்கு வைத்தியம் பார்த்ததில்லை.நாங்கள் மருத்துவர்கள் மிகவும் கவலையடைந்தோம்,ஏனென்றால் அவனின் நெஞ்சுப்பகுதி வீங்கத்துவங்கியது. எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்தோம், ஆனாலும் உடன்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது.நான் அவனின் தாயிடம் அவனைக்காப்பாற்றுவதற்கான வழி இல்லை எனக்கூறினேன். எப்போதும்போல அத்தாய், ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக்கூறிவிட்டு, ‘யா அல்லாஹ்! என்பிள்ளை வாழ்வதில் ஏதும் நன்மை இருப்பின் அவனை கருணைகூர்ந்து குணப்படுத்துவாயாக’ என்றாள்.”    


“ஆறு மாதங்கள் கழியும்போது அக்குழந்தையினால் அசையவோ,பேசவோ,கேட்கவோ,பார்க்கவோ முடியவில்லை. ஆனால் அவனின் தாய் பொறுமையின் இமயமாக இருந்தாள்,இன்னும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்தவளாக அவன் குணமடைய பிராத்தித்தவளாக இருந்தாள்.”


“நீண்ட எட்டு மாதங்களின் பின் அவளின் பிராத்தனைகள் பூத்துக்காய்க்க ஆரம்பித்தது,அவளின் மகன் முழுமையாக குணமடைந்தான். அவன் விரைவாக அவளுக்குப்பக்கத்தில் ஓடி ஆடி விளையாடத்தொடங்கினான்.ஆனால் இது நம்பமுடியாத ஆச்சரியம்தான்.”


“ஒன்றரை வருடங்களின்பின்னால், ஒருநாள் எனது மருத்துவநண்பர் ஒருவர் என்னிடம் வந்து என்னை காண்பதற்காக ஒரு கணவனும் மனைவியும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் வரவேற்பரையில் காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.நான் யார் என்று கேட்டப்போது தெரியாது என்றார்.நான் அங்கு சென்றபோது அக்குழந்தையை அடையாளம் கண்டேன்,நான் சிகிச்சை செய்த குழந்தை ஆரோக்கியாமாகவும் விறுவிறுப்பாகவும் சிரித்த முகத்தோடு அங்கிருந்தான். புதிதாகப்பிறந்த அவனின் தம்பியை அப்பெண் மடியில் வைத்திருந்தார். அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வந்திருந்தார்கள். நான் அம்மழலையையைக்காட்டி அவர்களது 13வது அல்லது 14 வது குழந்தையா என நகைச்சுவையாகக்கேட்டேன்,”


“அப்பிள்ளையின் தந்தை அவரின் மூத்த மகன் அவர்கள் திருமணம் செய்து 17 வருடங்களின் பின் கிடைத்ததாகக்கூறினார். நான் அம்மனிதரை அறையினுள் அழைத்துச்சென்று தனிப்பட்ட முறையில் அவரின் மனைவியின் பொறுமையைப்போன்று ஒருபோதும் காணவில்லை என்றும் அவரின் மனைவி சிறந்த பெண்மணி என்றும் கூறினேன். வல்ல நாயன் 17 வருடங்களின் பின் ஒரு குழந்தையை அருளினான்,ஆனால் அதுவும் நோயுற்றிருந்தது,இருந்தும் துணிவோடு கணிவாக அவனை அத்தாய் கவணித்தாள்.”


“அவரின் கணவன் என் கைகளைப்பற்றியவனாக அவர்கள் 19 வருடங்களுக்கு முன்னர் திருமணம் புரிந்ததாகவும் பொருத்தமான காரணங்கள் இன்றி அவரின் மனைவி ‘தஹஜ்ஜுத்’ தொழுகையை விடாமல் தொடராக தொழுதுவருவதாகவும் ஒருபோதும் போய்பேசவோ, புறம்பேசவோ எவரையும் கேலி செய்யவோ இல்லை என்றும் கூறினார். அவர் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியாக வரவேற்பதாகவும்,அவருக்காக பிராத்திப்பவராகவும் இருப்பதாகக்கூறினார். இறயச்சமுள்ள என் மனைவியை விட்டுவிட்டு இரண்டாம்தாரமாக இன்னொருவளை ஒருபோதும் மணக்கமாட்டேன் என்றும் கூறினார்.”


AKBAR RAFEEK


1 comment:

  1. Myself also coming cry subahanallah good deen women!

    ReplyDelete

Powered by Blogger.