Header Ads



ஓய்வின்றி உழைத்து கெலிஓய அஸ்ஸிராஜ் கல்லூரி வரலாற்றில், இடம்பிடித்த அன்புக்குரிய A.M.S. Nazeema



நூற்றாண்டு கடந்து மூன்று தசாப்தங்களாகும் (1892) கெலிஓய அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரியின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது பெண் அதிபரான அன்புக்குரிய திருமதி A.M.S. Nazeema Madam அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பருடன் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். வரலாற்றில் எல்லோருக்குமான ஒரு பக்கம் இருந்தாலும் அவரவரது பக்கத்தை சமூகமே படிக்கும் படி அமைத்துக் கொள்வது அவரவர் கைகளிலேயே உள்ளது. 


அகுரனை 6ம் மைல் கல்லைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலையில் தனது B.A. பட்டத்தை தொடரும் காலமே மௌலவியா ஆசிரியையாக சேவைக்குள் கால்பதித்தார். பிறந்தகம் அக்குரணை என்றாலும் இவரது ஆசிரிய சேவை முழுவதையும் தெநுவரை வலயத்திற்கே வழங்கினார். Planning and team work என்பதற்கு சிறந்த உதாரணமாக இலங்கினார். இவர் (A/L) உயர்தரம் கற்கும் காலம் 7 பேர் கொண்ட குழுவாக இயங்கி சிறந்த பெறுபேற்றை பெற்று முதல் அமர்விலேயே பல்கலைக்கழகம் சென்றும் தமது தோழிகளில் 3 பேருக்கு நுழைவு கிடைக்காமையினால் அனைவரும் அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு தடவை ஒரு குழுவாக இயங்கி தமது தோழிகள் சகிதம் 7 பேருமாக மீண்டும் உயர் தரப்பரீட்சை எழுதி தோழிகளையும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு ஊக்கமளித்தார். அக்காலத்தில்  பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கான தொழுகை அறை இன்றி மிகுந்த சிரமத்துடன் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். பல்கலைக்கழக நிர்வாகத்தில் (admin) இருந்த முஸ்லிம் அதிகாரிகள் கூட இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள தயக்கம் காட்டிய அக்காலத்தில் துணிச்சலாக  முன்நின்று Arts Faculty Dean அவர்களுக்கு எழுத்து மூல கோரிக்கை விடுத்து அதில் வெற்றியும் கண்டார். மூன்று தசாப்தங்கள் கடந்தும் அவர் பேரதனை முஸ்லிம் மஜ்லிஸில் அவர் ஆற்றிய சேவைகளை இன்றும் அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


அஸ்ஸிராஜின் வரலாறு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ள இரண்டு பெரும் ஆளுமைகள் என்றால் அது இவர்களும் மறைந்த முன்னால் அதிபர் H.L.Salahudheen sir அவர்களுமே எனலாம். தெநுவரை கல்வி வலயத்தில் மிகவும் பின் தங்கியிருந்த தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் ஒன்றாகவே எமது பாடசாலையை சலாஹுதீன் சேர் பொறுப்பேற்றார். ஆனால் அவரது ஓய்வு பெறும் நாளில் வலயத்திலேயே சிறந்த சுற்றாடலுக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த ஆசிரியர் குழாம், மாணவத் தலைமைத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்பி ஒரு ஆண்பாடசாலைக்கான உறுதியான கட்டமைப்பை நிறுவிச் சென்றார். 


அதன் பின்பு ஒரு சில ஆண்டுகளில் எம் பாடசாலைக்குள் கால் பதித்த Nazeema madam அவர்கள் பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியையாக பொறுப்பேற்று சிறப்பாக இயங்குகையில் உட்கட்சி அரசியல் காரணமாக அவரைப் பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு (primary) இடமாற்றம் செய்தாலும் அதனையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஒரு சில ஆண்டுகள் சிறப்புற செவ்வனே கடமைகளை நிறைவேற்றி பாடசாலை சமூகத்தினுள் இன்னும் நன்மதிப்பைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் அதிபருக்கான வெற்றிடம் ஏற்படவே, பலரதும் வேண்டுகோளின் படி புதிய அதிபர் வரும் வரை பதில்அதிபராக கடமையேற்று பாடசாலையின் மறுமலர்ச்சியின் புதியதோர் பக்கத்தை வரைய ஆரம்பித்தார். 


அது வரை காலம் வலய மட்டத்தை தாண்டுவதே பெரும் பாடாக இருந்த இணைப்பாடவிதான செயற்பாடுகள் (Extra Curricular activities) எல்லாம் மிக சுறுசுறுப்பாகவும் வினைத்திறனாகவும் இயங்க ஆரம்பித்தன. அவர் அளித்த ஊக்கமும் சிறந்த தலைமைத்துவமும் ஆசிரியர் குழாமையும் சமூக செயற்பாட்டாளர்களையும் சுயமாக பாடசாலைக்கான பொதுப்பணிகளுக்கு ஈர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் பாடசாலையில் கடமை புரிந்த Asanka sir அவர்களது பங்களிப்புடன் புதிதாக Badminton விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டது. பல ஆண்டு முயற்சியின் பயனாக அதிகமான விளையாட்டு வீரர்களை உருவாக்கி கொழும்பிலும் கண்டியிலும் அமையப்பெற்ற பல பிரபலமான பாடசாலைகளை தேசிய மட்டத்தில் வீழ்த்தி இடங்களைப் பிடித்து Malaysia விற்கும் ஒரு Badminton Tour சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது. முறையான மைதனாமே இல்லாத எமது பாடசாலை மாணவர்களை தொலைதூரத்திலிருக்கும் ஒரு Badminton Court இற்கு சென்று பயிற்சி பெறுவது கடினம் என்பதால் பாடசாலைக்கான பிரத்தியேக Badminton court ஒன்றும் இவரது முயற்சியில் நிறுவப்பட்டது. Western Band Group மீள புதுப்பிக்கப்பட்டது. Qualification இன் படி இவர் ஒரு இஸ்லாம் பாட ஆசிரியை என்றாலும் கலை மற்றும் முகாமைத்துவத்தில் சிறந்த ஈடுபாடு காட்டினார். தமிழ்த் தினம், ஆங்கில தினம் என எந்த போட்டி நிகழ்வாக இருந்தாலும் மாணவர்களைத் தயார் படுத்துவதில் இவர் முதன்மையானவர். விளையாட்டுத்துறை, நாடகம், வில்லுப்பாட்டு, பக்கீர் பைத் என்று

இவர் பயிற்சிளித்த எக்கச்செக்கமான உதாரணங்களைக் காட்டலாம். நான் தரம் 11 இல் கற்கும் போது அகில இலங்கை ரீதியில் பேச்சுப்போட்டிக்குத் தெரிவாகி செல்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளை என்னை வீட்டுக்கு அழைத்து கொழும்புக்குச் சென்று வருவதற்கு கைச்செலவுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும் தந்து வாழ்த்தி அனுப்பியதை என்றும் மறக்க முடியாது. 


எந்தவொரு project ஆயினும் பெரியளவிலேயே திட்டமிடுவார். வேறு பாடசாலைகளில் SDC, OLD Students அமைப்புக்கள் அதிபரைப் பின்னால் இருந்து துரத்த அதிபர் பரபரப்பாக இயங்கும் வழமை இருப்பினும் எமது பாடசாலையில் இவரது தலைமைத்துவத்தின் போது இவர் முன்மொழியும் திட்டங்களையும் அதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வதிலும் அவ்வமைப்புகள் தலை உயர்த்த நேரமின்றி உழைத்தமை கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும். பாடசாலை நேரத்தில் மாத்திரம் அதிபராக அன்றி சேவைக்காலம் முழுவதும் 24 மணி நேர அதிபராகவே அவர் கடைமையாற்றினார். அகில இலங்கை ரீதியில் (All Island places) போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று இடம் பிடித்தல் என்பது 2008 இன் பின்னர் ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இவரது தலைமைத்துவத்தின் பின்னரே ஒவ்வொரு ஆண்டும் பாடசாலையில் பல மாணவர்கள் அகில இலங்கை மட்டம் சென்று பாடசாலையின் கொடியை உயரப் பறக்கச் செய்யும் trend உருவானது. 


எந்த ஒரு மாணவனையும் ஒரு வளமாகவே கருதினார். பன்முகத் திறமை வாய்ந்த ஒரு பாடசாலை மாணவ சமூகத்தில் எல்லா மாணவர்களையும் OL results எனும் ஒரே தராசில் போட்டு நிறுக்கும் வழமையை மாற்றி அவரவர்க்கு ஏற்ற திறமையை இனம் கண்டு அனைத்துத் துறைசார் திறமையாளர்களையும் கொண்ட ஒரு  integrated மாணவ சமூகத்தை உருவாக்கி ஒரு புதிய பொழிவு பெற்ற பாடசாலையை உருவாக்கி முன்மாதிரி அதிபராக கடைமையை செய்து காட்டினார். 

பல தசாப்த கனவாக இருந்த பாடசாலையின் Advanced Level ஆரம்பிக்கப்பட்டு இலக்கின்றிப் பயணித்த வேளை அதனையும் முறையாக நெறிப்படுத்தி HEADS எனும் பாடசாலையுடன் இணைந்த கிளை அமைப்பின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்பி முதல் அமர்விலேயே பல்கலைக்கழகம் செல்லும் பாடசாலையாக உருவெடுத்தது. O/L ஐப் பொறுத்தவரை எமது சமூகத்தில் வழமையாக மாணவிகள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மாணவர்கள் கொடுப்பதில்லை. இதனால் ஆண் பாடசாலை ஒன்றாக சிறந்த பெறுபேறுகளை வெளியிடுவதில் பின்தங்கியிருந்த போது இவர் அளித்த சிறந்த முகாமைத்துவத்தையும் திட்டமிடலையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். எப்போதும் தொடர்ச்சியாக உற்சாகமூட்டி பொடுபோக்காக இருந்த மாணவர்களை எல்லாம் நெறிப்படுத்தி முதன்முறையாக பாடசாலையில் 2 மாணவர்கள் 9A சித்தி பெற்றதும் இவரது முயற்சியின் பிரதிபலனே. ஒரு ஆண்பாடசாலையாக O/L பெறுபேற்றில் பின்தங்கி இருந்த நம் பாடசாலை 2014 ஆம் ஆண்டு ஏனைய எல்லாப் பாடசாலையகளையும் பின்தள்ளி வலயத்திலேயே முதன்மை இடத்தைப் பெற்றது. ஒவ்வொரு மாணவனது திறமையையும் சரியாக இனம் கண்டு அவனுக்கான இடத்தைத் தேடிக் கொடுப்பதில் தனது சொந்த நேரத்தை அதிகம் செலவு செய்வார். இவரது சுமார் 8 வருட அதிபர் சேவையின் முடிவில் பாடசாலையின் சுற்றுச்சூழல் முதற்கொண்டு மாணவர்களின் ஆளுமை வரை அனைத்துமே புதுப்பொழிவு பெற்றது. 


முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பலரிடமும் இருந்தாலும் செயலில் கொண்டு வருவது என்பது எல்லோராலும் முடியாத ஒரு காரியமே. அந்த வகையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் குழாம், பழைய மாணவர்கள், பெற்றோர், தனவந்தர்கள் என்று ஒட்டுமொத்த சமூகமும் இவரது முயற்சிகளில் சளைக்காமல் துணை நின்றனர். AlHaj Fawmy, Alhaj Jawfar, Alhaj Faris, A One Computers Ltd ஆகியோர் வழங்கிய மகத்தான பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் முக்கியமாக Alhaj Haja Hussain sir அவர்களது விரிந்த கையின் ரொக்கங்கள் இன்றி இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது. பல இலட்சங்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட Badminton court, இதர கட்டடங்கள், வருடாந்தம் இடம்பெறும் பரிசளிப்பு நிகழ்வு, வறிய மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில் பணம் என்று அவரது தாராள மனம் இவ்வனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியில் இருந்ததை ஒரு பழைய மாணவனாக நன்றியுடன் நினைவு கூர்கிறேன். 


கண்டி நகரில் அமைந்துள்ள பிரபலமான முன்னணிப் பாடசாலைகளுடன் ஒப்பிடும் தரத்தில் கல்வி, ஒழுக்கம், ஆளுமை என்பன விருத்தியடைந்த ஒரு ஆண்பாடசாலையை உருவாக்குவதற்காக அவர் கண்ட கனவை அடைய ஓய்வே இன்றி உழைத்தார். விலாசமற்றிருந்த எம் பாடசாலையை ஒரு Brand ஆக்குவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தகுதி வாய்ந்த ஒரு குழுவை நியமித்துப் பாடசாலையின் இலச்சினையையும் நிறத்தையும் புதுப்பித்தார். ஒரு புறம் வயதான ஒரு தாயைப் பராமரித்தவராக, சிறந்த குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு பாடசாலைக்காக உழைத்தார். நகரங்கள், கிராமங்கள், கல்லூரிகள், அதிகாரிகளின் காரியாலயங்கள், தனவந்தர்களின் வாசற்படிகள் என்று மைல்க்கணக்கில் நடந்தார். அதே போல் குறிப்படத்தக்க இன்னும் ஒருவரே மதிப்புக்குரிய Asanka Wanninayake sir அவர்கள். நாட்டில் இனவாதம் தலை விரித்து ஆடிய போதும் ஒரு முஸ்லிம் பாடசாலையின் முன்னேற்றத்துக்காக ஓய்வின்றி உழைத்த 

ஒரு சகோதர மத ஆசிரியர் ஆவார். பூச்சியத்தில் ஆரம்பித்த எமது Badminton அணி இவ்வளவு தூரம் வருவதற்கு அவரது மகத்தான பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. Nazeema Madam அவர்களின் காலத்தில் ஒரு சிறந்த செயலாளராக கடமையாற்றி அவரது அனைத்து முயற்சிகளிலும் Asanka sir உறுதுணையாக இருந்தார். 


Wahankoha Arafa MV , Muruthagahamula Fathima GC என்று இவர் இருந்த ஒவ்வொரு பாடசாலையிலுமே இவர் வகித்த பதவியைத் தாண்டி ஒரு படி மேல் நின்று உழைத்தார். சுருக்கம் கருதி அந்த சேவைகள் இங்கு குறிப்பிடப்படவில்லை. 


துடிப்பான ஆண்பாடசாலைகளைக் கட்டுப்படித்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ஒரு ஆண் அதிபரால் மட்டுமே பாடசாலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று இருந்த பிற்போக்கு சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு பெண்அதிபராக இருந்தும் 130 வருட வரலாற்றின் மிகச்சிறந்த 8 வருடத்தைக் கொண்ட அத்தியாயத்தை எழுதிவிட்டு எதிர்கால சந்ததிக்காகவும் சமூகத்துக்காகவும் ஒப்படைத்து விட்டு அமைதியாக ஓய்வு பெற்றார் எங்கள் அன்புக்குரிய அதிபர். 


அன்னாரது தூய சேவைக்கு செல்வங்களால் நன்றிக்கடன் செலுத்த முடியாமையால் அதற்கு பொருத்தமிக்கவன் வல்லவன் இறைவன் ஒருவன் மட்டுமே என்பதற்காக அவரது Farewell Gift ஆக ஒரு உம்றாவுக்கான Ticket இனை வழங்கி கௌரவிக்கிறது எமது தாயகம் Assiraj. வல்லவன் இறைவன் அவரது சேவைகளை ஏற்றுக்கொண்டு அதற்கான கூலிகளை வழங்குவானாக.  இத்துனைக்கும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்த அவரது அன்புக்கணவர் Dr.Haleemdeen sir உட்பட அவரது குடும்பத்தினரது எதிர்கால, மறுமை வாழ்வுகளை வளமாக்கி வைப்பானாக. ஆமீன். 


Hashir Mahroof

Faculty Of Engineering,

University of Moratuwa.

No comments

Powered by Blogger.